Tagசென்னை புத்தகக் காட்சி

இந்த வருடம் இரண்டு புத்தகங்கள்

2023 ஆம் ஆண்டுக்கென ஐந்து திட்டங்களை வகுத்திருந்தேன். மார்ச் தொடங்கி அக்டோபருக்குள் நிறைவு செய்துவிட வசதியாக அன்றாடம் என்னென்ன / எவ்வளவு எழுத வேண்டும், எப்போது என்னென்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் மிகவும் கவனமாகக் கணக்கிட்டு திட்ட கமிஷன் துணைத் தலைவரைப் போலச் செயல்பட்டேன். இயல்பாகவே ரிஷப ராசி என்பதனாலா, சனிதசை கேது புக்தி என்கிற தனிச் சிறப்புக் காரணத்தாலா என்று தெரியவில்லை. நான் போட்ட ஐந்து...

கணை ஏவு காலம் – புத்தக முகப்பு

கணை ஏவு காலம் புத்தகமாக வெளிவருகிறது. தொடராக வெளியிட்ட இந்து தமிழ் திசையே புத்தகத்தையும் வெளியிடுகிறது. ஜனவரி 3ம் தேதி தொடங்கவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் இந்நூல் வெளியாகும். விலை ரூ. 230. நூலின் அட்டைப்படத்தினை இன்று இந்து தமிழ் திசையின் ஆசிரியர் கே. அசோகன் வெளியிட்டார். இன்றுவரை கனவாகவே தொடர்ந்துகொண்டிருக்கும் சுதந்தர பாலஸ்தீன் என்கிற கருத்தாக்கம் தெள்ளத் தெளிவாக வெளிப்படும் விதத்தில்...

உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?

நண்பர் மனுஷ்யபுத்திரனின் 50வது கவிதைத் தொகுப்பு ‘உன்னை யாரும் அணைத்துக்கொள்ளவில்லையா?’ சென்னை புத்தகக் காட்சி 2024 இல் வெளியாகிறது. மனுஷுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மனுஷ்யபுத்திரனைத் திட்டுவது, இழிவு செய்வதாக எண்ணிக்கொண்டு அவர் எழுதுபவை கவிதையே இல்லை என்பது, அவரைக் குறித்துத் தப்பித்தவறி நல்ல விதமாக இரண்டு வரி யாராவது எழுதிவிட்டால், கர்ம சிரத்தையாக அங்கே சென்று காறித் துப்புவது போல ஒரு...

12+1 = 1

நீங்கள் இலக்கியம் என்று சொல்லுங்கள். இல்லை என்று மறுத்துப் பேசுங்கள். கவிதை என்று சொல்லுங்கள். சொற்குப்பை என்று தூக்கிக் கடாசுங்கள். வெறும் புலம்பல் என்று சான்றளியுங்கள். காவியச் சுவை கொண்ட கவிதைகள் என்று சிலிர்த்துக்கொள்ளுங்கள். எல்லாம் உங்கள் இஷ்டம். ஆனால் ஒன்றை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும். இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு வந்த தலைமுறைக்குத் (வாசிக்காதவர்களையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.)...

ஒரு A1B Positive சரித்திரம்

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மத்தியில் முதல் முதலில் தொலைக்காட்சித் தொடருக்கு எழுத ஆரம்பித்தேன். இரண்டாயிரத்து இருபது வரை இடைவெளியின்றி எழுதிக்கொண்டிருந்தேன். கிழக்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மாலைப் பொழுதுகளுக்கு மட்டும் அந்த எழுத்து என்று இருந்தது. முழு நேரமான பின்பு இரவுகளில் மட்டும் இதர வேலைகளுக்கு வாய்ப்பு என்றானது. கசப்புக்கோ இனிப்புக்கோ அங்கே ஒன்றுமில்லை. அது ஒரு பணி. என் தனிப்பட்ட...

மறக்க முடியாத ஒரு புத்தகம்

நினைவு சரியென்றால் 1989லிருந்து சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். ஓராண்டு கூடத் தவறியதில்லை. அதற்கு முன்பும் சென்றிருப்பேன். அப்பாவோடு. அல்லது வேறு யாராவது அழைத்துச் சென்றிருந்தால் உடன் சென்றிருப்பேன். அது என் கடமை, என் தேவை, என் மகிழ்ச்சி, எனக்காக நான் செய்துகொள்வது என்று எண்ணிச் செய்யத் தொடங்கியது 1989லிருந்துதான். அன்று அண்ணாசாலை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி மைதானத்தில்...

இன்னும் ஒரு மாதம் இருக்கு.

சினிமாக்காரர்களுக்கு தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, சுதந்தர தினம், பிள்ளையார் சதுர்த்தி, விட்டால் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை. தமிழ் நாட்டிலே, எழுதி உயிர்த்திருக்கும் ஜீவாத்மாக்களுக்குப் புதுப் புத்தகம் என்றால் ஜனவரி புத்தகக் கண்காட்சி. பத்து நாள்கள் அல்லது கொசுறாக ஒன்றிரண்டு நாள்கள் சேர்த்து நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியை மனத்தில் வைத்துத்தான் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஆகஸ்டு...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!