நான் பயிலும் ஆன்மிகம் வேறு. அது மதத்தின் தொடர்பற்றது. அதாவது சொல்லி வைக்கப்பட்டதை அப்படியே நம்பி ஏற்காமல், எதையும் கேள்வி கேட்டு பதிலைத் தேடிப் பெறுகிற வழி.
என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.
என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே. அன்புள்ள பாரா, கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள். படிக்க நன்றாக இருக்கிறது. கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்: எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன் இருந்திருக்கிறான். ஸோ, பெரியாஷ்வாருக்கு...