நான் வசனம் எழுதியிருக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, எதிர்வரும் ஜூலை 16ம் தேதி [சனிக்கிழமை] மாலை 7 மணிக்கு எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. நண்பர்களை இவ்விழாவுக்கு அன்புடன் அழைக்கிறேன்.
தமிழில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவது இந்நாள்களில் எத்தனை சிரமமான செயல் என்பதை இந்தப் படம் எனக்குத் தெளிவாக எடுத்துக் காட்டியது. விதவிதமான கஷ்டங்கள், நெருக்கடிகளைச் சமாளித்து, தன் புன்னகையிலும் மென் சொற்களிலும் சற்றும் மாற்றம் காட்டாமல் இறுதிவரை உறுதியாக இருந்து, தான் நினைத்த வண்ணம் படத்தை உருவாக்கி முடித்த இயக்குநர் வடிவுடையானுடன் பழகக் கிடைத்த அனுபவம் எனக்கு மிகவும் முக்கியமானதாகவும் உபயோகமானதாகவும் இருந்தது.
முதல் பிரதி தயாராகிவிட்டது. திடீரென்று வரச்சொல்லி, ஒருநாள் போட்டுக்காட்டினார். எழுத்தில் நான் முதலில் பார்த்த படத்தைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பாக இருந்தது. அவர் கன்னியாகுமரிக்காரர். அப்படித்தான் அவரால் உருவாக்க முடியும். படத்தைக் குறித்து நான் வேறு என்ன எழுதினாலும் அதிகம் என்று தோன்றக்கூடும். எனவே தவிர்க்கிறேன். ரிலீஸின்போது நீங்கள் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். ஆடியோ ரிலீஸுக்குப் பின் சில நாள்களில் வெளியாகிவிடும்.
இந்தப் படத்தில் கரண், அஞ்சலி, கஞ்சா கருப்பு, சரவணன் உள்ளிட்ட கலைஞர்கள் பங்குபெற்றிருக்கிறார்கள். ஆஞ்சநேயலு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வித்தியாசாகர் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். அநேகமாக நாளை, இணைய ரசிகர்களுக்கு யூ ட்யூபில் பாடல் காட்சிகளின் டிரெய்லர் கிடைக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது படம் தொடர்பான வேறு சில காட்சிகள் இங்கே காணக்கிடைக்கின்றன.
ஜூலை 16 சனிக்கிழமை மாலை ஆல்பர்ட் திரையரங்குக்கு ரசிகர்களையும் வாசகர்களையும் நண்பர்களையும் மீண்டுமொருமுறை அன்புடன் அழைக்கிறேன். ‘என் பிரத்தியேக அழைப்பையும் உங்கள் வாசகர்களுக்கு மறக்காமல் சொல்லுங்கள்’ என்று இயக்குநர் போனில் சொன்னார்.
சொல்லிவிட்டேன். வந்துவிடுங்கள்.
O
* இயக்குநரைப் பற்றி நான் முன்னர் எழுதியது
வாழ்த்துகள்! படம் வெற்றிபெற்று மேலும் நல்ல வாய்ப்புகள் அமைய வாழ்த்துகள்!!
இமாலய வெற்றியடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
Para…I’m so happy for you. My best wishes, congrats and all the best.
Best Wishes and expect much more to come in queue in future..
My Best Wishes and Heartiest Congratulations! Still many more to come!
Bharati Mani
தலைவா,
ஆடியோ ரிலீஸுக்கு அழைப்பதெல்லாம் இருக்கட்டும்,
படத்துக்கு மட்டும் இலவச டிக்கெட் அரேன்ஜ் பண்ணிடுங்க.
அப்புறம் பாருங்க,
ஒவ்வொரு தியேட்டரிலும் உங்களுக்கு 100அடி கட்அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்து, ஆத்தாளுக்கு அலகு குத்தி அமர்களம் செய்திடுவோம்.
கிழக்கு வாசலிலும் ஒரு கடஅவுட் உறுதி.
Good Luck and best wishes.
anbudan
raju-dubai