Categoryசிறுகதை

பதினான்கு சொற்கள் (சிறுகதை)

அந்தப் பெண்ணை முதல் முதலில் பார்த்தபோது பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறவளாக இருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் இருபத்தைந்து வயது என்று சொன்னாள். அலுவலகத்தில் சில சிறிய, செப்பனிடும் பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. எளிய அலங்காரங்கள் கொஞ்சம். நண்பர் ஒருவர் அந்தப் பெண்ணின் எண்ணைக் கொடுத்துப் பேசச் சொன்னார். பகுதி நேரமாகத்தான் செய்வாள்; ஆனால், வேலை ஒழுங்காக இருக்கும் என்றார். அவள் நேரில் வந்தபோது...

பரிநிர்வாணம்

ஏதோ ஒன்று ஙவை உறுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெருங்கதை. அல்லது ஒரு சிறு சம்பவம். ஒரு குற்ற உணர்ச்சி. பழிவாங்கும் உணர்ச்சி. அல்லது நிராசை. ஏதோ ஒன்று. அந்தச் சிடுக்கு விலகிவிட்டால் அவன் நிம்மதியாக இறந்துவிடுவான் என்று எனக்கும் தோன்றியது. ஆனால் அது என்னவென்று எப்படி அறிய? அவன் பேச்சற்றுக் கிடந்தான். ஙவின் உறவினர்கள் படுக்கைக்கு அருகே வந்து நின்றுகொண்டு...

நூறு சீன்

அரசாங்கம் அனுமதி கொடுத்துவிட்டது என்று செய்தித் தாளில் போட்டிருந்தார்கள். அவனுக்கு அது ஆறுதலாக இருந்தது. இனி சிறிது சிறிதாகப் பிரச்னைகளில் இருந்து மீண்டுவிடலாம் என்று தோன்றியது. ஒருவேளை பிரச்னைகளில் இருந்து மீளக் கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் கவலைகளில் இருந்து விடுதலை கிடைத்துவிடும். இப்போதைக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் முட்டி மோதிப் பேருந்தில் இடம் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்திருந்தான்...

வாழும் கலை (சிறுகதை)

எப்படியும் வேலை போய்விடும் என்று எதிர்பார்த்தான். கொத்தாக இருபது இருபத்தைந்து பேரைத் தூக்கப் போகிறார்கள் என்று தகவல் பரவ ஆரம்பித்திருந்தது. நிர்வாகம் கூப்பிட்டுச் சொல்வதற்கு முன்னால் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. இன்னோர் இடத்துக்குப் போய் உட்காராமல் இருக்கப் போவதில்லை. ஆனாலும் இடைப்பட்ட நாள்கள் சிறிது சிரமமாகத்தான் இருக்கும். கையிருப்பு அதிகமில்லை. செலவே செய்ய முடியாது...

மாலுமி – முன்னுரை

கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஜனவரி மாதத்திலும் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளை எப்படியாவது எழுதிவிடுகிறேன். வருடம் முழுவதும் என்னென்னவோ எழுத வேண்டி இருக்கிறது. ஆயிரக்கணக்கான தொலைக்காட்சித் தொடர் காட்சிகளுக்கான வசனங்கள், நாவல் முயற்சிகள், பத்திரிகைத் தொடர்கள், கட்டுரைகள், சிறு குறிப்புகள் இன்னும் என்னென்னவோ. ஒரு சிறுகதை எழுதுவதற்கான மன ஒருங்கமைவும் நேரமும் பெரும்பாலும் கூடுவதில்லை. ஆனால் ஒரு நல்ல...

போண்டா திருடன் [சிறுகதை]

இந்தக் கூத்தைக் கேளுங்கள். கேளம்பாக்கம் மன்னார் கடையில் ஒரு நாள் தவறாமல் போண்டா திருடிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வந்து எல்லாரிடமும் காட்டிவிட்டுத் தானே தின்று தீர்க்கும் வெங்கடபதி ராஜு இன்றைக்கு ஒரு போலிஸ் ஆபீசராம். இரண்டு வருஷங்களுக்கு முன்பு அவனுக்கு முதலமைச்சர் ஏதோ சாதனைக்காக விருதெல்லாம் அளித்திருக்கிறார்களாம். இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? அவன் சர்வ நிச்சயமாக ஒரு...

ஒரு பிளேட் பிரும்மம்

ராமச்சந்திரனுக்கு என்னவோ ஆகிவிட்டதென்று சல்பேட்டா கோவிந்தன் பதைத்து வந்து சொன்னான். தொட்டித் தண்ணீரில், அளவு குறிக்கப்பட்ட கண்ணாடிக் குழாய்களை முக்கி, சளக், புளக் என்று ரகளை பண்ணிக்கொண்டிருந்த ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் விற்பன்னர்கள் கோஷ்டி, பரிசோதனையை விடுத்து, சல்பேட்டாவைச் சூழ்ந்தது.
சல்பேட்டா, சொல்லின் செல்வன். முதல் வரியில் விஷயத்தைச் சொன்னான்.
“ராமச்சந்திரனுக்கு போல்ட் கழண்டுவிட்டது.”

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி