அலகிலா விளையாட்டு, இலக்கியப்பீடம் இதழ் சார்பில் நடத்தப்பட்ட ஒரு போட்டியில் [2004] பரிசு வென்ற நாவல். அந்தப் பரிசை நிறுவியவர் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் அமரர் ஆர். சூடாமணி என்பதும், அப்போட்டிக்கு நான் எழுதியே ஆகவேண்டும் என்று என் நண்பர் நாகராஜகுமார் மிகவும் வற்புறுத்தியதுமே இதனை இவ்வடிவில் நான் எழுதக் காரணம். பரிசுக்குப் பிறகு இது இலக்கியப்பீடம் மாத இதழில் தொடராக வெளியாகி, இலக்கியப்பீடம்...
நீயெல்லாம் ஒரு இலக்கியவாதியா?
சில காலம் முன்னர் பத்ரி ஒருமுறை என்னிடம், ‘உங்கள் வலைப்பதிவின் சைட் பாரில் நானொரு இலக்கியவாதி இல்லை என்று கட்டம் கட்டிப் பெரிதாகப் போடுங்கள்’ என்று சீரியஸாகச் சொன்னார். செய்வதில் எனக்குப் பெரிய ஆட்சேபணை ஒன்றுமில்லை. அநாவசியமான சில விவாத விதண்டாவாதங்களைத் தவிர்க்கலாம் என்பதால்தான் செய்யவில்லை. எனக்கு இலக்கியம் பிடிக்கும். படைக்க அல்ல. படிக்க. அதுதான் என் எழுத்துக்கு வலு சேர்ப்பது. கொஞ்சகாலம்...