இன்றெல்லாம் ஏராளமான காதல் குறிப்புகள், கவிதைகள், நினைவுச் சிதறல்கள் என்று சமூக வெளி எங்கும் ஊதுபத்திப் புகை போலக் காதல் மிதந்து ஊர்ந்துகொண்டே இருந்தது. தனக்கு வரும் மர்மப் பரிசுகளை மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து புகைப்படங்களாகவும் குறிப்புகளாகவும் தெரியப்படுத்திக்கொண்டே இருந்தார். தனக்கு யாரும் முத்தம் தரப்போவதில்லை என்று நிச்சயமாகத் தெரிந்தபடியால் மைலாப்பூர் ஜன்னல் கடையில் உருளைக் கிழங்கு பஜ்ஜி...
தலைமுறை
அபார்ட்மெண்ட் செகரெட்டரி குமுறிக் கொட்டிக்கொண்டிருந்தார். இதென்ன நூறு பேர் குடியிருக்கும் இடமா இல்லை கூத்தடிக்கும் மடமா? உடனே ஒரு சனாதனவாதி மடங்களைக் கேலி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பொது ஒழுக்கத்துக்குக் கேடு விளைவிக்கும்படியாக ஏதாவது நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களைத் தனியே அழைத்து எச்சரித்தால் போதும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் சொன்னார். பொது வெளியில் தவறு நடந்தால் அதைப்...
புன்னகை
ஒவ்வொரு நாளும் உறங்கப் போகும்போது அவனை நினைத்துக்கொள்ளக்கூடாது என்றுதான் நினைப்பாள். ஆனால் அந்த நினைவின் தொடர்ச்சியாக அவன் முகம் மனத்தில் தோன்றிவிடும். பிறகு அவனது பேச்சு. செயல்பாடுகள். புன்னகை. எத்தனை எரிச்சலுடன் முகம் காட்டினாலும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும் எதிரே வந்து நின்று புன்னகை செய்வான். ‘என் விருப்பத்தை நான் சொல்லாமல் எனக்காக வேறு யார் உன்னிடம் சொல்வார்கள்?’ ‘ஆனால்...
ஒரு காதல் கதை (கதை)
வகுப்புகளில் அவளது மாஸ்கை அவன் நெடுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். ஒரு வெண்புறாவின் சிறகைப் போலிருந்தது அது. காதுகளின் விளிம்பில் இழுத்துப் பொருத்தும்போது மற்ற அத்தனைப் பேருக்கும் காது மடல்கள் சிறிது வளையும். அவளுக்கு மட்டும் எப்படியோ அப்படி ஆவதில்லை. மற்றவர்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது மாஸ்கின் நடுவே சிறு ஈரப் படலம் உண்டாகும். பார்க்கக் கொடூரமாக இருக்கும். அவளுக்கு அது இல்லை. அவள் தனது குரலை...
ராம் 2 (கதை)
நாம் காதலிக்கலாம் என்று முதலில் சொன்னது அவள்தான். நம் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று இரண்டு வருடங்களுக்குப் பிறகு சொன்னதும் அவள்தான். முதலாவதை மகிழ்ச்சியுடனும் அடுத்ததை வேறு வழியில்லாமலும் அவன் ஏற்றுக்கொண்டான். மனித வாழ்வில் இரண்டு வருடங்கள் என்பது பெரிய கால அளவு இல்லைதான். ஆனாலும் அவனுக்கு அந்த இரண்டு வருடங்களும் நினைவுகூரும் போதெல்லாம் திருப்தி தரத் தக்கதாகவே இருந்தது. காதலில் அர்த்தபூர்வமான...
ஒரு கொலைக் கதை (கதை)
குறுங்கதை தன் வளையை விட்டு வெளியே வந்தது. வெளி, இருளாகி இருந்தது. எங்கும் ஆள் நடமாட்டமில்லை. முன்பெல்லாம் வீட்டு வாசல்களில் அகல் விளக்கு வைத்திருப்பார்கள். மின் விளக்குகள் வந்தபின் வாசலில் ஒரு நாற்பது வாட் விளக்கெரியும். வீதி விளக்குக் கம்பங்கள் நடப்பட்ட பின்பு வீட்டு விளக்குகளை யாரும் போடுவதில்லை. உபரி மின்கட்டண சேமிப்பு நவீன வாழ்வில் இன்றியமையாத அம்சம். உபரி மின் சக்திச் சேமிப்பு, மின்சார...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 25
வேலை கிடைத்து, போய்க்கொண்டிருப்பதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு சுமார் ஆறு மாத காலம் கனிமரா மற்றும் தேவநேயப் பாவாணர் நூலகங்களில் வாழ்ந்துகொண்டிருந்தேன். காலைப் பொழுதுகளில் பத்திரிகை, சினிமா அலுவலகங்களுக்குச் சென்று வாய்ப்புத் தேடுவதும் பிற்பகல் இந்த நூலகங்களில் வந்து அமர்ந்து படிப்பதுமாக நாள்கள் கழிந்துகொண்டிருந்தன. கன்னிமரா நூலகத்தில் அப்போது அறிமுகமான சவரிமுத்து என்கிற ஒரு கடைநிலை ஊழியர் (இவரைக்...