பொதுவாக வெயிற்காலங்களில் என்னால் சரியாக எழுத முடியாமல் போகும். நான் ஒன்றும் நாளெல்லாம் வீதியில் திரிகிற உத்தியோகஸ்தன் இல்லைதான். ஆனாலும் வெக்கை நினைவில் நிறைந்துவிடுகிறபோது வெளியைக் காட்டிலும் இம்சிக்கும். இம்முறை வழக்கத்தைவிடக் கோடைக்காலம் கொடூரமாக இருக்கும் என்று இன்று மனத்தில் பட்டது. சகிக்க முடியாத சூடு. பத்து நிமிடம் வெளியே போய் வந்ததற்கே காது எரிந்தது. பாதங்கள் எரிந்தன. உச்சந்தலையில்...
பின் கதைச் சுருக்கம்
இந்தப் புத்தகத்தை நான் எழுதி இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் இன்றுவரை இதை என்னவாக வகைப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. சில கதைகளைப் பற்றிய கட்டுரைகள் என்று சொல்வது அநியாயமாக இருக்கும். ஒரு காலக்கட்டத்தில் நான் விரும்பி வாசித்துக்கொண்டிருந்த புத்தகங்களைப் பற்றி, வாசித்து முடித்த உடனேயே சில வரிகள் எழுதும் வழக்கம் இருந்தது. அதைச் சற்று விரித்து எழுதலாம் என்று யோசனை சொன்னவர் கல்கி...
புதிய கிண்டில் பதிப்புகள்
என்னுடைய நாவல்கள் அனைத்தும் இப்போது புதிய முகப்பு / மலிவு விலையில் கிண்டிலில் கிடைக்கின்றன. யதி, பூனைக்கதை நீங்கலாக மற்ற அனைத்தும் ரூ. 100க்கும் குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்; அப்படியே செய்திருக்கிறேன். வாங்குவோர் எண்ணிக்கை அதிகமானால் விலை இன்னமும் குறையும். அச்சுப் புத்தகங்களின் விலையேற்றம் வாசகர் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்துவரும் இக்காலத்தில் செலவு குறைந்த மின்நூல்...
மொஸார்ட் – கடவுள் இசைத்த குழந்தை
Prodigy என்ற பதின் பருவ வயதினருக்கான நூலாக்க முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது எழுதிய புத்தகம் இது. உலக இசை மேதைகள் ஒவ்வொருவரைக் குறித்தும் தனித்தனியே ஒரு சிறு நூலாவது கொண்டு வரவேண்டும் என்று விரும்பினேன். அளவில் சிறிதாக, அதிகம் குழப்பாத, புரிதல் பிரச்னைகள் எழாத வண்ணம் அந்நூல் அமைய வேண்டும் என்பது எண்ணம். ஒரு புத்தகத்தில் ஒரு மேதையின் இசையை உணரச் செய்வது சிரமம். ஆனால் குறிப்பிட்ட இசை மேதையின் வாழ்வு...
பால்ய கால சதி
இது என் பால்யம். எல்லாமே நடந்ததா என்றால், யாருக்காவது நிச்சயம் நடந்திருக்கும் என்பதே என் பதில். இந்தக் கதையில் நான் இருக்கிறேன். நிறையவே இருக்கிறேன். என் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். இன்றுவரை என்னோடு தொடர்பில் இருப்பவர்கள். எப்போதாவது நாங்கள் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் எண்ணிப் பார்த்துப் பேசிக்கொள்ள இந்தக் கதை இன்னமும் எதையோ ஒன்றைப் புதிதாக எடுத்துக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது...
154 கிலோபைட்
154 கிலோ பைட் – என்னுடைய முதல் கட்டுரைத் தொகுப்பு. 2002ல் வெளி வந்தது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறு பதிப்பாக மின் நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் பார்த்தவர்கள் / வாசித்தவர்கள் குறைவாகவே இருப்பார்கள். ஒரே ஒரு பதிப்பு மட்டும் வெளிவந்தது. அதிலும் பெரும்பாலான பிரதிகளைப் பதிப்பாளர் எடைக்குப் போட்டுவிட்டு கடையைக்...
அலை உறங்கும் கடல் – ஒரு கடிதம்
வணக்கம் பாரா சார். என் பெயர் ஆனந்த். என்னைப் பற்றிய பெரிய அறிமுகம் ஏதுமில்லை. தங்களை முகநூலில் தொடர்கிறேன். அலை உறங்கும் கடல் பற்றி நீங்கள் பதிவிட்டபோது நீலுப்பாட்டியை சந்திக்க ஆவல் கொண்டேன். ஆனால் வெகு விரைவில் மறந்தும் போனேன். கிண்டிலில் இன்று தமிழ்ப் புத்தகங்களைத் தேடிய போது, இந்தப் புத்தகம் வந்தது. உடனே வாங்கினேன். கடலுக்குள் மூழ்கிப்போக ஆரம்பித்தேன். செவியின் கூர்மையைப் பொறுத்த சங்கீதம் என்ற...
காந்தி சிலைக் கதைகள்
காந்தி சிலைக் கதைகள் மின் நூல் இன்று வெளியாகியிருக்கிறது. புத்தகம் இங்கே. குமுதம் ஜங்ஷனில் ஆசிரியராக இருந்தபோது அதில் எழுதிய கதைகள் இவை. பிறகு கிழக்கில் புத்தகமாக வெளிவந்தது. இப்போது கிண்டில் மின் நூலாக. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய கதைகள் இவை. இந்தக் கதைகள் அனைத்திலும் காந்தி இருக்கிறார். ஆனால் நேரடியாக அல்ல. படு தீவிர காந்தி மறுப்பாளருக்குள்ளும் அவரது கூறுகள் ஒன்றிரண்டாவது...
குற்றமும் மற்றதும்
குற்றவாளிகளைக் குறித்துப் பொதுவாக நம்மில் யாரும் சிந்திப்பதில்லை. ஒரு கிரிமினலை செய்தித்தாள் மூலம் அறிய நேர்ந்தால் ஒன்று, வெறுப்படைவோம். அல்லது, விறுவிறுப்பான செய்தியாக மட்டுமே உள்வாங்கி, படித்த மறுகணம் மறந்துவிடுவோம். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து ரயில் பயணங்களிலும் அலுவலக இடைவேளைகளிலும் எப்போதாவது விவாதம் நடக்கும். குற்றம் செய்தது யாராவது அந்தஸ்துள்ள பெரிய மனிதர் எனக் கண்டால் ஒருவேளை...
கிண்டில் குழப்பங்கள்
கிண்டில் குறித்தும் அதில் மின் நூல்களை வாங்கிப் படிப்பது குறித்தும் நான் எப்போது எழுதினாலும் குறைந்தது பத்து சந்தேகங்கள் நண்பர்களிடம் இருந்து வருகின்றன. என்னால் முடிந்தவரை அவற்றை இங்கு தீர்க்கப் பார்க்கிறேன்.