கோயில்கள், மடங்கள் போன்ற இடங்களின் ஆகப் பெரிய பயனாக நான் கருதுவது, அன்னதானம். தமிழ்நாட்டு அரசு பொறுப்பேற்று, அறநிலையத்துறையின் மேற்பார்வையில் இயங்கும் கோயில்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ததற்கு முன்பிருந்தே அவ்வறப்பணி பல கோயில்களில் நடந்து வந்தன. தினமும் இல்லாவிட்டாலும் விசேட தினங்களில் அன்னதானம் இருக்கும். பசித்திருப்பவர்கள் எங்கெங்கிருந்தோ வந்து உணவருந்திப் புதிதாகப் பிறந்து செல்வதைக் காண...
பைந்நாகப் பாய்
ஒரு செங்கல் அளவு பெரிதான நோக்கியா, அதில் பாதி அளவுள்ள ஒரு விண்டோஸ் போனுக்குப் பிறகு ஐபோன் 3ஜி வாங்கினேன். கடந்த பதிமூன்று ஆண்டு காலமாகப் பல்வேறு ஐபோன்களைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறேன். அதன் எளிமை, சொகுசு, நூதனங்களின் ரசிகனாக இருந்திருக்கிறேன். இன்றுவரை அதில் மாற்றமில்லை என்றாலும் இன்று ஐபோனுக்கு விடை கொடுத்துவிட்டு ஆண்டிராய்ட் போனுக்கு மாறினேன். காரணம் இது: என் ஐபோன் 14 இல் பேட்டரி பிரச்னை...