Tagஅப்பா

படித்துக் கிழித்த புத்தகம்

ஆயிரம் புத்தகங்கள் படித்திருப்பேன். ஆனால் படித்துக் கிழித்த புத்தகம் என்றால் அது லிஃப்கோ டிக்‌ஷனரிதான். பள்ளியில் நான் கற்காத ஆங்கிலத்தை வீட்டில் எனக்கு அப்பா சொல்லிக் கொடுத்தார். கைல எப்பவும் டிக்‌ஷனரி வெச்சிக்கோ என்பார். அவருக்கு ஆசிரியராக இருந்த யாரோ ஒருவர் என்ன கேட்டாலும் refer to the dictionary and come to my room என்று சொல்வாராம். பையன்கள் அதை வைத்துக்கொண்டு அவரை எப்படியெல்லாம்...

எடுத்ததும் வைத்ததும்

மண் சட்டியில் இருந்த நெருப்புத் துண்டுகளை எடுத்து அப்பாவின் நெஞ்சில் வைக்கச் சொன்னார்கள். மின் மயானமானாலும் சடங்குகளை விட்டுவிடுவதற்கில்லை. அவருக்கு அது சுடப் போவதில்லை என்று தெரியும். இருந்தாலும் கஷ்டமாக இருந்தது. வாழ்நாளில் எவ்வளவு முறை அவருக்கு அப்படிப்பட்ட சூட்டைத் தந்திருப்பேன் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றியது. இருக்கும். எப்படியும் ஏழெட்டு முறை. அப்பா கோபித்துக்கொண்டதில்லை...

விபூதி யோகம்

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்துக்கு அடிக்கடிச் செல்வேன். காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது வழக்கமாகியிருந்தது. அப்போது கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். வாரம் ஐந்து நாள்கள் வேலை. சனி ஞாயிறு விடுமுறை. வெள்ளிக்கிழமை மாலை ரயில் ஏறினால் சனிக்கிழமை காலை பதினொன்றரைக்கு ராமேஸ்வரம் சென்று சேர்ந்துவிடலாம். ஞாயிறு மாலை வரை அங்கு இருந்துவிட்டுக் கிளம்பினால் திங்கள் முதல் மீண்டும்...

ஆசி

சிறிய அளவிலாவது ஒரு பெரிய காரியத்தைச் செய்து முடித்ததும் வைத்து வணங்க இரு பாதங்கள் கிடைக்காதா என்று மனம் தேடத் தொடங்கும். பாதங்களுக்குப் பஞ்சமில்லை. பொருத்தப்பாடு ஒன்று இருக்கிறது. அப்பா இருந்தவரை எனக்குப் பிரச்னை இருந்ததில்லை. இதைச் செய்திருக்கிறேன் அப்பா என்று தகவலாகச் சொல்லும்போதே என் மானசீகத்தில் காலடி தென்பட்டுவிடும். உடனே அவர் படிக்கத் தயாராகிவிடுவார். முடித்துவிட்டு...

பச்சை வார் வைத்த ஒரு செங்கல் நிறப் பை (கதை)

இறப்பதற்கு அரை மணி நேரம் முன்பிருந்தே அப்பா ‘பை.. பை..’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். சொல்லிக்கொண்டு விடைபெறும் அளவுக்கு காலமறிந்தவர் என்று நாங்கள் கருதவில்லை. அதனால் நினைவு தவறி ஏதோ உளறுகிறார் என்று நினைத்தோம். அம்மா, ‘அந்தப் பையைக் கொண்டு வந்து அவர் கையிலே குடுடா’ என்று சொன்னாள். அப்போதுதான் அவர் தனது கைப்பையைக் கேட்டிருக்கிறார் என்று புரிந்தது. அப்பாவின் கைப்பைக்குக்...

ஒரே ஒரு அறிவுரை

எலும்புகளை ஒரு சட்டியில் போட்டு வைத்திருந்தார்கள். அவை சூடாக இருந்தன. எட்டு மணி நேரத்துக்கு முன்பு வரை அப்பாவாக இருந்து, பிறகு பிரேதமாகி, இப்போது ஒரு சிறு மண் சட்டிக்குள் அவர் எலும்புத் துண்டுகளாக இருந்தார். சாம்பல் குவியலில் இருந்து பொறுக்கியெடுத்தவர் கைகள் சுட்டிருக்கும். காரியம் முடியவே ஆறு மணிக்குமேல் ஆகிவிட்டபடியால் உடனடியாக இடத்தைக் காலி பண்ணவேண்டியிருந்தது. சுடுகாட்டு ஊழியர்களுக்கும் வீடு...

பாரதியாருக்கு பக்கோடா வாங்கித் தந்தவர்

என் அம்மா வழி தாத்தாவின் பெயர் ராமசாமி. அவரது பெற்றோர், முன்னோர், சொந்த ஊர், சகோதர சகோதரிகள் குறித்த எந்த விவரமும் எனக்குத் தெரியாது. நானறிந்த தாத்தா, சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் உள்ள நாற்பதாம் எண் வீட்டின் வாசலில் மாலை ஆறு மணிக்குப் பிறகு எப்போதும் மரத்தாலான ஒரு பெரிய ஈசி சேரைப் போட்டு அதில் சாய்ந்து அமர்ந்து ரேடியோ கேட்டுக்கொண்டிருப்பார். எப்போதாவது விடுமுறை தினங்களில் தாத்தா...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me