* இன்று காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்தே திமுக பெற்று வந்த முன்னணி நிலவரங்கள், பொதுவில் நிலவிய அதிருப்தி மனநிலைக்கு எதிரான முடிவு வரப்போகிறது என்பதைச் சுட்டிக்காட்டியது. * நாற்பது தொகுதிகளுக்கும் முடிவுகள் வந்துவிட்ட நிலையில் திமுக (18) கூட்டணி 28 இடங்களையும் அதிமுக(9) கூட்டணி பன்னிரண்டு இடங்களையும் பெற்றிருக்கின்றன. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற அபார வெற்றியுடன் இதனை ஒப்பிட...
தேர்தல் 2009 – என்ன சொல்கிறது?
* தேர்தல் முடிவுகள் பெரிய அதிர்ச்சிகளைத் தராமல் வந்துகொண்டிருக்கின்றன. * மத்தியில் ஆளும் காங்கிரஸ் திரும்பவும் ஆட்சியமைப்பது அநேகமாக உறுதியாகியிருக்கிறது. மீண்டும் மன்மோகன் சிங்கின் பெயரால் சோனியா ஆள்வார். *எதிர்பார்த்ததற்கு மாறாகத் தமிழகத்தில் திமுக கூட்டணி கணிசமான இடங்களில் முன்னணியில் இருக்கிறது. எதிர்பார்த்தபடியே அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில் மூச்சு விட்டுக்கொள்கிறது. * ஈழப் பிரச்னையோ...
இந்தியத் தேர்தல் 2009 – Live
நண்பர்களுக்கு வணக்கம். பொதுவாக எனக்கு ஒரு ராசி உண்டு. புத்தகக் கண்காட்சி, லோக்சபா தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஏதாவது வெளியூர் நிகழ்ச்சி என்று லைவ் அப்டேட் செய்யலாம் என்று உத்தேசித்தால், விட்டேனா பார் என்று எப்போதும் விதி விளையாடும். உடம்புக்கு முடியாமல் போகும், கை கால் உடையும், ஜுரம் வரும், வேறு ஏதாவது வேலைகள் வரும், அட ஒன்றுமில்லையென்றால் இணையத் தொடர்பாவது இல்லாமல் போகும். எனவேதான் இன்றைய...
போட்டாச்சு.
இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி, சரியாக நாற்பது நிமிடங்கள் கழித்து என்னுடைய வாக்கைப் பதிவு செய்தேன். எப்போதும் வாக்குச்சாவடியில் முதல் பத்து வாக்காளர்களுள் ஒருவனாக இருப்பதே என் வழக்கம். இம்முறை கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பி குரோம்பேட்டை சென்று வாக்களிக்க வேண்டியிருந்ததால் தாமதமாகிவிட்டது. நான் குரோம்பேட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் நுழையும்போதே நல்ல கூட்டம் இருந்தது. பொதுவாக...
ஒரு முக்கியமான புத்தகம்
அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றிருக்கும் பராக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறினூடாக அமெரிக்கக் கருப்பர் இன சரிதம். தகவல் துல்லியம், சுருக்கம், தெளிவு. மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதியிருக்கிறார் ஆர். முத்துக்குமார். அமெரிக்கத் தேர்தல் முறை பற்றி தமிழக வாசகர்களுக்கு இருக்கக்கூடிய குழப்பங்கள் இந்தப் புத்தகத்தினால் தீரும். டிசம்பர் 6, 2008 அன்று இந்நூல் மதுரை புத்தகக் கண்காட்சியில்...
உனக்கு இருபது, எனக்குப் பதினெட்டு
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததைப் போலவே வந்துகொண்டிருக்கிறது. ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ), தான் முன்பு பெற்றிருந்த இடங்களில் மூன்றில் இரு பங்கினைக் காட்டிலும் அதிகம் இழந்துள்ளது. முஷரஃப் சந்தேகத்துக்கு இடமின்றி இனி வீட்டுக்குப் போகவேண்டியதுதான். அதே சமயம் மறைந்த பேனசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் சரி, நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)கும் சரி...
அடுத்தது யார்?
அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. சாத்திரங்கள் பிணம் தின்ன எட்டு ஆண்டுகள் ஆண்டு முடித்துவிட்டு ஜார்ஜ் புஷ் விடைபெறும் தருணம். அடுத்தது எந்தக் கட்சி? ஆளப்போவது யார்? திருவிழாவை எதிர்கொள்ள அமெரிக்காவும் உலகமும் தயாராகிவிட்டது. அடுத்த வாய்ப்பு குடியரசுக் கட்சிக்கு அமைவது கஷ்டம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. எட்டாண்டு அனுபவம் போதும் என்றே அமெரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள்...