தனது முதல் சிறுகதையை எழுதி, ஒரு போட்டிக்கு அனுப்பிப் பரிசு பெற்ற ஒரு சகோதரி சில நாள்களுக்கு முன்னர் சந்திக்க வந்திருந்தார். திட்டங்களிலோ, மொழியிலோ, வெளிப்பாட்டிலோ அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஓரளவு வாசிப்பு இருந்தது. தொடர்ந்து படித்துக்கொண்டும் இருந்தார். இருப்பினும் எழுதுவதில் சிறு தயக்கம் இருப்பதாகச் சொன்னார். படித்துவிட்டு யார் என்ன சொல்வார்களோ என்கிற அச்சம் இருந்தது புரிந்தது...
கபடவேடதாரி – விமரிசனப் போட்டி FAQ
1. எங்கே படிப்பது? bynge appல் வாசிக்கலாம். வாரம்தோறும் இரண்டு அத்தியாயங்கள். புதன் மற்றும் சனிக் கிழமைகளில் வெளியாகும். 2. appஐ எங்கே பெறுவது? இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது. இலவசமாகத் தரவிறக்கலாம். கூகுள் அல்லது ஃபேஸ்புக் ஐடியின் மூலம் லாகின் செய்தால் போதுமானது. விரைவில் iOSக்கும் வந்துவிடும். (தொடர் முடிவடைவதற்குள்ளாகவாவது.) 3. விமரிசனம் எழுதும் போட்டி குறித்து? 50 முதல் 200 சொற்கள் வரை...
சினிமா பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள்
தீவிரவாதத்தைவிட பயங்கரமானது ஏதாவது இருக்குமானால், அது சித்தாந்த நம்பிக்கைவாதிகளின் சினிமா விமரிசனங்கள்தான் என்று தோன்றுகிறது. முதல் நாளே பார்த்திருக்கவேண்டிய ராதாமோகனின் ‘பயணம்’ படத்தை ஒருவாரம் தள்ளி பார்க்கவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. இடைப்பட்ட தினங்களில் ஹரன் பிரசன்னாவும் மருதனும் இந்தப் படத்துக்கு எழுதிய விமரிசனங்களைப் படிக்க நேர்ந்ததால், படம் பார்க்கும் ஆவல் சற்று வடிந்திருந்தது என்பது...
நான் கடவுள்
தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஆன்மிகம், சரியாகப் புரிந்துகொள்ளப்படும் தீவிரவாதத்தைக் காட்டிலும் அபாயகரமானது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். வியப்பும் ஏமாற்றமும் ஒருங்கே தோன்றியது. வியப்பு, அவரது செய்நேர்த்தி பற்றியது. படத்தின் ஒரு ஃப்ரேமைக் கூட அலங்கரிக்காமல் விடவில்லை. ஒரு கதாபாத்திரம் கூட வெறுமனே வந்துபோகவில்லை. ஒரு காட்சிகூட வீணாக்கப்படவில்லை. ஒரு துண்டு வசனம் கூட, அது...
சுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு
அந்த இளைஞரை நான் வெகு காலமாக கவனித்து வந்தேன். திறமை முழுவதையும் ஏன் இப்படி நூறு சதவீதம் வீணாக்கிக்கொண்டிருக்கிறார் என்று எப்போதும் தோன்றும். ஒரு கட்டத்தில் அவர் போலி குழுமத்தில் ஒருவர் என்று யாரோ சொன்னார்கள். சே என்று வெறுத்துப்போய் கொஞ்சகாலம் அவரது வலைப்பதிவைப் படிக்காமல் இருந்தேன். [ஆனால் போலி டோண்டு வலைப்பதிவை மட்டும் தவறவிடமாட்டேன்.] பாலபாரதி என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் தவறாமல்...
குசேலன்
இந்தப் படத்தில் ஒரே ஒரு ஷாட்டை நான் மிகவும் ரசித்தேன். சலூன் வைத்திருக்கும் ஹீரோவான பசுபதி, கட்டிங் – ஷேவிங்குக்கு அதிரடி விலைக்குறைப்பு செய்து ஒரு போர்ட் எழுதி வைப்பார்.
கடைசி வரியாக ‘கண்டிப்பாக அக்குள் ஷேவிங் கிடையாது’ என்றிருக்கும்.
துரதிருஷ்டவசமாக பி.வாசு இப்படம் முழுதும் அதைத்தான் செய்திருக்கிறார்.
* நான் ரசித்த நாகராஜனின் விமரிசனம் இங்கே.
சுப்ரமணியபுரம் – நிறைவேறிய கனவு!
[கிழக்கு பதிப்பகத்தின் சீனியர் துணையாசிரியர்களுள் ஒருவனும் என் நண்பனுமான ச.ந. கண்ணன், தன்னை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பாதிக்கும் படங்களைக் குறித்துத் தனது நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலில் ஒரு கட்டுரை எழுதி அனுப்புவான். நேற்று சுப்பிரமணியபுரம் பார்த்துவிட்டு அவன் அனுப்பிய மடல் இது. கருத்தளவில் எனக்கும் இதில் உடன்பாடென்பதால் தனியே நான் ஒன்று எழுதவிருந்ததைத் தவிர்த்துவிட்டு, அவனது கட்டுரையை...
தசாவதாரம் குருவி-2
உங்களில் எத்தனை பேர் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த குருவி படத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. கமல்ஹாசனின் தசாவதாரம் தொடக்கம் முதலே எனக்கு ஏனோ குருவியை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. அதில் விஜய் சிங்கப்பூரிலிருந்து ஒரு வைரக்கல்லைத் தூக்கிக்கொண்டும் பிறகு துரத்திக்கொண்டும் இந்தியா வருகிறார். இதில் கமல் அமெரிக்காவிலிருந்து ஆந்திராக்ஸ் போன்ற ஏதோ ஒரு நாசகார ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டும்...