சாப்பிடுகிற விஷயத்திலும், அதைப் பற்றி எழுதுகிற விஷயத்திலும் எனக்கு எத்தனைக் கொலைவெறி ஆர்வம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். பத்திரிகைகளில் நான் இதுநாள் வரை எழுதிய அத்தனை தொடர்களிலும் பார்க்க, எனக்கு மிகவும் பிடித்தமானது உணவின் வரலாறுதான். ரசித்து ரசித்துத் தகவல் திரட்டி, ருசித்து ருசித்து எழுதிய தொடர் அது.
இன்றும் கடிதம் எழுதும், போன் செய்து பேசும் பெரும்பாலான வாசகர்கள் ‘உ’வைக் குறிப்பிடாமல் இருப்பதில்லை. அதை ஏன் அத்தனை சீக்கிரம் முடித்தீர்கள் என்று பலபேர் அப்போது கேட்டார்கள். எல்லாம் நல்லதற்குத்தான் என்று இப்போது தோன்றுகிறது.
திரும்பவும் விதவிதமான உணவு வகைகளைக் குறித்து சிந்திக்கவும் வாசிக்கவும் யோசிக்கவும் ருசிக்கவும் ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது.
நாளை (சனிக்கிழமை) முதல் வாரம்தோறும் இரவு 8.30க்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ என்னும் நிகழ்ச்சியைப் பாருங்கள்.
தொலைக்காட்சி ஊடகம் எனக்குப் புதிதல்ல என்றாலும் இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு எழுதியதில்லை, பங்குபெற்றதுமில்லை. கதையல்லாத ஒரு தொலைக்காட்சித் தொடரில் நான் பங்குபெறுவது இதுவே முதல்முறை. ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’- என்னுடைய ஸ்கிரிப்டில் நாளை முதல், வாரம் தோறும் ஒளிபரப்பாகிறது.
ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8.30க்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அதே நிகழ்ச்சி, மறுநாள் ஞாயிறு காலை 8.30க்கு மறு ஒளிபரப்பாகும்.
நாளைய நிகழ்ச்சிக்கு இன்று டிரெய்லர் ஓட ஆரம்பித்துவிட்டது. பார்த்துவிட்டு உங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லுங்கள்.
பி.கு:- நான் புதிய தலைமுறை உள்பட எந்த சானலிலும் பணியில் சேரவில்லை. இந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு ஆலோசகராகப் பொறுப்பேற்று, ஸ்கிரிப்ட் எழுதுவதுடன் சரி.
வாரத்துக்கு ஒரு அப்பளம் மாதிரி கொலைவெறி தாக்குதல் இருக்காதே ?
பி.கு:- கலக்கல்! எங்கே பா.ரா வின் பஞ்ச் காணவில்லை என நினைத்தேன்!
வா(ழ்)த்துகள்!
பா ரா சார்.. அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறேன்.. இடலிக்கு விளம்பரம் வருது.. இனி இந்த நிகழ்ச்சி ஹிட்டு தான்…வாழ்த்துக்கள்…
இட்லிக்கு மட்டும் தான் விளம்பரமா?
ஓ.. இட்லி தான் வெளியே வந்தாச்சே.
வடை இன்னும் அங்கேயே தானே! :)))
வாவ் சார்.. என் ஃபேவரைட்.. உணவின் வரலாறு…!!! ஸ்கீரீன் மீடியாவில் காண்பதற்கு ஆவலாக உள்ளேன்.. வாழ்த்துக்கள்…