விரைவில் மிகப்பெரிய வெற்றியடையவிருக்கும்போது வெளிவரவிருக்கும் எனது ‘அன்சைஸ்’ புத்தகத்துக்குப் பேயோன் எழுதியிருக்கும் முன்னுரை பின்வருமாறு:- வாசக வாசகியரே, இந்நூலைப் படிக்குமுன் உங்கள் புன்னகை மீசைகளை முறுக்கி விட்டுக்கொள்ளுங்கள். பின்னால் வருத்தப்படாதீர்கள். பா. ராகவனின் இந்தப் புத்தகத்தை முதலிலிருந்து கடைசி வரை படித்த நேரமனைத்தும் ஒரு மெல்லிய புன்னகை எனது இதழ்களிரண்டிலும் ஒரு சராசரி எட்டு மாதக்...
மறுபதிப்புக்கான மறுஅறிவிப்பு
என்னால் எழுதப்பட்டதான ‘தாலிபன்’ மறுபதிப்புப் பணிகள் முடிவடைந்து இன்று புத்தகம் கைக்குக் கிடைத்தது. பார்க்க மிக லட்சணமாக இருக்கும் இந்நூல் படிக்கவும் அருமையாகவே இருக்குமென்பதைச் சொல்லத் தேவையில்லை. சந்தேகமிருப்பின் முன்னதான பதிப்புகளில் பாய்ந்து பாய்ந்து வாங்கி வாசித்த நல்லவர்களிடம் விசாரித்துக்கொள்ளலாம். இந்தப் புதிய பதிப்பில் புத்தகமானது 256 பக்கங்கள் உள்ளதாக இருக்கிறது. விலையோவெனில் வெறும் 160...
மலிவு விலையில் மாயவலை
சில காலமாகப் பதிப்பில் இல்லாமல் இருந்த என்னுடைய பல புத்தகங்கள் இப்போது மதி நிலையம் வாயிலாக மறு பதிப்பு காண்கின்றன.
பாகிஸ்தான் அரசியல் வரலாறு, தாலிபன், யானி, உணவின் வரலாறு, கொலம்பிய போதை மாஃபியா [என்பெயர் எஸ்கோபர்] ஆகியவை இப்போது வெளியாகியிருக்கின்றன. 9/11: சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சியும் மாயவலையும் அடுத்தபடியாக வெளிவரவிருக்கின்றன.
பாபர் நாமா
முகலாய மன்னர் பாபரின் நினைவுத் தொகுப்பு நூலான பாபர் நாமா தமிழில் வெளியாகியிருக்கிறது. இதன் ஆங்கில வழித் தமிழாக்கத்தைச் செய்திருப்பவர் என்னுடைய தந்தை.
சயந்தனின் ஆறா வடு வெளியீட்டு விழா
தமிழினி வெளியீடாக, சயந்தனின் ஆறாவடு நாவல் சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளிவருகிறது. கன்னிமரா நூலக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் இதன் வெளியீட்டு விழா 3.1.2012 செவ்வாய்க்கிழமை மாலை 4.30க்கு நடைபெறுகிறது.
ராஜேந்திர சோழன் தலைமையில் விருபா குமரேசன் நூலை வெளியிட, சோமிதரன் முதல் பிரதி பெற்று உரையாற்றுகிறார்.
புத்தாண்டைப் புத்தக நிகழ்ச்சியுடன் தொடங்குவதே மங்களகரமானது.
குற்றியலுலகம்
ட்விட்டராகப்பட்டது, கிபி 2006ம் வருடம் மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு, 2008ம் வருடம் மே மாதம் 25ம் நாள் முதலாக என்னால் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு சமூக இணையத்தளம். என்ன வேண்டுமானாலும் எழுதலாம்; ஆனால் 140 கேரக்டர்களுக்குள் முடியவேண்டுமென்கிற இதன் கொள்ளளவு சார்ந்த சவால் என்னை இதன்பால் ஈர்த்தது. ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை இந்தப் பக்கம் நான் போகாமலிருந்த தினமென்று ஒன்றில்லை.
எனது பர்மா குறிப்புகள்
சமீபத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம், செ. முஹம்மது யூனுஸ் என்பவரின் நினைவுக் குறிப்புகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் ‘எனது பர்மா குறிப்புகள்’. பொதுவாக இம்மாதிரியான தலைப்புகள் உள்ள புத்தகங்களை நான் எடுக்கமாட்டேன். என்ன காரணம் என்று தெரியாது. என் பல புத்தகத் தேர்வுகளைத் தலைப்புகள் தீர்மானித்து வந்திருக்கின்றன. இதன் காரணம் பற்றியே ஜேஜே சில குறிப்புகளை, அதைப் பார்த்த நாள் தொடங்கிப் பலகாலம்...
புவியில் ஒருவர்
புவியிலோரிடம், 1998-99 ஆண்டில் நான் எழுதிய நாவல். 2000ம் ஆண்டு இது வெளியானது. இதற்குமேல் இந்த நாவலைப் பற்றிச் சொல்லப் பிரமாதமாக ஒன்றுமில்லை. வெளிவந்த வேகத்தில் விற்றுத் தீர்ந்தது என்று சொல்ல ஆசைதான். ஆனால் வெளிவந்த வேகத்தில் காணாமல் போனது என்றுதான் சொல்லமுடியும். என் கணிப்பில் சுமார் 75 முதல் 100 பேர் இதை வாங்கியிருக்கலாம், படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இட ஒதுக்கீடு பிரச்னையை முன்வைத்து...