ஆர்குட்டில் எனக்கொரு வாசகர் குழுமம் தொடங்கப்பட்டிருப்பதை நேற்று கண்டேன். பொதுவாக எனக்கு ஆர்குட் என்றால் அலர்ஜி. முன்பொரு சமயம் நண்பர்கள் அறிமுகப்படுத்தியபோது உள்ளே சென்று பார்த்திருக்கிறேன். பெரிதாக ஆர்வம் கவரவில்லை. வெளியேறி விட்டேன். பின்பு என்னுடைய ஜிமெயில் முகவரி களவு போன சமயம், ஒரு போலி ஆர்குட் முகவரியை நான் க்ளிக் செய்து உள்ளே சென்று கடவுச்சொல் கொடுத்ததுதான் காரணம் என்று நண்பர் இட்லிவடை...
Technically Yours
சமீபத்தில் ஒருநாள் ஏதோ ஒரு வேகம் வந்து, என் லேப்டாப்பில் போட்டோ ஷாப் மென்பொருளை இன்ஸ்டால் செய்து, உடனடியாக என் அலுவலகத் தோழி வைதேகியை அழைத்து அதன் அடிப்படைகளைச் சொல்லித்தரச் சொல்லி ஒரு சில மணிநேரங்கள் கற்றுக்கொண்டு, கச்சாமுச்சாவென்று ஒருவாரத்தில் ஏகப்பட்ட போட்டோ ஷாப் உருவங்களை உருவாக்கிப் பார்த்தேன். பத்ரி, இட்லிவடை, மருதன் போன்ற நண்பர்கள் என் ஆர்வத்துக்கு மனமுவந்து தமது வலைப்பதிவுகளையே...
எனக்கு இங்கே வயது எட்டு
சமீபத்தில் ஒருநாள் என் பழைய குப்பைகளைக் குடைந்துகொண்டிருந்தபோது ஆதி ராயர் காப்பி க்ளப்புக்கு நான் எழுதி அனுப்பிய சில குறுங்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் அகப்பட்டன. பரபரவென்று யோசித்துப் பார்த்தால் நான் இணையத்துக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிகின்றன. இடையே சில வருடங்கள் எழுதாமல் இருந்திருக்கிறேன். பல மாதங்கள் படிக்காமலேயேகூட இருந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள், ஏராளமான அனுபவங்கள், சந்தோஷங்கள்...