ஹிஸ்புல்லாவின் மூத்த கமாண்டர்களுள் ஒருவரான இமத் ஃபாயஸ் மக்னியா கடந்த 12ம் தேதி சிரியாவில் ஒரு கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். நேற்றைக்கு நடந்த அவரது இறுதிச் சடங்கு சமயம், ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஸன் நஸரல்லா இஸ்ரேலுடனான முழுநீள யுத்தத்தை அறிவித்திருக்கிறார். இஸ்ரேலிய ராணுவமும் காவல் துறையும் உளவு அமைப்பும் தமக்குள் அவசர நிலை பிரகடனப்படுத்திக்கொண்டு தீவிர யுத்த ஏற்பாடுகளில் இறங்கியிருக்கின்றன...
உடலுக்கு மரியாதை
குறிப்பிட்ட காரணம் ஏதுமில்லை. 2007 ஜூலை இறுதியில் திடீரென்று ஒருநாள் நாம் இத்தனை குண்டாக இருக்கவே கூடாது என்று தோன்றியது. மிகச் சிறு வயதிலிருந்தே உடல் ஆரோக்கியம் தொடர்பான எவ்வித முயற்சிகளையும் மேற்கொண்டதில்லை. ஓடுவது, விளையாடுவது, குதிப்பது, குஸ்தி போடுவது, கொழுப்புச் சத்து மிக்க உணவுப்பொருள்களை உட்கொள்ளாமல் இருப்பது என்பதிலெல்லாம் கவனம் சென்றதில்லை. வெந்ததைத் தின்று விதிப்படி இயங்கிக்கொண்டிருந்த...
தில்லி உலகப் புத்தகக் கண்காட்சி 2008
பன்னிரண்டு ஹால்கள். இரண்டாயிரம் நிறுவனங்கள். இருபது தேசங்கள். பிரகதி மைதான், புதுதில்லி. சர்வதேச புத்தகக் கண்காட்சி பத்து நாள்கள் நடந்து, இம்மாதம் பத்தாம் தேதி முடிவடைந்தது. அடிக்கிற குளிர்க்காற்றுக்குத் தொட்டுக்கொள்ள கோன் ஐஸுடன் ஸ்வெட்டர் அணிந்த தில்லி பெண்கள் அழகழகாக அங்குமிங்கும் அலைந்துகொண்டிருக்க, குண்டு வால்யூம் என்சைக்ளோபீடியா, டிக்ஷனரிகளுடன் விற்பனைப் பிரதிநிதிகள் வழியெல்லாம் இடைமறித்து...
அடுத்தது யார்?
அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. சாத்திரங்கள் பிணம் தின்ன எட்டு ஆண்டுகள் ஆண்டு முடித்துவிட்டு ஜார்ஜ் புஷ் விடைபெறும் தருணம். அடுத்தது எந்தக் கட்சி? ஆளப்போவது யார்? திருவிழாவை எதிர்கொள்ள அமெரிக்காவும் உலகமும் தயாராகிவிட்டது. அடுத்த வாய்ப்பு குடியரசுக் கட்சிக்கு அமைவது கஷ்டம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. எட்டாண்டு அனுபவம் போதும் என்றே அமெரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள்...