பிரபாகரன் வாழ்வும் மரணமும் ஒலிப் புத்தகம் வெளியாகியிருக்கிறது. ஸ்டோரி டெல் இதனை வெளியிட்டிருக்கிறது. ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு வந்தபோது சென்னை புத்தகக் காட்சியில் போஸ்டர் கூடாது; விளம்பரம் கூடாது என்று தொடங்கி, அரங்கில் வைக்கவே கூடாது என்றெல்லாம் கடைக்கு வந்து கட்டளை போட்டார்கள். அனைத்தையும் மீறி எவ்வளவோ பதிப்புகள் வரத்தான் செய்தன. கடந்த வாரம்கூட ஜீரோ...
மூத்த அகதி
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கை குறித்து நிறைய படிக்கிறோம்; கேள்விப்படுகிறோம். சில பலருடன் பழகவும் செய்கிறோம். என்றாவது அந்த வாழ்க்கையை, அதன் சிரமங்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறோமா? குடியுரிமை பெற்று இன்னொரு தேசத்தில் வாழ்வது வேறு. அகதி வாழ்க்கை என்பது வேறு. அதிலும், நகரில் வாழும் அகதிகளின் வாழ்வும் முகாம்களில் வாழ்வோரின் வாழ்வும் வேறு. வாசு முருகவேலின் ‘மூத்த...
விபூதி யோகம்
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்துக்கு அடிக்கடிச் செல்வேன். காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது வழக்கமாகியிருந்தது. அப்போது கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். வாரம் ஐந்து நாள்கள் வேலை. சனி ஞாயிறு விடுமுறை. வெள்ளிக்கிழமை மாலை ரயில் ஏறினால் சனிக்கிழமை காலை பதினொன்றரைக்கு ராமேஸ்வரம் சென்று சேர்ந்துவிடலாம். ஞாயிறு மாலை வரை அங்கு இருந்துவிட்டுக் கிளம்பினால் திங்கள் முதல் மீண்டும்...
இரண்டு முக்கிய அறிவிப்புகள்
1. நானும் நீங்களும் கற்பனை செய்யமுடியாத, எமது மனங்கள் ஒப்புக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வு நடந்தேறி விட்டது. எமது தலைவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என்பதனை நான் இங்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கின்றேன்.
– செல்வராஜா பத்மநாதன், GTVயில். [ஏன் தமிழ்நெட்டில் அறிவிக்கவில்லை என்று தெரியவில்லை]
2. பழ. நெடுமாறன் அறிக்கை.
இது அபத்த அரசியல்களின் நேரம்.
முடிந்தது யுத்தம்; அடுத்தது என்ன?
மெஜாரிடி – மைனாரிடி, சிங்களர் – தமிழர் வேறுபாடு இனி இல்லை. தேசப்பற்றாளர்கள் – தேசத்துரோகிகள். தீர்ந்தது விஷயம். தமிழர்கள் இனி நிம்மதியாக வாழலாம். அச்சமில்லாமல் வாழலாம். அவர்களது சகவாழ்வுக்கு நான் பொறுப்பு. கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்ஷே ஆற்றிய உரையில் குறிப்பிட்டது இது. இலங்கை சுதந்தரம் அடைந்த நாளாக (அப்போது மாண்புமிகு அதிபருக்கு மூன்று...
முடிந்தது
பிரபாகரனையும் தனி ஈழம் என்னும் கனவையும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டார்கள். இதன்மூலம் 1983ம் ஆண்டு முதல் இடைவிடாது நடந்துவந்த இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் இறுதியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கு இதனைக் காட்டிலும் மாபெரும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் இன்னொன்று இருக்கப்போவதில்லை. ஓயாத யுத்தமும் தீராத ரத்தமுமாக வருடங்கள்...
கண்ணீரும் புன்னகையும்
இன்றைக்கு மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி அல்லது தமிழக முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார். ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக இங்கிருந்து வேறென்ன செய்ய முடியும்? மேடைப்பேச்சு, அறிக்கைப் புரட்சி, டிவி பேட்டிக்கு அடுத்தபடி இது. எனவே இன்று பஸ்கள் ஓடாது. கடைகள் இருக்காது. கலைஞர் டிவியில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும். ஈழத்தில் போர் நின்றுவிடும். இதைவிட...
ஜோக்கர்
மனித வாழ்வின் மாபெரும் அவலங்கள் எவையென்று யோசித்துப் பட்டியலிட்டால், ஒரு பெரிய ஆகிருதியின் பிம்பம் உடைந்து சிதறுவது அதில் அவசியம் இடம் பிடிக்கும். தமது அறுபதாண்டுகளுக்கு மேற்பட்ட பொதுவாழ்வில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இத்தனை நொறுங்கி, மலினப்பட்டு, ஒரு பிரம்மாண்டமான கேலிச்சித்திரமாகிப் போன தருணம் இன்னொன்றில்லை. நேற்றைக்கு போரஸ் மன்னனாகக் காட்சியளித்த பிரபாகரன் இன்றைக்கு நல்ல நண்பராக அவருக்குக்...