Categoryஎழுத்து

இனிய புத்தாண்டும் சில இம்சை அரசர்களும்

ஜனவரி 4ம்தேதி [நாளை]  இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. புத்தாண்டைப் புத்தகங்களுடன் ஆரம்பிக்க விரும்புகிறவர்கள், சேத்துப்பட்டு செயிண்ட் ஜான்ஸ் பள்ளிக்கூட மைதானத்துக்கு வந்துவிடுங்கள். தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பெல்லாம் ஒரு பண்டிகையா? இதுதான். இதுமட்டும்தான். ஒரு காலத்தில், தமிழர்கள் புத்தகம் வாங்குவதே இல்லை; ஆயிரம் காப்பி விற்றால் அமோகம் என்று சில பழம்பெரிசுகள் எப்பப்பார்...

நீயெல்லாம் ஒரு இலக்கியவாதியா?

சில காலம் முன்னர் பத்ரி ஒருமுறை என்னிடம், ‘உங்கள் வலைப்பதிவின் சைட் பாரில்  நானொரு இலக்கியவாதி இல்லை என்று  கட்டம் கட்டிப் பெரிதாகப் போடுங்கள்’ என்று சீரியஸாகச் சொன்னார். செய்வதில் எனக்குப் பெரிய ஆட்சேபணை ஒன்றுமில்லை. அநாவசியமான சில விவாத விதண்டாவாதங்களைத் தவிர்க்கலாம் என்பதால்தான் செய்யவில்லை. எனக்கு இலக்கியம் பிடிக்கும். படைக்க அல்ல. படிக்க. அதுதான் என் எழுத்துக்கு வலு சேர்ப்பது. கொஞ்சகாலம்...

நான் எப்படி எழுதுகிறேன்?

நிறைய எழுதுகிறீர்கள். எப்படி நேரம் கிடைக்கிறது என்று அநேகமாக தினசரி யாராவது ஒருவராவது கேட்டுவிடுகிறார். ஒரு பண்பலை வானொலி நிருபர் சற்றுமுன் தொலைபேசியில் அழைத்துச் சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். அவரும் கடைசியில் மறக்காமல் இதே கேள்வியைத்தான் கேட்டார். எனக்கு இந்த ‘நேரம் கிடைப்பது’ என்கிற விஷயம் உண்மையிலேயே புரியவில்லை. ராக்கெட் விட்டுக்கொண்டிருப்பவர்களெல்லாம் எண்டர் தட்டிக் கவிதை எழுத...

இன்னும் ஒரு மாதம் இருக்கு.

சினிமாக்காரர்களுக்கு தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, சுதந்தர தினம், பிள்ளையார் சதுர்த்தி, விட்டால் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை. தமிழ் நாட்டிலே, எழுதி உயிர்த்திருக்கும் ஜீவாத்மாக்களுக்குப் புதுப் புத்தகம் என்றால் ஜனவரி புத்தகக் கண்காட்சி. பத்து நாள்கள் அல்லது கொசுறாக ஒன்றிரண்டு நாள்கள் சேர்த்து நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியை மனத்தில் வைத்துத்தான் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஆகஸ்டு...

மலர்களே மலர்களே

தீபாவளி மலர்களை ஒரு காலத்தில் வெறித்தனமாக நேசித்திருக்கிறேன். புதுத்துணியோ பட்சணங்களோ, பாப்பையாக்களின் பட்டிமன்றங்களோ, புதுரிலீஸ் படங்களோ அல்ல. கல்கி, அமுதசுரபி, கலைமகள், ஓம் சக்தி, குண்டூசி, விஜயபாரதம் தீபாவளி மலர்களுக்காகவே தீபாவளியை விரும்பக்கூடியவனாக இருந்தேன். ஒவ்வொரு மலரையும் எடுத்து வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாகத் தடவித் தடவி கடைசிப்பக்கம் வரை முதலில் ஒரு புரட்டு. அதிலேயே சுமார் இரண்டொரு...

உற்றார்

பூமியாகப்பட்டது, தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வந்தபோது, மீனாட்சி மாமியின் எண்பது வயதுக் கணவருக்குப் பக்கவாதம் வந்தது. அதே பூமி சூரியனையும் சுற்றி வந்தபோது மீனாட்சி மாமிக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து உடம்புக்கு முடியாமல் போய் ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்டார். காலனி முழுக்க அதுதான் பேச்சு. ஐயோ பாவம் மாமி. படுக்கையை விட்டு எழமுடியாத கணவரை நினைத்தபடியே ஆஸ்பத்திரியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருப்பார்...

ரஜினி ரசிகன்:சில குறிப்புகள்

[சற்று முன்னதாகவே இங்கு வெளியிட்டிருக்க வேண்டும். தாமதத்துக்குக் காரணம் மடினிப் பழுது.] அயோத்தி தீர்ப்பு. காமன்வெல்த் குளறுபடிகள். தஞ்சை கோயிலின் ஆயிரமாவது பர்த் டே. தடியூன்றும் வயதிலும் இளவரசராகவே இருக்கும் சார்லஸ் வந்தது. கொடநாட்டு தேவதை குடியிருப்புக் கேந்திரங்களுக்கு இறங்கிவந்து போராடத் தொடங்கியது. மதராசில் மழை. ஈக்வடாரில் புரட்சி. பர்வேஸ் முஷரஃபின் புதுக்கட்சி – எதையாவது தங்கத்...

ஆவணி அவஸ்தைகள்

பாவப்பட்ட ஆனி, ஆடி மாதங்கள் முடிந்து, தாவணிகளுக்கு ப்ரமோஷன் கொடுக்கும் ஆவணிக்காலம் பிறந்தது முதல், நாளொரு கல்யாணம், பொழுதொரு ரிசப்ஷன். கல்யாண வயசில் எனக்கு இத்தனைபேர் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதே இப்போதுதான் தெரியவருகிறது. கடந்த பத்துப் பதினைந்து நாள்களுக்கு மேலாக அதிதீவிரத் திருமணத் தாக்குதல்களால் என் அன்றாட நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்குமுன் இப்படி தினமொரு...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter