மூன்று வருடங்கள்

இன்று காலை உலவியைத் திறந்தவுடன் ட்விட்டரில் ஒரு செய்தி வந்திருந்தது. நான் அங்கு எழுதத் தொடங்கி இன்றோடு மூன்று வருடங்கள் நிறைகின்றன என்பதே அது. மகிழ ஒன்றுமில்லை என்றாலும் கிட்டத்தட்ட தினசரி நான் பயன்படுத்தியிருக்கிறேன். செய்திகள், தகவல்கள், வெண்பாம்கள், சிந்தனைகள், நகைச்சுவை, உரையாடல், விவாதம், விதண்டாவாதம், இலக்கியம், சினிமா, வெட்டிப்பேச்சு அனைத்துக்கும் அந்த இடம் எனக்கு சௌகரியமாக இருந்து வந்திருக்கிறது.

பலமுறை இனி இது வேண்டாம் என்று நினைத்தும், விடமுடியவில்லை. ஏனெனில் கோடி கொடுத்தாலும் கிடைக்காத பல அருமையான நட்புகளை அங்கே நான் சம்பாதித்திருக்கிறேன். எழுத்தைக் காட்டிலும் எனக்கு அதுதான் பெரிது.

இந்த மூன்றாண்டு காலத்தில் நான் எழுதியவை சுமார் ஆறாயிரம் ட்வீட்கள். அவற்றை இன்று மாலை திரும்ப ஒருமுறை வேகமாகப் புரட்டிப் பார்த்தேன். பெரும்பாலும் தகவல் பகிர்வுக்காகவே நான் இதைப் பயன்படுத்தி வந்திருப்பது தெரிந்தது. இருப்பினும் ஒரு சில ட்வீட்கள் ரசமாகவே இருந்தன. அவற்றுள் சில காலம் கடக்கும் என்றும் தோன்றியது. புரட்டிக்கொண்டோடிய வேகத்தில் எனக்குப் பிடித்த என்னுடைய சில ட்வீட்களை மட்டும் தனியே சேகரித்துத் தொகுத்துப் பார்த்ததில் 119 வந்தன. ஒழுங்காக உட்கார்ந்து தேர்வு செய்தால் இன்னும்கூட அகப்படலாம். அல்லது இதிலேயே சிலது நீக்கப்படலாம்.

என்னவானாலும் இவை என்னுடையவை. எனக்குப் பிடித்தவை. ஒருவேளை உங்களுக்கும் பிடிக்கலாம். இந்தக் குற்றியலுலகக் குறிப்புகளின் தொகுப்பை என் ட்விட்டர் நண்பர்கள் டைனோபாய், இலவசக் கொத்தனார், பெனாத்தல் சுரேஷ் மூவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.

119 Tweets

Share

15 comments

  • என்னுடன் நீங்கள் பேசிய எதுவும் உருப்படியான ட்விட் இல்லை என்று நினைக்கும் .. எ.கொ.இ.ச என்று தோன்றுகிறது.

  • ! காலம் தான் எத்தனை வேகமாய் கடந்துச் செல்கிறது! 119ம் முத்துகள் அப்படின்னு சொல்லிட முடியாது இங்கு எண்ணிக்கை ஒரு எல்லையாக இருந்ததால், இன்னும் பல முத்துகள் பரிதவிக்கவிடப்பட்டிருக்கின்றன என்பதை கூறுவதை ஒரு கடமையாக நினைக்கின்றேன்! 🙂

  • நாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே ‘நாம் ‘ ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் ‘நாம்’ ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் –

    ஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.

    chennai.iac@gmail.com
    iacchennai.org

    சென்னை வடக்கு :9841429930, 9444020744, 9444321222

    சென்னை தெற்கு :9940066327 , 9176657632 , 9843677487, 790909123
    9710201043

    சென்னை மேற்கு : 9884269094 , 9941292846, 9444961168

    சென்னை கிழக்கு : 9382193943, 9840852132, 9600041079

    பகத்சிங்

  • அனைத்தும் அருமை..
    மிகவும் மெனக்கெட்டிருக்கிறீர்கள்.
    நன்றி நண்பரே!

    இதேபோல நீங்கள் மிகவும் ரசித்த (மற்றவர் ட்வீட்ஸ்)
    ஒரு 108 வெளியிட்டால் நன்றாக இருக்கும்

    அதேபோல இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் அவர்கள் ரசித்த
    உங்கள் ட்வீட் ஒன்றினை இங்கு இடலாம்!

    வாழ்க

  • முதல் ட்வீட் அவருக்கானது என்றவுடன் பாய்ந்தோடி வந்துவிட்டார் பாருங்கள் ஆயில்யன்!

    42-ம் ட்வீட் – ஜெலூசில் காரணமா?! 😉

  • 7 வது டிவிட் தனிமனித தாக்குதல். உடனே அதனை நீக்கவும்!!!

  • 34, 36, 52 61 94 – விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன. #106 – சான்சே இல்லை. மொழியின் சாத்தியப்பாடுகளை வைத்து என்னமாய் விளையாடுகிறீர்கள்!

  • மாயவரத்தான்: 42 – என்னுடைய ஒரு ட்வீட்டை அவர்கள் பிரசுரித்ததற்கு எனது எதிர்வினையாக எழுதியது அது.

  • பிரசன்னா, உங்களை ஒருபோதும் என்னால் ஒரு தனிமனிதராக நினைத்துப் பார்க்க முடிந்ததில்லை. வினவு, தமிழ் ஹிந்துபோல் ஒரு குழுமம் மாதிரிதான் எனக்குத் தென்படுகிறீர்கள்.

  • பாரா, இதுக்கு அந்த டிவிட்டே பெட்டெர்.

  • // உங்களை ஒருபோதும் என்னால் ஒரு தனிமனிதராக நினைத்துப் பார்க்க முடிந்ததில்லை. வினவு, தமிழ் ஹிந்துபோல் ஒரு குழுமம் மாதிரிதான் எனக்குத் தென்படுகிறீர்கள்.//

    ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா..

    ஆனாலும் எனக்கென்னவோ அவரை நீங்கள் அல்கொய்தா ரேஞ்சுக்காவது நினைத்துப் பார்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது!

  • Mr Raghavan
    Read all your 119 tweets. Never have I laughed like this before. I must thank you. I don’t know which ones I liked – there were so many. Many made me sit up and notice. What is so ordinary in the normal sense, you make them thought-provoking or laughable, at times through twist of some words. If I comment on each one of them, this post will become too long. Suffice it to say, they are excellent! Of course, some couldn’t be understood by me – the fault must lie with me. I’m not updated with certain news. ‘Neenga room pottu yojanai panreengala’ to coin such tweets, so hilariously? Sorry I couldn’t find equivalent English words to convey the beautiful Tamil expression – Tamil is so unique, isn’t it? Best regards to you.

  • என்னோடு பணிபுரியும் திருச்சியை சேர்ந்த நண்பர் சொன்னது இது … மரியம் பிச்சைக்கு 12 மனைவியர் என்று. என்னால் நம்ப முடியவில்லை. உங்களுக்கு எப்படி தெரியும் ? என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், மரியம்பிட்சையின் ஏதோ ஒரு மனைவிக்கு பிறந்தவர் இவரோடு படித்தார் என்று. வினவு (vinavu) படியுங்கள் உங்களுக்கு புரியும்.

    http://www.vinavu.com/2011/05/28/rowdy-mariam-pichai/

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!