என்னுடைய மற்றும் பலருடைய புத்தகங்களை வெளியிட்டு வரும் மதி நிலையம் ஒருவழியாகத் தனக்கொரு இணையத்தளத்தைத் தொடங்கியிருக்கிறது. தளத்தை இங்கே சென்று பார்க்கலாம். ஆனால் இத்தளத்தில் இப்போது காசு கொடுத்து நேரடியாகப் புத்தகங்களை வாங்கும் வசதி இல்லை. ஏனென்று தெரியவில்லை. வேண்டிய புத்தகத்தைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்தால் கூரியர் அல்லது புறா மூலம் புத்தகத்தை அனுப்பிவைத்துவிடுவோம் என்று...
நற்செய்தி அறிவிப்பு
இணையப் பத்திரிகைகள், ஃபேஸ்புக், கூகுள் பிளஸ் போன்ற பொது வெளிகள் எதிலும் நான் பலகாலமாக எழுதாமலே இருந்து வருகிறேன். விட்டகுறையாக ட்விட்டரில் மட்டும் சமீப மாதங்கள் வரை எழுதி வந்தேன். இப்போது அதுவும் இல்லை. கடந்து சென்ற அக்டோபர் 24, விஜயதசமி தினம் தொடங்கி எனக்கான பிரத்தியேகக் குறுவரிப் பலகையை இத்தளத்துக்குள்ளேயே உருவாக்கிக்கொண்டு அங்குதான் எழுதி வருகிறேன். இனி எழுதலாம் என நினைப்பவற்றையும் இங்கும்...
சிலேட்டுமப் படலம்
இன்று தொடங்கி எனது இத்தளத்தில் ‘ஸ்லேட்’ என்னும் புதிய சந்து திறக்கப்படுகிறது. இதுநாள் வரை ட்விட்டரில் நான் செய்துவந்தவற்றை இனி இங்கே செய்ய உத்தேசம். ஒரு புத்தகமாகத் தொகுக்கலாம் என்று நினைத்தால்கூட ட்விட்டரில் தேடித்தொகுப்பது பெரும்பாடாயிருக்கிறது. எழுதுபவை அனாமத்தாக வீணாவது பொறுக்கவில்லை. எனவே வாசகர்கள் / நண்பர்கள் இப்பக்கத்திலேயே என் ட்வீட்களுக்கு பதிலளிக்கலாம். விவாதிக்கலாம். அங்கு செய்யும்...
கோன் ஐஸ் பூதம்
பத்திரிகைகளுக்கு எழுதி வெகுகாலம் ஆகிவிட்டது. அதுவும் குழந்தைகளுக்குக் கடைசியாக எழுதி ஐந்தாறு வருடங்கள் தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். கடைசியாக கோகுலத்தில்தான் ஒரு தொடர் எழுதினேன். புதையல் தீவு.
பெரிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் கோகுலத்தில் ஒரு சிறுவர் தொடர்கதை ஆரம்பிக்கிறேன். கோன் ஐஸ் பூதம் குறித்து இம்மாத கோகுலத்தில் வெளிவந்திருக்கும் அறிவிப்பு கீழே. அடுத்த இதழில் கதை ஆரம்பமாகிறது.
உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக
வாசக நண்பர்களுக்குத் தமிழ் புத்தாண்டு தின அட்வான்ஸ் வாழ்த்துகள். நாளை மதியம் 1.30 மணிக்கு ஜெயா டிவியில் சிறப்புத் திரைப்படமாக நான் வசனம் எழுதிய தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஒளிபரப்பாகிறது. Ofcourse, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக. கரண், அஞ்சலி, பாலா சிங், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் நடித்திருக்கிறார்கள். பாடல்கள் வைரமுத்து, இசை வித்யாசாகர். இயக்கம் வி.சி. வடிவுடையான். இப்படம் வெளியானபோது...
ரைட்டர்தமிழ்பாராபேப்பர்டாட்நெட்காம்
சில தொழில்நுட்பக் காரணங்களால் இன்று இத்தளம் செயல்படுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தளம் இயங்காது போயிருந்தால்கூடப் பரவாயில்லை. தமிழ்பேப்பர் தளத்துக்குப் போக முயற்சி செய்தவர்களுக்கு உரல் இங்கே ஃபார்வட் ஆகியிருக்கிறது. இயங்காத இத்தளத்துக்கு அந்தத் தளத்தின் உரல் எப்படி அழைத்துச் செல்கிறது, ஏன் அழைத்துச் செல்கிறது என்று கேட்டு காலை முதல் ஏகப்பட்ட விசாரிப்புகள். ரைட்டர்பாராடாட்காம்...
மீள்வணக்கம்
நண்பர்களுக்கு வணக்கம். கொஞ்சகாலமாக இந்தப் பக்கம் வர இயலாமல் போனதற்கு என் பணியின் தன்மை காரணம். நேரத்தைத் துரத்தவேண்டிய நிர்ப்பந்தம். இணையத்திலிருந்துதான் விலகியிருந்தேனே தவிர, எழுத்திலிருந்தல்ல. இனி அவ்வப்போது வர இயலும் என்று நினைக்கிறேன். அதே வேலைப்பளுதான்; ஆயினும் இனி சற்றே ஒழுங்கு கடைப்பிடிக்க முடியுமென்று நினைக்கிறேன். பழகிவிட்டால் சிரமமானவை எல்லாம்கூட சிரமமென்பது மறந்துவிடுகிறது.
அதிமுக்கிய அறிவிப்பு
என்னுடைய புதிய புத்தகம் ‘குற்றியலுலகம்’ இன்று அச்சாகி வந்துவிட்டது. சென்னை புத்தகக் கண்காட்சியில் மதி நிலையம் அரங்கில் (இடப்புறமிருந்து முதல் வரிசை – கடை எண் 18-19) இது விற்பனைக்குக் கிடைக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் நான் ட்விட்டரில் எழுதியவற்றுள் எனக்குப் பிடித்த ட்வீட்களை இதில் தொகுத்திருக்கிறேன். இனி இது ஒரு மாதத்தில் ஒன்பது லட்சம் பிரதிகள் விற்க வேண்டிய பொறுப்பு வாசகர்களாகிய உங்களைச்...