Categoryபுத்தகக் காட்சி 2010

எது? ஏன்? எதனால்?

கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னென்ன புத்தகங்கள் நிறைய விற்கின்றன, மக்கள் எவற்றின் அடிப்படையில் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வாங்கும் விதத்தில் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றனவா என்பதை தினசரி சில மணி நேரங்கள் கவனித்து வந்தேன். எல்லா அரங்குகளிலும் நின்று பார்ப்பது எனக்கு சாத்தியமில்லை. கவனிக்கவேண்டும் என்று நான்...

அபூர்வ சகோதரர்கள்

மேலே உள்ள படத்தில் இருப்பவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள். இவர்கள் சொந்தச் சகோதரர்கள் அல்லர். ஆனாலும் இருவர் தோற்றத்திலும் உள்ள ஒற்றுமைகள் வியப்பூட்டக்கூடியவை.
இரு முகங்களிலும் குறைந்தபட்சம் 6 ஒற்றுமைகள் உள்ளன. பொழுதுபோகாதபோது கண்டுபிடிக்கலாம். கூடவே இருவரும் யாரென்றும் சொல்லலாம்.

கமல் அல்ல, முகில்.

இன்றைக்குச் சொல்லி மாளாத கூட்டம். எல்லா அரங்குகளிலும் நிற்க இடமில்லாத அளவுக்கு. பில் போட்டவர்கள் மிகவும் பாவம். கிழக்கில் பிரசன்னா, விஸ்வா, மணிகண்டன் எல்லோரும் பிசாசாகவே மாறியிருந்ததைக் கண்டேன். ராத்திரி அவர்களுக்கு நல்ல உறக்கம் அமையவேண்டும். கிழக்கு அரங்கில் இன்றைக்கு இரண்டு விசேஷங்கள். முதலாவது, ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் நூலின் ஆசிரியர் கே. ரகோத்தமன் வருகை தந்தது. எந்த ஒரு...

சென்னை சோதிடக் கண்காட்சி

பொதுவாக வாரப்பத்திரிகைகளில் வேலை பார்த்தவர்களுக்குப் பல விஷயங்களின்மீது நம்பிக்கை போய்விடும். சோதிடம் அவற்றுள் ஒன்று. மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற பிரபல சோதிடர்கள் எவ்வாறு வாரபலன் கணிக்கிறார்கள், ஆண்டு, மாத, குரு, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்ப் பெயர்ச்சிப் பலன்களை எழுதுகிறார்கள் என்று மிக நெருக்கமாகப் பார்த்து அறிகிற வாய்ப்பு அளிக்கும் ஞானம் அது. ஆனால் ஒரு கலையாக சோதிடத்தைப்...

ரகோத்தமனைச் சந்தியுங்கள்!

கிழக்கு பதிப்பகம் இந்தப் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டிருக்கும் ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் நூல் மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறது. அரங்குக்குள் நுழையும் ஒவ்வொரு வாசகரும் திரும்பிச் செல்லும்போது இந்த நூலை வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது. பத்திரிகைகள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் வட்டத்திலும் இந்நூல் மட்டுமே இன்றைக்குப் பேசப்படும் விஷயமாகி உள்ளது. பரபரப்பு அம்சம் தாண்டி, ஒரு...

உட்கார்ந்து பேசலாம், வருக.

புத்தகக் கண்காட்சியில் என்னைச் சந்திக்க விரும்பி வருகிற நண்பர்கள் சிலர், கிழக்கில் விசாரித்தேன்; உங்கள் போன் நம்பர் கிடைக்கவில்லை, நீங்கள் கிழக்கில் இல்லை, எங்கு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை, சந்திக்க முடியவில்லை என்று மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். இதற்கு என்ன செய்யலாம் என்று தெரியவில்லை. நான் ஓரிடத்தில் அமரக்கூடியவன் அல்லன். குறிப்பாகக் கண்காட்சியில். ஆனால் கால் வலித்தால் எங்கு வேண்டுமானாலும்...

சில புகைப்படங்கள்

இன்று எடுத்த படங்கள் சில கீழே. பத்திரிகைத் தொடர் அத்தியாயங்கள் எழுதவேண்டியிருப்பதால் இங்கே இப்போது எழுத முடியாத சூழல். முடிந்தால் இன்றைய அனுபவங்களை நாளைக் காலை எழுதப் பார்க்கிறேன்.       ஒரே ஒரு அவசரக் குறிப்பு: உ.வே. சாமிநாதய்யர் நூலகத்தினர் முதல் முறையாக இவ்வாண்டு கண்காட்சியில் ஒரு சிறு கடையைப் போட்டிருக்கிறார்கள். ஐயரின் என் சரித்திரமும் (விலை ரூ. 300) அவருடைய உரைநடை நூல்களின்...

இன்று வாங்கிய புத்தகங்கள்

இன்றைக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியின் நியாயமான முதல் நாள். மழை, டிராஃபிக் ஜாம், பேரணி, அரசியல்வாதிகள் போன்ற எந்தப் பிரச்னையும் இல்லாத வேலைநாள். மதியம் இரண்டு மணிக்குக் கண்காட்சி தொடங்கியது. பிரமாதமான கூட்டம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் முதல் நாளுக்கே உரிய நியாயமான நல்ல கூட்டம். நெரிசலற்ற தினம் என்பதால் இன்றைக்குப் பணி ரீதியில் அல்லாமல் என் சொந்த விருப்பத்துக்காகச் சுற்றுவது என்று முடிவு...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter