விருதகிரியைவிடக் கொடுமையான ஒரு விஷயம் உலகில் உண்டு. புத்தம்புதிதாக ஒருத்தரைக் கண்டுபிடித்து, ஒரு சப்ஜெக்ட் தீர்மானித்து, அவரை ஓர் உருப்படியான புத்தகம் எழுத வைப்பது. ஒவ்வொரு வருடமும் குறைந்தது பதினைந்து முதல் இருபது பேரிடமாவது நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன். என்னைத் தோற்கடிப்பதில் அளப்பரிய ஆர்வம் கொண்ட நல்லன்பர்கள், சொல்லி சொல்லி அழவைத்து பதில் விளையாட்டு விளையாடுவார்கள். நானும்...
கொடியில் ஏந்திய குழந்தை
இந்த வருடம் என்னை செமத்தியாக பெண்டு நிமிர்த்திய புத்தகம், ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு. பொதுவாக எத்தனை பெரிய புத்தகமாக இருந்தாலும் எடிட்டிங்கில் என்னிடம் இரண்டு மூன்று நாள்களுக்குமேல் நிற்காது. இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு என்னை இழுத்துக்கொண்டுவிட, வழக்கமான காரியங்கள் பலவற்றை இதனால் நிறுத்திவைக்க வேண்டியதானது. [இதற்கு முன்னால் அதிகநாள் எடிட் செய்த புத்தகம் அநீயின்...
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்
ஜனவரி 4, 2011 அன்று தொடங்கவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியின் அரங்க வடிவமைப்பு வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. F 13,14,15 ஆகியவை கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடை எண்கள். கீழே வரைபடம் உள்ளது. வேறு சில முக்கியமான பதிப்பு நிறுவனங்களின் கடைகள் உள்ள இடங்களும் அதில் சுட்டப்பட்டிருக்கின்றன. வாசகர்களை சென்னை புத்தகக் கண்காட்சிக்குக் கிழக்கு சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.
முகங்களின் பிறப்பிடம்
ஒரு புத்தகத்தை மக்கள் கையில் எடுப்பதற்குக் காரணமாக இருப்பவர்கள் அதன் வடிவமைப்பாளர்கள். எழுதியவர் யார், வாங்க வேண்டுமா வேண்டாமா, நன்றாயிருக்கிறதா இல்லையா, தேவையா தண்டமா போன்றவையெல்லாம் பிறகு வருகிற விஷயங்கள். முதலில் கையில் எடுக்க வேண்டும். அல்லது, என்னை எடு, எடு என்று அது சுண்டி இழுக்க வேண்டும். புரட்டு, புரட்டு என்று ஆர்வத்தைத் தூண்டவேண்டும். விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. சில புகழ் பெற்ற...
உருவி எடுத்த கதை
இசகுபிசகாக புத்தி கெட்டிருந்த ஒரு சமயத்தில் ஒரு பிரம்மாண்டமான நாவலுக்காகக் கொஞ்சம் மெனக்கெட்டேன். 1909ம் ஆண்டு தொடங்கி 2000வது ஆண்டு வரை நீள்கிற மாதிரி கதை. அந்தக் கதையின் ஹீரோ, கதைப்படி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பிறக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு வேறு வயதுகளில்தான் பிறப்பான். உதாரணமாக, அவனது முதல் பிறவியில், பிறக்கும்போதே அவனுக்குப் பதினெட்டு வயது. அடுத்தப் பிறவியைத் தனது ஐந்தாவது...
மறுபடியும் விளையாட்டு
அலகிலா விளையாட்டு, இலக்கியப்பீடம் இதழ் சார்பில் நடத்தப்பட்ட ஒரு போட்டியில் [2004] பரிசு வென்ற நாவல். அந்தப் பரிசை நிறுவியவர் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் அமரர் ஆர். சூடாமணி என்பதும், அப்போட்டிக்கு நான் எழுதியே ஆகவேண்டும் என்று என் நண்பர் நாகராஜகுமார் மிகவும் வற்புறுத்தியதுமே இதனை இவ்வடிவில் நான் எழுதக் காரணம். பரிசுக்குப் பிறகு இது இலக்கியப்பீடம் மாத இதழில் தொடராக வெளியாகி, இலக்கியப்பீடம்...
அமெரிக்க உளவாளி
தொழில் முறையில் எடிட்டராக இருப்பதால், புத்தகங்கள் விஷயத்தில் நான் இழக்கும் விஷயங்கள் சில உண்டு. அவற்றுள் முக்கியமானது, தனை மறந்து ரசிப்பது. ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த புத்தகங்களை பத்து முறை, இருபது முறையெல்லாம் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். இப்போது ஒரு புத்தகத்தை எடுத்தால் அதிகபட்சம் அரை மணி நேரம். எமகாதக சைஸ் புத்தகம் என்றால் அரைநாள். முடிந்தது. வார்த்தை வார்த்தையாக, வரி வரியாக...
ஒரு பாறையின் கதை
விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் 1963 ஜனவரி முதல் 1964 ஜனவரி வரை இந்திய அரசு, விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட முடிவு செய்தது. விவேகானந்தர் ஓர் ஹிந்துத் துறவி மட்டுமல்ல. ஒரு தேசிய அடையாளம். கொண்டாட்டம் அவசியமானது. மேற்கு வங்காளம் முதல் கன்னியாகுமரி வரை அவரைத் தெரியாதவர்கள் கிடையாது. ஆராதிக்காதவர்கள் கிடையாது. அவரால் உந்தப்படாதவர்களோ, உத்வேகம் அடையாதவர்களோ கிடையாது. குமரி மாவட்ட...