Categoryகதை

பேயைப் பெற்றவள் (கதை)

ஒரு ஊரில் ஒரு பெண் பேய் இருந்தது. அது இன்னும் இறக்காத ஒரு பையனைக் காதலித்தது. எப்படியாவது அவனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, இறந்த தன் தந்தைப் பேயிடம் சொல்லி இன்னும் இறக்காத தாயைப் போய் வரன் பேசச் சொல்லிக் கேட்டது. தந்தைப் பேய் தன் பழைய மனைவியின் கனவில் சென்று விவரத்தைச் சொல்லி, ‘நம் ஒரே மகளின் ஆசையை அன்றே நிறைவேற்றி வைத்திருந்தால் அவள் பேயாகியிருக்கவே மாட்டாள்; இப்போதாவது அவள்...

நடந்தது (கதை)

தவறு நடந்துவிட்டது என்று நினைக்கத் தோன்றவில்லை. விரும்பிச் செய்த ஒன்று எப்படித் தவறாகும்? ஆனால் வீட்டில் எப்படிச் சொல்வது என்பதில் குழப்பம் இருந்தது. ஆறுமுகம் நல்லவன். ‘கட்ன புடவையோட வா. நான் இருக்கேன் ஒனக்கு’ என்றுதான் நேற்றுக்கூடச் சொன்னான். ஆனால் தன் வீடு அவ்வளவு எளிதாக இதை ஏற்காது என்று நினைத்தாள். அம்மா அழுவாள். அப்பா கையில் கிடைப்பதைத் தூக்கிப் போட்டு உடைப்பார். இழுத்துத் தள்ளி...

300 வயதுப் பெண் (கதை)

எதிர் வீட்டு பால்கனியில் எப்போதும் அவளைப் பார்க்கிறேன். சமுராய்களின் காலத்தில் சீனத்தில் வரைந்த தைல ஓவியத் தாள் ஒன்றிலிருந்து அவள் எழுந்து வந்து அமர்ந்திருப்பாள். எப்படியும் என்னைவிட முன்னூறு வயதுகள் மூத்தவளாக இருக்கக்கூடும். காலம் அவள் முகத்தைப் பழுப்பாக்கியிருந்ததே தவிர சுருக்கங்கள் உருவாகியிருக்கவில்லை. பருவத்தில் எவ்வளவு அழகாக இருந்திருப்பாளோ, எவ்வளவு இளமையாக இருந்திருப்பாளோ, அதே அழகும்...

ஒரு கொலைக் கதை (கதை)

குறுங்கதை தன் வளையை விட்டு வெளியே வந்தது. வெளி, இருளாகி இருந்தது. எங்கும் ஆள் நடமாட்டமில்லை. முன்பெல்லாம் வீட்டு வாசல்களில் அகல் விளக்கு வைத்திருப்பார்கள். மின் விளக்குகள் வந்தபின் வாசலில் ஒரு நாற்பது வாட் விளக்கெரியும். வீதி விளக்குக் கம்பங்கள் நடப்பட்ட பின்பு வீட்டு விளக்குகளை யாரும் போடுவதில்லை. உபரி மின்கட்டண சேமிப்பு நவீன வாழ்வில் இன்றியமையாத அம்சம். உபரி மின் சக்திச் சேமிப்பு, மின்சார...

பிறகு வாழ்வது (கதை)

படுக்கப் போகும்போது ஒன்றுமில்லை. அதிகாலையில் வினோதமான சத்தம் கேட்டுக் கண் விழித்தான். இருளில் குறிப்பாக எதுவும் தெரியவில்லை. எழுந்துகொள்ளப் பார்த்தபோதுதான் அபாயம் புரிந்தது. ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் அறைக்குள் எப்படியோ நுழைந்துவிட்டிருந்தன. பாய்ந்து விளக்கைப் போடப் பார்த்தபோது முகமெல்லாம் அவை மோதி மொய்க்கத் தொடங்க, ஐயோ என்று அலறினான். அலறும்போது திறந்த வாய்க்குள் சட்டென்று சில வெட்டுக்கிளிகள்...

இன்னொன்று (கதை)

விமானம் ஏறப்போகுமுன்னர் செய்த மருத்துவப் பரிசோதனையில் அச்சுறுத்தல் ஒன்றுமில்லை. விமானத்தில் அல்கொய்தா வீராங்கனையைப் போல ஆறு கெஜம் துணியால் முகத்தைச் சுற்றி மூடிக்கொண்டு, கையுறை காலுறைகளைக் கழட்டாமல், உண்ணாமல், பேசாமல் விரததாரியாகவே அமர்ந்து ஊர் வந்து சேர்ந்தார் பெருந்தேவி. விமான நிலைய தெர்மல் பரிசோதனையின்போதும் ஃப்ரிட்ஜில் வைத்த பால் பாக்கெட்டைப் போல உடலும் உள்ளமும் குளிர்ந்திருப்பது மானியில்...

வித்வான் (கதை)

ஒரு ஊரில் ஒரு ஹரன் பிரசன்னா வசித்து வந்தார். ஒரு கிருமிக் காலத்தில் அவருக்கு இரண்டு மாதக் கட்டாய ஓய்வு தரப்பட்டு வீட்டில் இருக்க வேண்டி வரவே, சாப்பிட்டு சாப்பிட்டு மிகவும் குண்டாகிப் போனார். (அதற்கு முன்னர் அவர் ஒல்லியாக இருந்தவர் என்பதால் இது வேறு எந்த ஹரன் பிரசன்னாவும் இல்லை.) குண்டாகிப் போன ஹரன் பிரசன்னாவுக்கு இரண்டு பழக்கங்கள் இருந்தன. எப்போதும் அவர் பைக்கில் வெளியே போவார். மற்றும் பைக்கில்...

ஞானஸ்தன் (கதை)

பாரா ஒரு நாள் ஞானம் பெற்று பாராசான் என்னும் ஜென் குரு ஆனான். ஆனால் அவன் பாராசான் ஆனது ஊருக்குத் தெரியாது. அது ஊருக்குத் தெரியாது என்கிற சங்கதி பாராசானுக்கும் தெரியாது என்பதனால் ஏன் தன்னை நாடி முட்டாள்களோ சீடர்களோ இன்னும் வரவேயில்லை என்று அவன் தினமும் கவலைப்படலானான். ஒவ்வொரு புதிய முட்டாள் வரும்போதும் எப்படி அவர்களை மடக்கி, வியப்பூட்டி, பரவசப்படுத்தி, ஒரு ஓட்டாஞ்சில்லைத் தூக்கிப் போட்டு அதில்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter