சூனியன் – கோவிந்தசாமி சந்திப்புக்கு வெகுநாட்களாகக் காத்திருந்தேன். இந்த அத்தியாயத்தில் அது நிறைவேறியது. சூனியன் நீல நகரத்தில் நுழையும்போது, கோவிந்தசாமிக்கு உதவுவதாக வாக்களித்திருந்தான். நாட்கள் நகர நகர சூனியனே கோவிந்தசாமிக்கு எதிராய் வேலைகள் செய்ததேன் எனக் குழம்பியிருந்தேன். இந்த அத்தியாயத்தில், சூனியனே அதற்கான காரணங்களை விளக்குகிறான். முதற் காரணம்: கோவிந்தசாமியிடம், சூனியன் தான் திரும்பி...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 41)
சூனியனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவமானப்பட்ட கோவிந்தசாமியும் அவனது நிழலும் ஒரு மதுபானக்கடையில் சந்திக்கிறார்கள். கோவிந்தசாமி எஜமானன் என்பதால் அவன் முன்பு அமர்ந்து குடிக்க மறுக்கிறது நிழல். மறைவாக சென்று குடித்துவிட்டு மிக்சர் சாப்பிடுகிறது. நிழலுக்கு சாகரிகாவும் இல்லை, காதலியும் இல்லை என்றாகிவிட்ட நிலையில், கோவிந்தசாமிக்கு சாகரிகாவும் இல்லை வேறு யாரும் இல்லை என்றாகி இருவருக்கும் இது ஒன்றே...
புதிய தொடர் அறிவிப்பு
மீண்டும் தாலிபன் இன்று மாலை நான்கு மணிக்கு #bynge-வில் வெளியாகத் தொடங்கும். ISISக்குப் பிறகு நேற்று வரை அரசியல் எழுதாதிருந்தேன். இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு. அதெல்லாம் என் தனிப்பட்ட விவகாரம். ஆனால் நூற்றுக் கணக்கான வாசகர்கள் தொடர்ந்து இது குறித்துக் கேட்டுக்கொண்டே இருந்ததை நீங்கள் இங்கே வெளியாகும் கமெண்ட்களிலேயே பார்த்திருக்கலாம். தினமும் மின்னஞ்சல்கள். சந்திக்க நேரும் போதெல்லாம்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 38)
கோவிந்தசாமி நூலக சமஸ்தானத்திற்குள் நுழைந்ததை முதலில் பார்த்தது ஷில்பா தான், அவள் சாகரிகாவிடம் விஷயத்தைச் சொல்லவும், அவள் கோவிந்த்சாமியின் கண்ணில் படாமல் வெளியேற ஷில்பா உதவுகிறாள். கமலி சாப்பிடும் கரடி, வெண்முரசு சாப்பிடும் முள்ளம்பன்றி, கசடதபற வாசிக்கும் எருது எனப் புனைவில் அதகளம் செய்திருக்கிறார் பாரா. அங்கே கமலி சாப்பிட்டு கொண்டிருக்கும் கரடியின் தலையைக் கழற்றி சாகரிகாவின் தலையில் மாட்டி...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 37)
நீல வனத்தின் நூலக சமஸ்தானம் வெகுசுவாரசியமாய் கட்டமைக்க பட்டிருக்கிறது. சாகரிகாவும் ஷில்பாவும் நூலக சமஸ்தானத்திற்கு வந்து சேர்கின்றனர். அவர்கள் வரும் நேரமாய் ஒரு யாளி ஒன்று மயக்கத்தில் சமஸ்தான வாசலில் படுத்திருக்கிறது. நீல வனவாசிகள் எல்லோரும் அதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதை அடுத்து யாளியை குறித்து நடைபெறும் உரையாடல்கள் அனைத்தும் புனைவின் உச்சம். சாகரிகாவை பார்க்கும் மக்கள்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 40)
கோவிந்தசாமியின் நிழல் இந்த அளவுக்கு முட்டாள்தனமாக இதற்குமுன் இருந்ததாகத் தெரியவில்லை. அது தன் எஜமானனின் உண்மையான குணத்தைக் கொண்டிருப்பதை இந்த அத்தியாயத்தில் வெளிப்படுத்திக் கொண்டுவிட்டது. காதலில் அனைத்தும் மறக்கும்தான். ஆனால் நிழலோ தன்னுடைய காதலால் இன்னொரு காதலை முற்றிலும் மறந்துபோவது மட்டுமன்றி அந்தக் காதலிக்கு அறவே பிடிக்காத ஒரு செயலையும் செய்கிறது. செம்மொழிப்பிரியாவின் காதலை அது வெண்பலகையில்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 39)
சில அத்தியாயங்கள் இடைவெளிக்கு பிறகு சூனியனை நாம் சந்திக்கிறோம். அவன் கோவிந்தசாமியைப் பார்த்து எண்ணுகிற எண்ணங்களுடன் தொடங்குகிறது அத்தியாயம். போகிற போக்கில் சூனியன் கோவிந்தசாமியையும் அவன் வணங்கும் கடவுளையும் கிண்டலடிக்க தவறவில்லை. மேலும், அவன் ஏன் கோவிந்தசாமியை காப்பாற்றாமல் சிக்கலில் மாட்டிவிட நேர்ந்தது என்பதுபற்றி சொல்லிக் கொண்டே போகிறான். இந்தக் கதையின் கதாநாயகனான கோவிந்தசாமியை...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 32)
பிறக்கும் போதே தன் படைப்பான முல்லைக்கொடியை தேசியவாதியாகப் படைத்ததற்காக சூனியன் நியாயமான ஒரு காரணத்தை சொல்லி விடுகிறான். அவளும், தான் ஒரு சங்கி தேசியவாதி என ஓயாது நினைவுபடுத்தி வரும் கோவிந்தசாமியும் ஒரு ஒயின்ஷாப் வாசலில் சந்தித்துக் கொள்கிறார்கள். தேசியவாதிகளாக ஒயின்ஷாப் வாசலில் சந்தித்துக் கொண்டது குறித்து வெண்பலகையில் முல்லைக்கொடி எழுதுகிறாள். நீலவனத்தில் கிடைக்கப்போகும் மந்திரமலர் மூலம்...