சூனியனின் புதுவிதமான முடிவுகள் நம்மைத் திகைப்படையச் செய்கின்றன. சூனியனின் முற்கால வாழ்வு குறித்த விரிவாக தகவல்கள் இந்தப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ‘சகட விருட்சம்’ என்ற புதுவித கருத்து மிகச் சிறப்பு. இனிச் சூனியன் ‘விஸ்வரூபம்’ எடுப்பது உறுதி. இந்த அத்தியாயத்தில் இடைவெட்டாகச் செம்மொழிப்பரியா – சாகரிகா பற்றிய செய்திகளும் செம்மொழிப்பிரியாவின் கட்டுரை ஏற்படுத்திய பரபரப்பும் சிறப்பு. சூனியனைப்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 26)
தலைப்பை வாசித்ததும் மீண்டும் சில முறை உச்சரித்து பார்த்தேன். அந்தச் சொல்லாடல் உவப்பாய் இருந்ததைப் போல அதற்கான காரணமும் அத்தனை உவப்பு! மின் தடைக்கு துறை சார்ந்த அமைச்சர் சொன்ன காரணத்திற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை பா.ரா. தன் படைப்பின் வழி நிறுவி இருக்கிறார். அதுல்யாவின் பதிவை வாசித்த கோவிந்தசாமி பதறியடித்துக் கொண்டு தன் நிலை மறந்து நகர நிர்வாக அலுவலகம் நோக்கி...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 25)
சாகரிகா கலங்கடித்துக் கொண்டிருந்த இடத்தை அதுல்யா கைப்பற்றினாள். வெண்பலகையில் அவள் இட்ட பதிவு சாகரிகாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதிலிருந்து மீள அதுல்யாவிடம் தனி உரையாடலை நிகழ்த்திய சாகரிகாவுக்கு அவள் சொன்ன தகவல் அந்த அதிர்ச்சியை இன்னும் கூடுதலாக்கியது. கோவிந்தசாமியின் இன்னொரு முகமாக அதுல்யா காட்டும் அவன் செயல்பாடுகள் நம்மையும் ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. ”அதற்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான்” என...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 24)
தான் உருவாக்கப்போகும் மகத்தான படைப்பான அதுல்ய குஸ நாயகியை (நிக் நேம் – அதுல்யா) பெயரிட்டு வளர்ப்பதற்கு முன் அவளுக்கான சரித்திரத்தை சூனியன் உருவாக்குகிறான். அவளுக்கு அப்பெயர் வைத்ததற்கான பெயர்க்காரணம் இன்னொரு சுவராசியம். பிரம்மா படைப்பில் பிறப்பின் மீது சரித்திரம் நிகழும். சூனியன் படைப்போ சரித்திரத்தின் மீது பிறப்பை நிகழ்த்துகிறது. அதுல்யா சரித்திரம் திருமழபாடியில் தொடங்கி அமெரிக்கா வரை நீள்கிறது...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 23)
சூனியர்களுக்கு சகாயம் செய்ய அவர்களின் முன்னோர்கள் கண்டறிந்து கொடுத்த தருவான சகட விருட்சம் பற்றிய சுவராசிய விவரிப்புகளுடன் அத்தியாயம் தொடங்குகிறது. சகடக்கனி தரு, ஸ்போடில்லா பழம் பற்றியெல்லாம் வார்த்தைகள் வழியாக விரியும் வர்ணனைகள் அபாரம். மரத்துக்குக் கூட இத்தனை பின்புலமா? இந்த நாவலில் உயர்திணையோ, அஃறிணையோ எதன் அறிமுகமும் பிரமாண்டமாகவே நீண்டு விரிகிறது. மிகு புனைவில் பா.ரா.வின் பந்து சிக்சரை நோக்கி...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 22)
உண்ண உணவுக்கும், ஒதுங்க உறைவிடத்திற்கும் வழியில்லாத சூழலில் நீலநகரமக்களை சாட்சியாக்கித் தன் மரணப்போராட்ட அறிவிப்பை கோவிந்தசாமியின் பெயரில் அவனுடைய நிழல் வெளியிடுகிறது. நாற்பதாண்டுகள் கோவிந்தசாமியோடு இருந்துவிட்டு விலகி நிற்கையில் அதற்கு கிடைத்த சுதந்திரம் கோவிந்தசாமி நீலநகரத்திற்கு வந்ததற்கான காரணத்துக்கே வேட்டு வைப்பதோடு சாகரிகாவை தனதாக்கிக் கொள்ளவும் கோவிந்தசாமியின் முடிவு செய்கிறது...
யாருக்கும் இழப்பில்லை
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகத் தீவிரமாகத் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது தீவிரம்கூட அல்ல. அதைத் தாண்டியதொரு வெறி கொண்ட வேட்கை. இந்தியப் படங்கள், உலகப் படங்கள், ஹாலிவுட் படங்கள், கொரியன் படங்கள், சீனாவின் பிரசித்தி பெற்ற கராத்தே, குங்ஃபூ படங்கள், இந்த எந்த இனத்துடனும் சேராத மசாலா டப்பிங் படங்கள் இப்படி. எந்தத் திரைப்பட விழாவையும் தவறவிட்டதில்லை. அதேபோலத் தமிழ்ப் படங்கள்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 25)
சென்ற அத்தியாயத்தில் அறிமுகமான அமெரிக்கப் பேரழகி அதுல்யா அதற்குள் கதையின் முக்கிய கதாபாத்திரமான நமது கதாநாயகியை கலங்கடித்துவிட்டாள். அப்படி என்ன செய்தாள்? வெண்பலகையில் ஒரு சிறு நினைவுக் குறிப்பு. அவ்வளவுதான். ஆடிப்போய்விட்டாள் சாகரிகா. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்னர், சில தகவல்களுக்காக அதுல்யாவிடம் மெஸஞ்சரில் பேச, அவள் மீது இடி விழுந்தது போல இன்னொரு அதிர்ச்சி. அவளுக்கு கோவிந்தன் மீது...