கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 26)

தலைப்பை வாசித்ததும் மீண்டும் சில முறை உச்சரித்து பார்த்தேன். அந்தச் சொல்லாடல் உவப்பாய் இருந்ததைப் போல அதற்கான காரணமும் அத்தனை உவப்பு!
மின் தடைக்கு துறை சார்ந்த அமைச்சர் சொன்ன காரணத்திற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை பா.ரா. தன் படைப்பின் வழி நிறுவி இருக்கிறார்.
அதுல்யாவின் பதிவை வாசித்த கோவிந்தசாமி பதறியடித்துக் கொண்டு தன் நிலை மறந்து நகர நிர்வாக அலுவலகம் நோக்கி ஓடுகிறான். தன் மீது நிகழ்த்தப்படும் அபாண்டத்தை த்டுத்து நிறுத்தும் வேட்கை அவனை இயங்க வைத்துக் கொண்டிருந்தது. தனக்கெதிராக யாரோ சதி செய்வதை உணரும் கோவிந்தசாமிக்கு விதியும் சேர்ந்து சதி செய்கிறது. தன் நிழல் தன்னிடம் இல்லை என்பதை நிரூபிக்கும் அவனது முயற்சியை மழை கழுவிப் போக வைப்பதோடு அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளி விடுகிறது.
”குற்றவாளியை அடையாளம் காண்பது சிரமம்” என நகரவாசியின் வாக்குமூலம் அதுல்யாவின் ஆடுகளத்தை இன்னும் அதிகமாக்கும் எனத் தெரிகிறது. நீலநகரத்தில் வெண்பலகையில் நிகழும் அத்தனை நிழவுகளும் பூமிக்கிரகத்திலும் வருங்காலத்தில் நிகழ சாத்தியமுண்டு. இந்த நாவலை பின்னர் வாசிக்கும் தலைமுறை உணரட்டும்.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter