வழக்குரைஞர் ‘ஷில்பா’ என்ற புதிய கதைமாந்தர் வெளிப்பட்டுள்ளார். இவர் கோவிந்தசாமிக்குப் பலவகையில் உதவுவார் என்ற நம்பிக்கையை வாசகர்கள் அடைந்துள்ளனர். ஆனால், இவர் கோவிந்தசாமியின் மனைவியின் தோழி என்பதுதான் வருத்தமான செய்தி. கோவிந்தசாமிக்கும் அவரின் மனைவிக்கு விவாகரத்து என்ற தகவலையும் சூனியனைக் கைதுசெய்ய மற்றொரு சூனியன் வந்திருக்கும் தகவலும் ஷில்பாவின் வழியாகவே தெரியவருகிறது. அதுமட்டுமல்ல கோவிந்தசாமியை...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 11)
சூனியனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணியையும் அவன் அதைச் சரிவர நிறைவேற்றாமைக்கான காரணத்தையும் அதனால் அவன் பெற்ற தண்டனையும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன. கடவுளுக்கு எதிரான போராட்டத்தில் சூனியன் அடைந்த தோல்வியே அவனைத் தலைமறைவாக்கியுள்ளது. அரசியின் வருகையும் அதற்காக நகரமாந்தர்களைக் கட்டுப்படுத்த காவலர்கள் மேற்கொள்ளும் முயற்சியும் சூனியன் அரசியைக் கொலைசெய்ய முயற்சிசெய்யும் விதமும் நன்றாகக்...
கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 12)
சாகரிகாவின் தோழியான ஷில்பாவை சந்தித்த கோவிந்தசாமி சாகரிகா தன்னுடன் திரும்பி வந்து வாழவோ அல்லது குறைந்தபட்சம் அவன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்கவாவது ஷில்பாவின் உதவியைக் கோருவதே இந்த அத்தியாயம். “உனக்கு சாவே கிடையாது என்று இறுதி வரை நம்பிக்கை அளிப்பார்கள். பிறகு RIP சொல்லி விடுவார்கள்” – இக்கொடூர சூழலில் இவ்வரிகளை வாசிக்கையில் ஏனோ ஒரு வருத்தம் உள்ளுக்குள் சூழ்ந்தது. கதை இப்போது...
கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 11)
நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை. முகநூலில் ஒரு பெண் பெயர் கொண்ட ஐடி ஒரு நிலைத் தகவலைப் பதிவிட்டால் எவ்வளவு விருப்பக்குறிகள் (likes), கருத்துகள் (comments) வரும். இன்னும் ஒரு படி மேலாய், அதனோடு தன் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டால்? இதே, ஓர் ஆண் ஒரு தகவலைப் பதிவிட்டால்??? அதே கதை தான் நீல நகரத்தில் மக்கள் தங்கள் தகவல்களைப் பகிரும் வெண்பலகைக்கும். போன அத்தியாயத்தில் விட்ட குறையை சொல்ல மறந்தோமே...
கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 1)
சாய் வைஷ்ணவியின் முதல் அத்தியாயத்துக்கான மதிப்புரை இங்கே உள்ளது.
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 10)
உண்மை. உண்மை. இந்த உண்மைக்குப் பல நேரங்களில் மதிப்பு இருப்பதில்லை. அதனால்தான் காரியவாதிகள் உண்மை மீது வர்ணத்தைப் பூசிப் பொய்யாக்குகின்றனர். அந்த வர்ணம் ஈர்க்கிறது. வர்ணத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் அதனைத் தன் மனத்திற்குள் செலுத்திக் கொள்கின்றனர். ஆனால், நம் சூனியனோ உண்மையையும் பொய்யையும் ஆராயத் தெரிந்தவன். அறிந்து கொள்ளக்கூடியவன். முதலில் அவன் கோவிந்தசாமியின் தலைக்குள்ளேதான் இறங்கினான். ஆகவே, அவன்...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 10)
கோவிந்த சாமியின் நிழலுக்கும் சூனியனுக்குமான உணர்ச்சிகரமான உரையாடல் இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது. ‘ஒருவரைப் பற்றிப் பிறரது கருத்தே அவரின் ஆளுமையாக மற்றவரால் கருதப்படுகிறது’ என்ற கருத்தை இந்த அத்தியாயத்தில் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார். கடவுளுக்கும் கடவுளின் விரோதிக்குமான போராட்டம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்து. யுகப்பிரளயம் பற்றிய செய்தியும் குறிப்புணர்த்தப்...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 9)
ஒன்பதாவது அத்தியாயத்திலிருந்து இந்த நாவலின் கதைகூறும் முறையில் ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளது. புகைவண்டி புதிய திசையில் செல்ல தண்டவாளத்தை மாற்றிக்கொள்வது போல இது அமைந்துள்ளது. இதுவரை வாசித்துவந்த வாசகர்கள் சற்றுத் தயங்கி, இந்தப் புதிய கதைசொல்லியைப் பின்தொடரத் தொடங்குவார்கள். ஒருவகையில் இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க தன்னிலை விளக்கமாகவே அமைந்துள்ளது. கதையின் ஓட்டம் ஆற்றொழுக்காக மாறிவிடுகிறது...