Blog

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 2)

மனம்முதிர்ந்தவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க மாட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தன் பேச்சினை நிறுத்திவிட்டு, அதற்குச் செயல்வடிவம் கொடுத்து விடுவார்கள். சூனியனும் ‘எண்ணத்தைச் செயல்வடிவம் ஆக்குவதற்கு என்ன செய்யலாம்?’ என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். அந்த எண்ணத்தின் வடிவம்தான், “என்னைத் தூக்கிப் போடுங்கள்”. கப்பலுக்கு நிறுத்தும் விசை கிடையாது. அது மட்டும் அல்லாது அவர்கள் தங்கள் உயிரையும்...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 1)

இறக்கை இல்லாமல் பறக்க முடியுமா?’ என்று எண்ணி சிந்தித்த வேளையில், ‘ஆம், தோழி! கற்பனைக் கண் கொண்டு உன்னால் பறக்க முடியும்’ என்று பா. ராகவன் சூனியன் வழியாக என் மனத்திற்குள் கிளவியாக என்னையும் எடை கொண்ட பொருளாகப் பறக்கச் செய்தார். நியாயத் தீர்ப்பானது வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு விதமாக வழங்கப்படுகிறது. கோணம் மாறுபடுவதால் மட்டும் அல்ல, பார்வைக்கோணம் மாறுபடுவதால் தீர்ப்புகள் தவறுகின்றன எனச் சூனியன்...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 7)

ஒவ்வொரு அத்தியாயத்திலும் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கவும் மறந்து, சுய பிரக்ஞையற்று வாசிக்கும் அளவிற்கா சங்கதிகளை கோர்ப்பது? நீல நகரவாசியாகவே மாறிவிட்ட சாகரிகாவும், கோவிந்தசாமியின் நிழலும் பேசிக்கொள்கையில், அவன் மீது தனக்கு விருப்பமில்லை என அவள் வெளிப்படையாய் அத்தனை உறுதியாய் கூறும் மனோதிடம் இன்னும் நம்மைச் சுற்றி வாழும் நம் மகளிருக்கு முழுதாய் வாய்க்காத ஒரு கொடை. நீல நகர வாசிகளின் செயலும்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 4)

விடுதலையின் பெருமூச்சு தன்னம்பிக்கையுடன் தானே வெளியேறும். சூனியனின் மனநிலையும், கொண்டாட்டமும் நம்மையும் தொற்றி கொள்கிறது. மேலும், கதையில் இப்போது கோவிந்தசாமி என்னும் புது கதாப்பாத்திரம் அறிமுகமாகிறது. விந்தை என்னவென்றால், ஒரே அத்தியாயத்தில் ஒருவரை இவ்வளவு தெரிந்து கொள்ள முடியும் என்று காட்டி விட்டார் நம் பாரா. நகைச்சுவை கலந்த இந்த அறிமுகம், கோவிந்தசாமி மீது ஒரு வித காழ்ப்புணர்வும், ஒரு வித...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 6)

இப்படியெல்லாம் கூட ஒரு நகரம் இருக்க இயலுமா???? பொதுவாக, பறக்கும் தட்டு, வேற்றுலகவாசிகள் போன்ற பிரச்சனைகள் எழும்போதெல்லாம் அப்படியெல்லாம் இருக்காது என்று கருதினாலும், இந்த பேரண்ட வெளியில் இன்னும் நாம் அறியாத எவ்வளவோ இருக்கலாம், மனித இனம் இன்னும் அறிந்து தேற வேண்டியது எவ்வளவோ இருக்கும் போது ஏன் அப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்ற வினாவும் சேர்ந்தே எழுமல்லவா? அப்படித்தான் இப்படியும் ஒரு கிரகமிருக்க...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 5)

தான் மூடன் என்பதை உணர்ந்தே ஒருவன் மூடனாக இருப்பது எத்தனை பெரிய விசயம். ஒருவேளை அவன் ஒரு சங்கி என்பதால் அவ்வாறோ? கோவிந்தசாமியின் வம்ச வரலாற்றின் வரிசையினை தவறின்றி வரிசைக்கிரமாய் கூறுவோர்க்கு தனியே ஒரு பரிசுப்போட்டி கூட பா.ரா. அவர்கள் அறிவிக்கலாம். ஆனால், கடைசி வரை அப்பரிசு அவர் வசமே இருக்கும். நீல நகரமென்ற ஒன்று உண்மையிலேயே இருக்குமோ??? தன் மனைவி சாகரிகாவைக் காண தன் நிழலினை சூனியனுடன் அனுப்பும்...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 4)

வச்சி செஞ்சிருக்காருனு தான் சொல்லணும்…. யாரை? வேற யாரை? மனுசன விட மாட்டை ஒஸ்தியா நெனைக்குறவங்கள தான். கோவிந்தசாமியின் மூளைக்குள் நுழையும் சூனியன் அவன் தன் மூளையை இதுவரை அதிகம் பயன்படுத்தவேயில்லை என்று கூறுவதன் காரணம் என்னவென்று அடுத்தடுத்த பத்திகளில் புரிந்து போகிறது. ஆம் அவன் ஒரு கர சேவகராய் இருந்திருக்கிறானே. இரண்டு செங்கல் என்ற அத்தியாயத்தின் தலைப்பு பொருத்தமானது தான். சாகரிகாவுடனான...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 3)

நம் வாழ்வின் தோல்வி எது, இறுதிக் கணம் எதுவென்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அதிகாரமிக்கவன் அதனை முடிவு செய்திருந்தாலும் பிழைத்திருக்கும் கடைசி நொடி வரை வாழ்தலுக்கான முயற்சியை கைவிடலாகாது என்பதை உணர்த்தும் அத்தியாயமிது. “வெளியே வலை வீசி இரண்டு மின்னல்களை பிடித்து எடுத்து வந்து நகராதவாறு பிணைத்தார்கள்” – எப்பேர்ப்பட்ட புனைவு. நாம் காணும் (நேரடியாக காணக்கூடாத) மின்னலை கயிரென...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!