மனம்முதிர்ந்தவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க மாட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தன் பேச்சினை நிறுத்திவிட்டு, அதற்குச் செயல்வடிவம் கொடுத்து விடுவார்கள். சூனியனும் ‘எண்ணத்தைச் செயல்வடிவம் ஆக்குவதற்கு என்ன செய்யலாம்?’ என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். அந்த எண்ணத்தின் வடிவம்தான், “என்னைத் தூக்கிப் போடுங்கள்”.
கப்பலுக்கு நிறுத்தும் விசை கிடையாது. அது மட்டும் அல்லாது அவர்கள் தங்கள் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் நேரத்தில்தான், அதைத் தன் வாழ்வாக்க எண்ணித் தன் சொற்விதையை அவர்களுக்குள் செலுத்தி விடுகிறான். அந்தச் சொல்லும் விருட்சமாகி அவர்களின் மனத்திற்குள் சென்று விடுகிறது. இதுதான் இதுதான் சூனியன்.
சூனியன் சிறந்த வீரம் மிக்க செயல்வீரன் என்பதை அவனின் மனவோட்டத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.
“பேசி என்ன ஆகப்போகிறது? சிறிது செயல்பட முடிந்தால் ஏதேனும் வழி திறக்கலாம். ஒரு புரட்சிக்கான சமிக்ஞையை அவர்களுக்கு வெளிப்படுத்திவிட முடிந்தால்கூடப் போதும். யாரும் மறுக்க மாட்டார்கள்”.
குற்றமற்றவர்களின் குற்றங்கள் அநீதியாகும்போது அவர்கள் அதிலிருந்து தன்னை விடுவிடுத்துக் கொள்ள எண்ணுவார்கள் என்பதை உணர்ந்த வீரன் அவன். நான் அவனை ‘வீரன்’ எனக் கூறக் காரணம், அவனைக் கத்தியால் குத்தியபோதும் அவன் தன் அகத்திற்குள் எண்ணுபவையே அவனை ‘வீரன்’ என்று உணர்த்துவதால்தான்.
அனைவரும் அவனைக் கைதியாகப் பார்த்தாலும் சூனியனை என் அகமானது மாவீரனாகவே போற்றுகிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.