Bynge appல் தொடராக வெளியாகிக்கொண்டிருக்கும் கபடவேடதாரி நாவல் அத்தியாயங்களுக்கு ஃபேஸ்புக்கில் வெளியாகும் விமரிசனங்களை இங்கே தொகுக்கிறேன்.
கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை (அத்தியாயம் 1)
ஆசிரியர் பா. ரா. அவர்களின் பல நூல்களை வாசித்திருக்கிறேன். அவர்களின் எழுத்துக்கு ஒரு தனி தன்மையுண்டு. அந்த வகையில் இந்த “கபடவேடதாரி” நாவலினை, வாசிக்க ஆரம்பித்தேன், முதல் அத்தியாயத்தில் இருந்து இது எதோ ஒரு புதிய கோணத்தில் புனையப்பட்ட வேடதாரி என்று என்னைப்படிக்கத் தூண்டியது. ஆரம்பமே ஒரு பிரமாண்ட உலகம். நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட வெகுவான விஷயங்களை முதல் அத்தியாயத்தில்...
கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 2)
முதல் அத்தியாயத்தில் இருந்த புதிர் இரண்டாம் அத்தியாயத்தில் அவிழும் என்று நினைத்தால் புதிர்கள் நீண்டு கொண்டே செல்கிறது. நம் ஊரில் முதல்மரியாதை செய்ய மாலை அணிவிப்பது வழக்கம். சில பல அரசியல்வாதிகள் தற்போது கமெர்ஷியலாக வேல் ஏந்துவதைப் போல, சூனியர்கள் உலகில் எலும்புக்கூடுகளுக்கு மதிப்பு அதிகம். ஏனெனில் இறைவன் படப்பில் இறுதியில் எஞ்சுவது அது மட்டும் தானே. எலும்புக்கூடுகளை கடவுளின் தோல்விச் சின்னமாக...
கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 1)
சூனியர்கள், அமீஷின் நாகர்கள், டேன் ப்ரவுனின் மேஷன்கள் போலவே பாராவின் புனை மாந்தர் தாம் அவர்கள். ஒரு இனக்குழு தனக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழிவதற்கு ஆவன செய்பவர்கள் சூனியர்கள். கடவுளை அழிக்க இயலாத காரணத்தால் கடவுளது முதன்மைப் படைப்பான மனித குலத்தை அழிந்து தங்களின் கடவுள் வெறுப்பை ஆற்றுப்படுத்திக்கொள்ள முயல்பவர்கள் தாம் சூனியர்கள். அவ்வினத்துள் ஒருவன் தன் இன சூனியர்களாலேயே இனத்துரோகி எனக் குற்றம்...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 2)
மானிடர்களின் உலகிலிருந்து சூனியர்களின் உலகம் முற்றிலும் வேறுபட்டதாக இருப்பினும், மனிதர்களுக்கு உண்டான அந்த பழி வாங்கும் குணம் சூனியர்களிடம் மேலோங்கி நிற்கிறது. ஆனால் சூனியர்களின் பலிவாங்கும் குணம் நியாயத்தின் போர்வையில் பதுங்கி இருப்பதாய் தான் படுகிறது. மனிதர்களிடத்தில் இறுதியாய் எஞ்சியிருக்கும் எலும்பினை சூனிய உலகில் பெரும் மதிப்பாய் கருதுவாய் பாரா அவர்கள் எழுதியிருக்கிறார். தனது மனைவிக்காக...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 3)
எத்தனையோ சங்குகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பூகம்பச் சங்கு என்றொரு சங்கா? அது எப்படியிருக்கும்?அதன் பயன்பாடு என்ன? என்ற ஆவல் தலைப்பை வாசித்ததும் பற்றிக் கொள்கிறது. தன்னைப் பலிகொடுத்தலில் தான் தப்பித்தலுக்கான வழி இருக்கிறது என நம்பும் சூனியன் நீலநிற நகரத்தை அழிக்க தன்னை பயன்படுத்திக் கொள்ளும் படி சொல்கிறான். மரணக்கப்பலை அழிக்க கடவுள் அந்நகரை அனுப்பி இருக்கக்கூடும் என நினைக்கும் மீகாமன் சூனியனின்...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 4)
சூனியனைத் தூக்கி எறிந்து விட்டு சனிக்கோளம் நோக்கிப் போவதோடு மரணக் கப்பலின் கதையும், அந்த உலகத்தின் கதையும் முடிகிறது. தன் சாகசங்களால் தூசியினும் சிறிதாய் மாறி உயிரோடு நம் எதார்த்த உலகத்திற்குள் சுங்கச்சாவடி வழியாகவே வரும் சூனியன் கோவிந்தசாமி என்பவனின் உடம்பில் கூடு பாய்ந்து கொள்கிறான். தினத்தந்தி நாளிதழின் அன்றாடச் செய்தி கோர்வையாய் இருக்கும் துயரங்களால் சூழப்பட்ட வாழ்க்கை கோவிந்தசாமியினுடையது...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 2)
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிரான யுத்தமாக தண்டனைக்காக தன்னைக் கொண்டு செல்லும் மரணக் கப்பலில் இருந்து தப்பிக்க வேண்டுமென சூனியன் நினைக்கிறான். அதற்கான வாய்ப்புகளை தேடுகிறான். தன்னைப் போல நிலக்கடலை ஓட்டிற்குள் அடைபட்டு வரும் கைதிகளை புரட்சிக்குத் தூண்டலாமா? என மானிடர்களைப் போல திட்டமிடுகிறான். அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதைப் போல சூனியனின் உடலில் காவலரால் பனிக்கத்திகள் இறக்கப்படுகின்றன...