ஒரு பூரணத்தில் இருந்து இன்னொரு பூரணம் பிறப்பதாய் சொல்கிறது கீதை. அந்தப் பூரணத்தில் இருந்து பூரணத்தைப் பிரித்தால் பிறப்பவன் நான் என சூனியனைச் சுய அறிமுகம் செய்கிறார் பா. ரா. அந்த அசத்தல் அறிமுக வரிகளின் ஊடாக அவர்களின் உலகத்திற்குள் நம்மையும் அழைத்துச் செல்கிறார். அந்த உலகில் சிறை வைக்கப்படும் முறை, பறக்கும் தட்டு, விச நாக பற்கள், ஒளிச்சவரம், தண்டனை விதிக்கப்படும் விதம் பற்றிய விவரணைகளை வாசித்துக்...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 1)
சூனியனிடம் இருந்து தொடங்குகிறது இத்தொடரின் முதல் அத்தியாயம். சூனியனை சாத்தானிடமிருந்தும் கெட்ட சக்தியிடமிருந்தும் வேறுபடுத்தி கூறும் அந்த வரிகள் வாசிப்பதற்கு வியப்பாக இருந்தது. சாத்தான்களின் சிறைக்கூடமென்பது ராட்சச வேர்க்கடலையின் ஓட்டுக்குள் சிறை வைத்து ஒரு பெரிய அடுப்பில் வைத்திருப்பது போல மிகவும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருந்தார் பாரா. சூனியர்களின் மரணத்தை மனிதர்களின் மரணத்திலிருந்து...
கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 3)
அதிக விவரணைகள் இல்லாமல் மூன்றாவது அத்தியாயம் வேகமாக நகர்கிறது. கதை சூடு பிடித்துவிட்டது என்பார்களே, அது போல. ஆனால் இன்னமும் எந்த கிரகத்தில் இருந்து சனிக் கிரகத்துக்கு அந்த கப்பல் பயணிக்கிறது என்பது தெளிவாக சொல்லப்படவில்லை சூனியர்களின் உலகம் என்பது எங்கே இருக்கின்றது என்பதும் தெரியவில்லை. அல்லது இவை இந்த கதைக்கு தொடர்பில்லாதவையாகவும் இருக்கலாம். எதிர்பாராமல் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினையைப்...
கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 2)
கடவுளை ஒருபோதும் வெல்ல முடியாத சாத்தான் அவனுடைய அதிஉயர் படைப்பான மனிதனை தன்னுடைய இலக்காக்கி கொள்வதும், தன் மரணத்தின் போது மனிதன் பூமிக்கு விட்டுச் செல்கின்ற ஒரே ஒரு எச்சத்தை தன்னுடைய கொண்டாட்டத்தின் அடையாளமாக சூனியர்கள் உருவகித்துக் கொள்வதும் சுவாரசியமான கற்பனை. அதாவது மனிதன் என்பவனுக்கு முற்றிலும் எதிரானவன் சூனியன் என்கின்ற பிம்பம் ஏற்படுகின்றது. ஆனால் துரோகம் என்பது மட்டும் சூரியனுக்கும்...
கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 1)
பாராவின் கபடவேடதாரி நாவல் சூனியன் அல்லது சாத்தானிடம் இருந்து தொடங்குகின்றது. பூனைக்கதையை போல ஒரு மாய எதார்த்த கதையாக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். (அல்லது இது வேறு புனைவு வகையை சார்ந்ததா என்று தெரியவில்லை) சாத்தான்கள் என்று சொல்லப்படுகின்ற எதிர்மறை சக்திகளுக்கும் கூட தர்ம அதர்மங்கள் சட்ட திட்ட விதிகள் இருக்க முடியுமா என்ன? என்ற ஆச்சரியம் தான் முதல் அத்தியாயத்தில் எனக்கு ஏற்பட்டது. அல்லது ஒருவேளை...
கபடவேடதாரி – ஓர் அறிமுகம்
மீண்டும் ஒரு நாவலுக்குள் வாழத் தொடங்குகிறேன். எனக்கு இதைத் தவிர வேறொன்றும் தெரியாது. எழுதுவது. அல்லது எழுதுவதைக் குறித்து நினைத்துக்கொண்டிருப்பது. நினைத்துக்கொண்டிருக்கும் நாள்களில் எதையாவது கிறுக்கிக்கொண்டிருக்கிறேன். எழுதத் தொடங்கிவிட்டால் வேறு ஒருவனாகிவிடுகிறேன். இப்போது தொடங்கியிருக்கும் இந்நாவல் எனக்குச் சிறிது வினோதமானது. ஏனென்றால் இரண்டு முறை இதனை எழுத ஆரம்பித்துப் பாதியில்...
கபடவேடதாரி – promo video
கபடவேடதாரி – விமரிசனப் போட்டி FAQ
1. எங்கே படிப்பது? bynge appல் வாசிக்கலாம். வாரம்தோறும் இரண்டு அத்தியாயங்கள். புதன் மற்றும் சனிக் கிழமைகளில் வெளியாகும். 2. appஐ எங்கே பெறுவது? இப்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளது. இலவசமாகத் தரவிறக்கலாம். கூகுள் அல்லது ஃபேஸ்புக் ஐடியின் மூலம் லாகின் செய்தால் போதுமானது. விரைவில் iOSக்கும் வந்துவிடும். (தொடர் முடிவடைவதற்குள்ளாகவாவது.) 3. விமரிசனம் எழுதும் போட்டி குறித்து? 50 முதல் 200 சொற்கள் வரை...