சகவாச தோஷத்தால் சில நாள்களாக நிறைய ஆங்கில டப்பிங் படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இத்துறையில் முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு முதலில் சற்று அதிர்ச்சியாக இருக்கும். திரைப்படம் பார்க்கும் உணர்வு என்பது, அது தரவேண்டிய நியாயமான சந்தோஷத்தைத் தூரத் தள்ளிவிட்டு, பேயறைந்தது போல் உட்காரச் செய்துவிடும். ஆனால் பழகப் பழக, இதனை ரசிக்க முடிகிறது.
இந்த வகையில் சமீபத்தில் பார்த்து முடித்தவை: இரண்டு மூன்று ஹாரி பாட்டர் படங்கள், டைட்டானிக் வகையறா நான்கு [கப்பல் படங்கள்], டைனசார் படங்கள் மூன்று, ஒரு கௌபாய் படம், அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்கள் ஆறு, சம்பந்தமே இல்லாமல் ட்ராய் [ஆம், தமிழில் ட்ராய்!], விஜய் டிவி டவுன்லோடட் படங்கள் [சீன, கொரிய மொழிப் படங்கள்] ஒரு சில.
டப்பிங் படங்களின் வெற்றி என்பது அநேகமாகப் பிரதான கதாபாத்திரத்துக்குக் குரல் கொடுப்பவர் எவ்வளவு பொருந்துகிறார் என்பதில் இருக்கிறது. அவரது தோற்றமும் அவருக்கு வழங்கப்படும் குரலும் பொருந்திவிட்டால் ஒரு பத்திருபது நிமிடங்களுக்குள் படத்தில் ஆழ்ந்துவிட முடிகிறது. மாறாக, கமலஹாசன் மாதிரி இருக்கிற ஓர் ஆளுக்கு வடிவேலு குரல் அமைந்துவிட்டால் போச்சு. முழுப்படமும் இம்சை அரசனாகிவிடுகிறது.
Read More »‘வரேண்டி மவளே, வெச்சுக்கறேன் ஒன்ன…’