Categoryதிரைப்படம்

நாக்கமுக்க : மண்ணிசையின் மரண ஓலம்

சுப்ரமணியபுரம் படத்தின் ‘கண்கள் இரண்டால்’ பாடலுக்குப் பிறகு நான் தினசரி கேட்கிற பாடலாகியிருக்கிறது நாக்கமுக்க. பொதுவாகக் குத்துப்பாடல் ரசிக்கிறவனில்லை நான். தாளத்தைவிட இசையில்தான் நாட்டம் அதிகம். அந்த வகையில் என் தலைமுறை இசையமைப்பாளர்களில் எனக்கு ரெஹ்மானைவிட கார்த்திக் ராஜா மிக நெருக்கமானவர். வித்யாசாகர், பரத்வாஜ் இருவரும்கூட என்னைக் கவர்ந்த சில பாடல்களைத் தந்தவர்கள் என்றாலும் அவ்வப்போது அவர்கள்...

குசேலன்

இந்தப் படத்தில் ஒரே ஒரு ஷாட்டை நான் மிகவும் ரசித்தேன். சலூன் வைத்திருக்கும் ஹீரோவான பசுபதி, கட்டிங் – ஷேவிங்குக்கு அதிரடி விலைக்குறைப்பு செய்து ஒரு போர்ட் எழுதி வைப்பார்.
கடைசி வரியாக ‘கண்டிப்பாக அக்குள் ஷேவிங் கிடையாது’ என்றிருக்கும்.
துரதிருஷ்டவசமாக பி.வாசு இப்படம் முழுதும் அதைத்தான் செய்திருக்கிறார்.
* நான் ரசித்த நாகராஜனின் விமரிசனம் இங்கே.

சுப்ரமணியபுரம் – நிறைவேறிய கனவு!

[கிழக்கு பதிப்பகத்தின் சீனியர் துணையாசிரியர்களுள் ஒருவனும் என் நண்பனுமான ச.ந. கண்ணன், தன்னை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பாதிக்கும் படங்களைக் குறித்துத் தனது நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலில் ஒரு கட்டுரை எழுதி அனுப்புவான். நேற்று சுப்பிரமணியபுரம் பார்த்துவிட்டு அவன் அனுப்பிய மடல் இது. கருத்தளவில் எனக்கும் இதில் உடன்பாடென்பதால் தனியே நான் ஒன்று எழுதவிருந்ததைத் தவிர்த்துவிட்டு, அவனது கட்டுரையை...

சுப்ரமணியபுரம்

படுகொலை என்பதுதான் களம். அது தனி நபரா, சக மனிதர் ஒருவர் மீதொருவர் வைக்கும் நம்பிக்கையா என்பதல்ல முக்கியம்.  கொல், கொன்றுவிடு. தீர்ந்தது விஷயம். உலகிலேயே ஜனநாயகம் தழைப்பதற்காக, அதனையே கற்பழித்து அடித்துக்கொன்று புதைத்துக் கோயில் கட்டி ஆறு கால பூஜையும் செய்யும் ஒரே தேசம் நம்முடையது. நடந்து முடிந்த காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் திருவிழா நிறைய அதிர்ச்சியையும் நிறைய அலுப்பையும்...

தசாவதாரம் குருவி-2

உங்களில் எத்தனை பேர் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த குருவி படத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. கமல்ஹாசனின் தசாவதாரம் தொடக்கம் முதலே எனக்கு ஏனோ குருவியை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. அதில் விஜய் சிங்கப்பூரிலிருந்து ஒரு வைரக்கல்லைத் தூக்கிக்கொண்டும் பிறகு துரத்திக்கொண்டும் இந்தியா வருகிறார். இதில் கமல் அமெரிக்காவிலிருந்து ஆந்திராக்ஸ் போன்ற ஏதோ ஒரு நாசகார ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டும்...

குருவி

காம்பவுண்டு சுவருக்கு மேலே ஏறி நின்று அண்டர்வேர் தெரிய லுங்கியை மடித்துக் கட்டிய தாடிக்காரன் ஒருவன் பால் பாக்கெட்டைப் பல்லால் கடித்துப் பிய்த்தான். ஸ்பீக்கர் செட் வைத்து உள்ளே வந்த வண்டி டண்டண்டன் டர்னா என்றது. இளைய தளபதியின் முகத்தில் ஆவின் பால் பீய்ச்சியடிக்கப்பட்டது. ஒன்று. இரண்டு. மூன்று. நாலு. பத்து. இருபது. அதற்குமேல் எண்ணமுடியவில்லை. வினைல் போர்டுகள் அனைத்தும் பாலாபிஷேகம் பெற்றன. கூட்டம்...

Fitna – தேவையற்ற அச்சுறுத்தல்

குமுதம் ரிப்போர்ட்டரில் கடந்த 198 இதழ்களாக வெளிவந்துகொண்டிருக்கும் என்னுடைய ‘மாயவலை’ தொடரின் இறுதி அத்தியாயங்களை எழுதிக்கொண்டிருந்த வேளையில், நெதர்லந்த் அரசியல்வாதி கீர்ட் வைல்டர்ஸின் (Geert Wilders) ஃபித்னா (Fitna) என்னும் குறும்படத்தைக் காண நேர்ந்தது. பரம சுதந்தர மனோபாவம் மற்றும் வாழ்க்கை முறைக்குப் பெயர் பெற்ற நெதர்லந்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரிக்கத்...

என்னைப்பார், இட்லி இறங்கும்!

அவளை என்னால் ஐந்து நிமிடங்களுக்குமேல் ரசிக்க முடிந்ததில்லை. ஆனால் என் குழந்தை உள்பட எனக்குத் தெரிந்த எல்லா குழந்தைகளுக்கும் அவள் ஒரு ரோல் மாடலாக இருக்கிறாள். அவள் முகம் அச்சிட்ட கைக்குட்டைக்கு மவுசு இருக்கிறது. அவள் படம் போட்ட தம்ளரில் பால் கொடுத்தால் உடனே உள்ளே இறங்குகிறது. துணிக்கடைக்குச் சென்றால் குழந்தைகள் கேட்கும் முதல் கேள்வி, டோரா போட்ட கவுன் இருக்கா? டோரா போட்ட ஃப்ராக் இருக்கா...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter