Categoryபுத்தகம்

தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகள்

தினத்தந்தி வெளியீடான ‘வரலாற்றுச் சுவடுகள்’ புத்தகத்தை நேற்று வாங்கினேன். நல்ல பேப்பர் மசாலா தோசை அளவில் எண்ணூறுக்கு மேற்பட்ட பக்கங்கள். மொழுமொழுவென்று ஒவ்வொரு பக்கமும் படிக்காதே, முதலில் தடவு என்கின்றன. எல்லாம் கலர். கனமான அட்டை. கலைஞர் புண்ணியத்தில் முன்னூறு ரூபாய். இந்த வரலாற்றுச் சுவடுகள் தொடராக வந்துகொண்டிருந்தபோதே கொஞ்சகாலம் விடாமல் படித்திருக்கிறேன். ஆனால் பொதுவாகத் தொடர் படிக்கும்...

இந்த வருடம் என்ன செய்தேன்?

பல வருடங்களாக எழுதிக்கொண்டிருந்த காஷ்மீர், அயோத்தி தொடர்பான அலகாபாத் உயர்ந்தீமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எழுதிய ஆர்.எஸ்.எஸ் – இரு நூல்களும் வருகிற ஜனவரி மாதம் வெளியாகின்றன. இந்த இரு புத்தகங்களைப் பற்றியுமே தனித்தனிக் குறிப்புகள் எழுத நினைத்திருந்தேன். நேரமின்மையால் தள்ளிப் போகிறது. விரைவில் எழுதிவிடப் பார்க்கிறேன். இது, நூல்கள் வெளிவருவதை உறுதி செய்யும் அறிவிப்பு மட்டுமே. இவை தவிர, நான்...

மாமியும் சுண்டலும்

நவராத்திரி. கிடைத்த சான்ஸை விடாதே என்று உள்ளுணர்வு குரல் கொடுக்க, பச்சை கலர் பட்டுப்புடைவை அணிந்த குண்டு மாமி, பக்கத்து வீட்டு கொலு பொம்மைகளுக்கு எதிரே உட்கார்ந்து கர்ண கொடூரமாகப் பாட ஆரம்பிக்கிறார். ஆலாபனை, பல்லவி, அனு பல்லவி, சரணம், சிட்ட ஸ்வரம், கெட்ட ஸ்வரம் எல்லாம் போட்டு, தவறியும் சுதி சேராமல் அவர் பாடிக்கொண்டே போக, ஒரு மரியாதைக்குப் பாடுங்கள் என்று சொல்லிவிட்ட அந்தப் பாவப்பட்ட பக்கத்து...

மூன்று காப்பியங்கள்

தமிழின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் இலக்கியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை மிக முக்கியமானவை. இந்த ஐந்து காப்பியங்களுள் வளையாபதியும் குண்டலகேசியும் இன்று நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. இரண்டிலும் மிகச்சில பாடல்கள் மட்டுமே நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. கிடைக்கிற பாடல்களை வைத்து இந்தக் காப்பியங்கள் எதை, யாரைப் பற்றிப்...

பேயோன் 1000

எனக்கு அறிமுகமான காலம் தொடங்கி இணையத்தில் நிறையப்பேர் புதிதாக எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இணையம் பிறப்பித்த எழுத்தாளர் என்று பேயோனைத்தான் சொல்லத் தோன்றுகிறது. அவர் மக்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்; ட்விட்டருக்காகப் புனைபெயரில் எழுதுகிறார் என்று பலபேர் சொன்னார்கள். ஜெயமோகன் தொடங்கி, கோணங்கி வரை பலபேரது பெயர்கள் பேயோனுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டுக் கைவிடப்பட்ட கதை அநேகமாக தமிழ்...

நண்பா, வணக்கம். காலம் கலிகாலம். நீயும் நானும் சந்திக்கும்போதெல்லாம் உலக அரசியல் பேசி உருப்படாமல் போவதே வழக்கமாக இருந்துவந்திருக்கிறது. இந்த முறை உனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன். நாம் அரசியல் பேசப்போவதில்லை. அக்கப்போர்களுக்கு இம்முறை இடமில்லை. யார் யாரைக் கவிழ்த்தார்கள், எங்கே என்ன புரட்சி, ஒசாமா பின்லேடன் கிடைப்பாரா மாட்டாரா, மூன்றாம் உலக யுத்தம் வருமா வராதா, எண்ணெய் விலை இன்னும் ஏறுமா, இந்தப்...

மேற்கு வழியே கிழக்கு

சந்திரசேகரன் கிருஷ்ணனின் இந்தப் பதிவை வாசிக்கவும். கிழக்கு புத்தகங்களை சொந்தமாக வாங்கித்தான் படிக்க வேண்டுமென்பதில்லை. வாடகைக்கு எடுத்தும் வாசிக்கலாம் என்கிறார். நாநூறு சொற்களுக்குக் குறையாமல் ஒரு மதிப்புரை மட்டும் வேண்டுமென்கிறார். ‘வாடகைக்கு வாசிக்கலாம்’ என்று சொன்னாலும் வாடகைப் பணம் என்று ஏதும் வசூலிப்பதில்லை. இலவச நூலகம் மாதிரிதான். இப்போதைக்கு நாற்பது நூல்களை இந்தத்...

கண்காட்சி, பயிலரங்கம், கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு வழியாக முடிந்தது. வழக்கத்தைவிட அதிக மக்கள் கூட்டம், அதிக விற்பனை, அதிக சுவாரசியங்கள். பதினோறாம் தேதியே இதனை எழுதாததன் காரணம், உடம்புக்கு முடியாமல் போய்விட்டதுதான். கண்காட்சி சமயம் என்னவாவது படுத்தல் ஏற்படுவதென்பது என் ராசி. சென்ற வருடம் மாதிரி கால் கட்டு போட்டுக்கொண்டு வீட்டோடு முடங்கிவிடாமல் இம்முறை பத்து நாளும் செல்ல முடிந்தது பெரிய விஷயம் என்று...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!