ArchiveMarch 2008

நாய்க்காலம்

ஜனவரி 1985 முதல் சென்னை நகரத்தின் ஒரே பேட்டையில் தொடர்ந்து வசித்து வருபவன் நான். மேம்பாலங்களுடனான எனது உறவு அன்றைய தினமே தொடங்கியது. செங்கல்பட்டு மாவடத்தின் ஒரு சிறு கிராமத்திலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் நாங்கள் தாம்பரம் எல்லையைக் கடக்கவிருந்த சமயம் ஒரு மேம்பாலப் பணி நடந்துகொண்டிருந்தது. சிறிய மேம்பாலம்தான். ஆனால் சுமார் அரைமணி வழியில் காத்திருக்கவேண்டியிருந்தது. அதற்குமுன் ஒரு மேம்பாலம் எப்படி...

காதலின் இசை

அவன் அப்போது பிரபலமில்லை. உள்ளூரில் மட்டும் ஒரு சிலருக்கு அவனுடைய இசையின் அருமை தெரியும். என்றைக்காவது எதையாவது சாதிக்கக்கூடியவன். இன்றைக்குச் செய்யும் இம்சைகளை அதனால் பொறுத்துக்கொள்வோம். நள்ளிரவு தொலைபேசியில் அழைத்து பாடிக்காட்டுகிறாயா? சரி, பாடு. கஞ்சா குடித்துவிட்டு சுய சோகத்தில் புலம்பி வேலையைக் கெடுக்கிறாயா? செய். பணப்பிரச்னை. அது எப்போதுமிருக்கிறது. இந்தா, என்னிடம் இப்போது இருப்பது இவ்வளவே...

இரண்டில் ஒன்று

நினைத்து ரசிப்பதற்கு ஏற்ற தருணங்களை வாழ்வின் இளமைப்போதுகள் எப்போதும் காப்பாற்றி வைக்கின்றன. மழைக்காலத்துக்கான உணவைக் கோடையில் சேமிக்கும் சிற்றெறும்பு போல. அப்படியொரு தருணம், துறவியாகலாம் என்று முடிவு செய்து நான் தாடி வளர்க்கத் தொடங்கியது. நகர்ந்த தினங்களில் ராமா என்னும் இமாலய சுவாமி ஒருவரின் [இவர் துறவியல்ல. மனைவி மக்கள் உண்டு.] Living with the Himalayan Masters  எனும் புத்தகத்தை வாசிக்கையில்...

நகர(விடா) மையம்

பிறந்து வளர்ந்த சென்னைக்குள் என்னை அந்நியனாக உணரச்செய்யும் ஒரே தலம் என்கிற வகையில் எனக்கு அந்த ஷாப்பிங் மால் ஒரு முக்கியமான க்ஷேத்திரம். தீராத பிரமிப்புடன் திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்கிறேன். என்ன இது, எப்படி இது என்று ஒவ்வொருமுறையும் வியந்தே போகிறேன். நமக்கான இடமல்ல இது என்று எப்போதும் உறுத்தினாலும், அவகாசம் கிடைத்தால் போய்ப்பார்க்கலாம் என்றே அடிக்கடி தோன்றுகிறது. அவுட் டோர் ஷூட்டிங்குக்கு...

இங்கே இருக்கிறேன்!

வணக்கம். மூன்று வருடங்கள் இருக்குமா? பெரிய இடைவெளி இல்லை. மீண்டும் இணையத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இம்முறை சொந்தத் தளம் என்பதால் சற்றே கூடுதலாகவும். இடைப்பட்ட காலங்களில் இங்கு எழுதாமல் இருந்தேனே தவிர வாசிக்காமல் இல்லை. மகிழ்ச்சி கொள்ளவும் மௌனம் காக்கவும் புன்னகை செய்யவும் புல்லரிக்கவும் அதிர்ச்சி கொள்ளவும் அடங்கிப் போகவும் மிரள வைக்கவும் மென்று விழுங்கவும் எப்போதும் கிடைத்தபடிதான்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter