கடிதம்

சில கடிதங்கள்

தினமலர் தேர்தல் களத்தில் நான் எழுதும் பத்திக்கு நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. இதில் எழுபது அல்லது எண்பது சதவீதம் பிரசுரிக்க இயலாதவை. நான் மட்டுமே படித்து ரசிப்பதற்காக எழுதப்படுபவை. அவை போக மிச்சமுள்ளவற்றில் சிலவற்றை இங்கே பிரசுரித்திருக்கிறேன். பொறுமையாக எடுத்துத் தொகுக்கவும் , பிழை திருத்தம் செய்யவும் நேரமில்லை. நண்பர்கள் தவறாக எண்ணவேண்டாம். இனி வரும் நாள்களில் மின்னஞ்சல்கள் வரும்போதே தனியே சேமித்து வைக்கப் பார்க்கிறேன். அப்போது பிரசுரிக்க வசதியாக இருக்கும்.

0

அன்புள்ள கட்டுரையாசிரியர் பா.ராகவன் அவர்களுக்கு வணக்கம்.

தினமலரில் “தேர்தல் களம்” பகுதியில் தாங்கள் எழுதி வரும் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். கட்டுரைகள் விமரிசன நோக்குடன் கிண்டல் தொனி கலந்த நடையில் எழுதப்பட்டு வருகின்றன.உங்கள. பரவலாக வாசிக்கப்பட்டு ஒரு வகையில் சிந்திக்கத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.
அன்புடன்,
ம.திருமலை,
முன்னாள் துணைவேந்தர்.

0

அன்புமிக்க பாரா அவர்களுக்கு,

இன்றைய தினமலரில் உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது. வருடம் ஐந்து சதவிகிதம் இட ஒதுக்கீட்டை குறைத்துவந்தால் இருபது ஆண்டுகளில் நமது தேசம் இட ஒதுக்கீடு இல்லாத நாடாக மாறி விடும். கொடுமை என்ன வென்றால் நகரத்தார் சமூகத்தினை மிக பிற்படுத்தப்பட்ட சமூகமாக அறிவிக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஒதுக்கீடு இல்லையென்றால் ஜாதி பிரச்சனை குறையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. புரட்சிக்கவிஞ்சரான பாரதியை எடுத்ததற்கெல்லாம் மேற்கோள் காட்டும் கழகத்தினர் வசதியாக ‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்பதை மறந்து விடுகின்றனர். மறதி ஒரு வர ப்ரசாதமா அல்லது சாபமா என்பதை சாலமன் பாப்பையாதான் சொல்ல வேண்டும்.
அன்புடன் ,
ஆர்.நந்தகுமார்.

0

இன்னார் கட்டுரையாளர், எழுத்தாளர் ஆகலாம்’ அல்லது ‘இன்னார் ஆகக்கூடாது’ என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. படாத பாடுபட்டு அடைந்த சுதந்திரமும் ஜனநாயகமும், கேவலம்,ஒருத்தருக்கு இந்த விருப்ப சவுகரியத்தைக் கூடக் கொடுக்கவில்லை என்றால், அப்புறம் என்ன தண்ட கருமாந்திரத்துக்கு ஜனநாயகமும், சுதந்திரமும்? எனவே, பா. ராகவன் எழுத்தாளராக ஆசைப்படலாம். தப்பே இல்லை.

L. சரவணன்

0

அய்யா ராகவா நீங்களாம் பத்திக்கையாளர்களா??? மாநாட்டில் எடுத்துரைத்த நல்ல கருத்துக்களையும் அப்படியே சொல்லியிருக்கலாம்… மதுவிலக்கு தமிழ்நாட்டுக்கு தான் கொண்டு வர எண்ணுகிறார்கள் மாநாட்டுக்கு வந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டவர்கள் தான்.. அவர்களா திருந்தனும்னா எதுக்குப்பா மதுவிலக்கு… என்ன சொன்ன ஊழலையும் கொசுவையும் ஒழிக்க முடியாதா.. உன்னலாம் பத்தரிக்கையாளன்னு சொல்ல வாய் கூசுது.. சமுதாயத்தின் மீது அக்கறை அற்ற சமூக விரோதி நீ.. இனி நீ எழுதாத சமூகம் நல்லா இருக்கும்..
இப்படிக்கு
நல்லதை வரவேர்ப்பவர்
க ஞானசூரியன்

0

Dear Sir
I have read your article published in Dinamalar dated 17.3.16 about the murder of dalit man in udumalapet.you have mentioned about the rulling party and the opposition party could not raise their voice about this murder . These corrupted leaders are not in a position to raise their voice against these murders.Only the people of Tamilnadu could come forward to eradicate these corrupted leaders.

The following steps are to be taken
1.Chief minister,primeminister should be elected for 2 times only.
2.interparty democracy should be followed among the parties
3.Chiefminister or primeminister congress (US system) should be followed
4.The personality cult should be destroyed

Kindly make suggestions

Regards
M.Selvakumaran

0

Respected sir,

I have noticed from the above news (reference as above), I am sorry to say that it is totally one sided and very partial. It is right that if the news headline goes with the headline as ‘பொன்னான வாக்கு -அ.தி.மு.க.,வின் கள்ள மவுனம்’. It would have been proper, opt and correct news.
In the past two days, from DMK, Mr.Stalin (Treasurer) and Mr.Kalaignar (Leader of DMK) have very strongly condemned the horror ‘day light’ brutal killing at Udumalaipet. Only Jaya (CM of Tamilnadu) has not said anything nor condemned against this brutal caste based day light killing..
In that case, what is the need for you to add DMK’s name unnecessarily and that is totally unacceptable.
Hope and wish to know the reason for your false implication of DMK;s name; hence I request you to find out the truth and provide the correct information and details..

Thanks and regards,
S Viswanathan

0

Dear sir,

Regular leader of your article in dinamalar daily.

Since it is the election time,most of the political party’s would take the recent murder of a young man in udumalpet.

Why don’t you write a article on this very sensitive issue.

Leave the cast,political and social issue.it is brutal murder which has to be condemned by all and the perpetuators to be brought under justice.

In my openion the root cause for this cinima,mobile and internet.

What sort of maturity we could expect from a 22 years old boy and 20 years girl to face the life and its struggle.

No body in this country to talk about morality and human value.

Take this mega serials irrespective of any languages.

All shown and highlighted is crap which is not going to help anybody.

It is very unfortunate all the so called intellectuals talk only the effect.not the cause.

Saying goes when there is a cause there would be an effect.

Sincerely expecting your article on this subject.

Thanks and regards.

Sundaram.

0

Dear Mr Raghavan

I enjoyed reading your article in Dinamalar dated 9th March. You have very humourously depicted the Aryan food and the Dravadian Emotions on the subject. In the election times Dravadian parties will not make it an election issue on the food habits because they very well know the Aryan votes do matter most and not the Aryan food or habits or Aryans as a whole. Once they are in the chairs, then the language issues and other unimportant issues will take centre stage because the Dravadian Parties fully well know that the general public will not bother them with the issues that will not affect them.

I am sorry that Tamilians can be easily fooled in Election Times with the famous Aryan Biriyanis; this land will be saved only when the general public starts omitting the Biriyanis from their menus.

Thanks for the article and do keep writing….

Regards
Ramnath from Palani

0

Dear Mr Para,

You hit the nail on the head with your write-up on the silence of DMK and ADMK regarding the honour killing of Sankar in Dinamalar dated March 17.

I feel the two parties are more culpable than the killers themselves for the atrocity.

I want to thank you for writing the truth.

Regards
TN Raghu

0

Dear Raghavan. Vanakkam
I have read your article in DINAMALAR today. Well written. DMK and aiadmk
Stealthy silence on udumalpet murder
Very rightly said that it is nothing
But votebank politics. Buy peoples
Welfare front strongly condemned it
Which you have not mentioned
In many placed. Protest meetings are
Held
I very much appreciate
Your progressive thought

Com v Santhanam. Chrompet

0

Mr.. Ragavan, seems like you are a ADMK guy… Why you write in a newspaper against Vijaykanth.. ???? Go and do campaign like what Vadivel did.. Good comedy.. Wait and see… You will see that you are totally wrong… Wait until May 16.

Krishnan AR

0

ஆசிரியர் பா.ராகவன் அவர்களுக்கு

இன்று தினமலர் தேர்தல் களம் பகுதியில் இளமை எனும் பூங்காற்று தலைப்பில் வந்த கட்டுரையை படித்தேன் வியப்பாக இருந்தது. காரணம் நமக்கு நாமே டூரெல்லாம் போய் வந்திருக்கிறார் ஆக்டிவாக இருக்கிறார் என்று எழுதியிருந்தீர்கள் நீங்கள் கட்சிக்கு வெளியில் இருந்து பார்க்கிறீர்கள் அதனால் அழகாக தெரிகிறது.ஒவ்வொரு மாவட்டம் தோரும் மாவட்டச்செயலாளர் என்ற பெயரில் 35, 40 வருடங்களாக மாவட்டத்தை கோலோச்சித்துக்கொண்டு வலம் வருகிறார்கள் முதலில் அவர்களை மாற்றச்சொல்லுங்கள் ஓட்டுக்கள் தானாகவே வந்து விழும் உதயசூரியன் சின்னத்தில்.

திலகர் தினகர்ராஜ்

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி