
ஒரு நாவலை எழுதியவன் எதிர்கொள்ளும் வினாக்களுள் ஆகக் கொடூரமானது, இந்நாவல் எதைப்பற்றிப் பேசுகிறது? சுருக்கம் என்ன?
எல்லா நாவல்களுக்கும் இது வரத்தான் செய்கிறது. தவிர்க்க முடியாது. வாசிப்பு என்னும் செயல்பாடு ஒரு கிரகத்திலும் மக்கள் இன்னொரு கிரகத்திலும் வசிக்கும் வினோதமான தீபகற்பத்தில் நாம் வாழ்வதில் உள்ள சிக்கல் இது.
கீழே உள்ள வரிகள், சலம் நாவலில் இருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை என் பதிப்பாளர் ராம்ஜி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தினமும் ஒன்றிரண்டாகப் பிரசுரித்து வந்தார். இந்த வரிகள் இந்நாவலின் தன்மையை ஓரளவு உங்களுக்குச் சுட்டிக்காட்டலாம். ஓரளவுக்குத்தான். நாவல் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது. முன்பதிவு செய்தோர் அனைவருக்கும் அன்றே அனுப்பிவைக்கப்பட்டுவிடும். படித்தவர்கள் பேசத் தொடங்கும்போது சர்சுதி மீண்டும் ஊற்றெடுத்துப் பாயத் தொடங்கும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.