Blog

ஐந்து நாவல்களின் புதிய மறு பதிப்புகள்

என்னுடைய ஐந்து நாவல்களின் புதிய மறுபதிப்புகள் ஜீரோ டிகிரி பப்ளிஷிங்கில் வெளியாகின்றன. முன் பதிவு செய்வதன் மூலம் விலையில் இருபது சதம் தள்ளுபடி பெறலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
கீழே உள்ளவை புதிய பதிப்புக்கான அட்டைப் படங்கள். அனைத்தையும் வரைந்தவர் ராஜன்.
இந்த ஐந்து நாவல்களையும் என்னுடைய பிற நூல்களையும் ஜீரோ டிகிரி இணையத்தளத்தின் மூலம் வாங்க இங்கே செல்லவும்.

 

புதிய மறுபதிப்புகள் – அறிவிப்பு

கடந்த ஜனவரியில் என்னுடைய 15 புத்தகங்களின் புதிய மறு பதிப்பு ஜீரோ டிகிரி பப்ளிஷிங் மூலமாக வெளிவந்தது. அதன் பிறகு ஆளாளுக்கு கோவிட் வந்து ஆளுக்கொரு மாதம் அஞ்ஞாத வாசம் சென்றுவிட்டபடியால் வேலை சிறிது சுணக்கம் கண்டது. என்ன ஆனாலும் பூமி சுழலாதிருப்பதில்லை. இதோ மீண்டும் ஆரம்பித்துவிட்டோம். இன்னொரு பதினைந்து புத்தகங்களின் புதிய மறு பதிப்புக்கான அறிவிப்பும் முன் பதிவுச் சலுகை விலைகளும் வெளியாகியிருக்கின்றன...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 30)

இந்த அத்தியாயத்தில், சூனியன் தன்னை போலவே பாராவும் ஒரு திட்டத்தை வகுத்திருப்பானென முடிவு செய்கிறான்.ஆனால் தன்னுடைய திட்டம், பாராவின் திட்டத்தைவிட மேலானது என நினைத்துக் கொள்கிறான். ஓரளவுக்கு பாராவின் திட்டத்தைச் சூனியன் கண்டு கொண்டதாகவும் யூகித்து கொள்கிறான். சூனியன் வனத்தில் ஒரு தங்கத் தவளையைப் பிடித்துத் துணி மடிப்புக்குள் வைத்து, அவனின் படைப்புகளிடம் காட்டுகிறான். அதை எதற்குக் கொண்டு வந்தான்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 29)

சாகரிகா, ஷில்பா மற்றும் கோவிந்தசாமியின் நிழலும் காலை உணவை முடித்து எங்கோ புறப்பட எத்தனிக்கின்றனர். சாகரிகா தான் இந்தத் திட்டத்தைக் கையாள்கிறாள். கிளம்பும் வரையில் இம்மூவரின் உரையாடல் மிகச் சுவாரசியமாக அமைந்திருக்கிறது . ஒரு மின் வாகனத்தில் மூவரும் நீல வனத்தை நோக்கிப் பயணிக்கின்றனர். போகும் வழியில், நீல வானத்தைப் பற்றிச் சாகரிகா சொல்லிக் கொண்டே வருகிறாள். அங்கு நிலவி வரும் சமஸ்தானங்களை பற்றியும்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 31)

சில அத்தியாயங்களாக காணாமல் போயிருந்த கோவிந்தசாமி இந்த அத்தியாயத்தில் வந்துவிட்டான். அவன் மருத்துவமனையில் இருந்துகொண்டு தன்னுடைய மனைவியை பற்றிய கடந்த கால நினைவுகளை எண்ணிப் பார்த்து ஏக்கமுடன் இருக்கிறான். அந்த இடத்திலும் அவனுக்கு தேசியத்தின் மீதும் தாமரையின் மீதும் இருக்கும் பற்று சிறிதும் குறையவில்லை. தலைகீழாக நின்றாலும் நீலநகரத்தில் தாமரை மலராது என்று ஒரு சாதாரண நர்ஸுக்கு கூட தெரிந்திருக்கிறது...

காவ்யகுமாரி

உயிர்மை இதழில் என் புதிய சிறுகதை காவ்யகுமாரி வெளியாகியுள்ளது.   எல்லாம் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் நடந்து, சென்ற வாரம் திருமணமும் முடிந்துவிட்டது. கஜகஸ்தான் சிட்டிபாபு மூன்று நாள் விடுப்பில் வந்து திருமணத்தை நடத்திவிட்டு, அம்மாவையும் தங்கச்சியையும் பொறுப்போடு பார்த்துக்கொள் என்று மென்பொருள் சங்கருக்கு புத்திமதி சொல்லிவிட்டுத் திரும்பவும் கஜகஸ்தானத்துக்குப் போய்ச் சேர்ந்தார். இங்கே...

எழுத்தாளர்-வாசகர் உறவு எப்படி இருக்க வேண்டும்?

கணவன் மனைவி உறவினைப் போல. காதலன் காதலி உறவினைப் போல. ஆசிரியர் மாணவர் உறவைப் போல. நண்பர்களைப் போல. கடவுள் பக்தன் உறவு நிகர்த்து. இன்னும் சொல்லலாம். அவரவர் உவப்பு. அவரவர் மனப்பாங்கு. ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒரு வாசகரின் கமெண்ட்டுக்கு பதில் சொல்லாமல் நகர்ந்து சென்றால் உடனே அதனை ஒரு கொலை பாதகச் செயலாகக் கருதிவிடும் போக்கு பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது. அதைக் கூடச் சகித்துக்கொள்ளலாம். கேவலம் கொலை...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 28)

இந்த அத்தியாயம் முழுவதுமே, சூனியன் விளக்குவது போலவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சூனியன் அவனது கிரகத்தின் வனங்களை விவரிக்கிறான். நீல நகரத்தின் வெளியே மேற்கு துருவ பகுதியில் அடர்ந்த வனம் ஒன்றை கண்டறிகிறான், அங்கே மிருகங்களுடன் மக்களும் வசித்து வருகிறார்கள். நீல வனவாசிகள் சுவாரஸ்யமானவர்களாக இருக்கின்றனர். மிருகங்களை வாசலில் கட்டி வைத்திருப்பதை காண்கிறான், மிருகங்களை கொண்டு நீல வனவாசிகளின் வாழ்க்கை...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!