இதுவரை சிரிப்பதற்கு இதில் எதுவுமில்லை என்றிருந்தேன். இந்த அத்தியாயம் அதை தோற்கடித்து விட்டது. வெறும் கதையாக மட்டும் படிக்காமல் எண்ணத்தில் கதையை ஓடவிட்டால் ஹாலிவுட் படங்களை மிஞ்சிவிடும் அபார கற்பனை ஆசிரியருக்கு. நீல நகரத்தில் உலா வரும் சூனியனும் கோவிந்தசாமியின் நிழலும் அந்நகரத்தையும் அங்கு வசிக்கும் மனிதர்களையும் பார்வையிடுகிறார்கள். நீல நகரத்தின் கட்டிடங்கள் மொக்கையான என்ஜினீயரிங் டிசைன் என்பதால்...
கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 5)
கோவிந்தசாமியை மிகவும் பிடித்ததற்கு காரணம் அவன் சிறந்த மூடனாக இருந்தான். ஒரு மூடனால் சூனியனுக்கு என்ன நடந்துவிடப்போகிறது?நான்கு அத்தியாயங்களை கடந்து ஐந்தாம் அத்தியாயத்திற்குள் பிரவேசிக்கும் போது நாம் யாராக இருந்து இக்கதையை படிக்கப்போகிறோம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். சூனியனா?கோவிந்தசாமியா?இப்போதைக்கு இருவருமே ஒன்றுதான். ஆனால் கோவிந்தசாமியாக இருப்பதில் ஒரு சிறு நன்மை இருக்கிறது அது நாம்...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 22)
எளிய மனிதர்கள் நீல நகரத்தில் இருந்தாலும்கூட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக்கொண்டே இருப்பார்கள் போல! கோவிந்தசாமியின் நிழல் தனக்கான அடிப்படை உரிமையைக் கோரி, யதார்த்தமாகவே கோஷமெழுப்புகிறது. துணைதேடும் நிழலின் விருப்பம் நியாயமானதாகவே படுகிறது. சாகரிகா-கோவிந்தசாமி நிழல் இணைவுக்கு ஷில்பா எல்லாவகையிலும் உதவுவார் என்று நினைக்கிறேன். ஒருவழியாக சாகரிகாவின் வீட்டில் தங்குவதற்குக் கோவிந்தசாமியின்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 21)
இந்த அத்தியாயத்தைப் படித்து முடிக்கும் சமயம், மனம் கனத்துப் போய் நிற்கிறது. கரு கலைப்பு குறித்து சாகரிகாவைச் சாடி உணர்ச்சிமிக்க ஒரு பதிவை ஏற்றம் செய்கிறான் சூனியன், அவன் தான் கோவிந்தசாமியை ஆக்ரமித்து, செம்மொழிப்ரியாவாகவும், பதினாறாம் நரகேசரியாகவும் பதிவுகளை செய்து வருகிறான். எதிர்பார்த்தது தான். செம்மொழிப்ரியாவுக்கு ஆதரவுகள் குவிந்தும், சாகரிகாவிற்கு எதிர்ப்புகள் வந்த வண்ணமாய் இருக்கிறது. மேலும்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 20)
இந்த அத்தியாயத்தில் மீண்டும் ஷில்பாவை களம் இருக்கிறார் எழுத்தாளர். ஷில்பாவின் அறிமுகத்திலிருந்தே சரியிலான கோணத்தில் அவளைப் பொருத்தி பார்க்க முடியவில்லை. ஒரு பக்கம் பிரஜை ஆகாமல் வெண்பலகையை வாசிக்கிறாள், இன்னொரு பக்கம் கோவிந்தசாமியுடன் நடந்த உரையாடலில் புதிதாய் சில விடயங்களை சேர்த்து சொல்கிறாள். யார் இவள்? – இந்த கேள்விக்கு குழப்பம் தான் மிஞ்சுகிறது. கலாசாரத்துறை செயலாளர் பதவிக்கு சாகரிகா...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 21)
மனித மனம் எண்ணிப் பார்த்திராத காரியங்களை எதிர்பாராத கணங்களில் அது ஒரு நட்சத்திரம் புதிதாக தென்படுவது போல நிகழ்த்தத் தொடங்கி விடுகிறது. கீதையைப் படித்துப் புரிந்து கொண்ட பிறகு சாகிறவனின் பிணம் கூட மணக்கும். தமிழ் உரையாடல்களில் ”ஜி” சேர்ப்பு பெண்கள் நைட்டிக்கு மேல் துண்டு போட்டுக் கொண்டு பலசரக்கு வாங்கப் போவது போல. குழம்பித் தெளிவதை விட கும்பிட்டுத் தெளிவது சுலபம். சாகசங்கள் திட்டமிட்டு...
கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 20)
சூனியன் வெண்பலகையில் கொழுத்திப் போட்ட நெருப்புப் பொறி படர ஆரம்பிக்கிறது. நீலநகர வாசிகள் அந்த பொறி பதிவு குறித்து விவாதிக்க ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் சொல்லி அழுத்துப் போன சாகரிகா வெண்பலகையிலும் தன்னிலை விளக்கம் தருகிறாள். சமீபத்தில் ஒரு பிரபல கவிஞருக்கு தர இருந்த விருது சார்ந்து அவருடைய கடந்தகால செயல்பாடுகள் குறித்து முகநூலில் நடந்த விவாத சாயல்கள் வெண்பலகையில்...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 21)
ஓர் அத்யாயத்தில் ஒருவண்டி கதையைத் திணித்து, வாசகர்களைத் திகட்ட திகட்ட வாசிக்குமாறு செய்திருக்கிறார். புதிது புதிதாகக் கதைமாந்தர்கள் வந்து குதித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் உடலளவிலும் மனத்தளவிலும் புதுமையாகவே இருக்கின்றன. கோவிந்தசாமிக்கு ஞானம், ஆன்ம அனுபூதி, திவ்யதரிசனம் இன்னும் இத்யாதி இத்யாதி கிடைத்துவிடும்போல. சாகரிகாவின் ‘நவீனப் பெண்ணிய வாழ்வுமுறை’ போற்றத்தக்கதாக உள்ளது...