தனக்கு வேண்டாம் என்ற ஒன்றை அவ்வளவு தெளிவாகவும், தைரியமாகவும் எடுத்து சொல்லும் நம் சாகரிகாவின் மீது பொறாமையாக இருக்கிறது. இந்த மனோதிடம் மட்டும் எல்லோரிடமும் இருந்துவிட்டால் எவ்வளவு உசிதமாக இருக்கும். மொழியறிவைக் கற்றுக்கொள்ள பிரஜையாக மாறினால் போதும் என்ற விதிமுறை பிரமாதம். மேலும் இந்த நகரில், மக்களிடையே எந்த ரகசியமும் இல்லை என்ற வழக்கமும் அழகு. இந்த அத்தியாயத்தில் மொழி நடையும், சொற்கட்டமைப்பும்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 6)
சூனியன் மற்றும் கோவிந்தசாமியின் நிழலோடு சேர்ந்து நாமும் நீல நகரத்திற்குள் நுழைந்து விட்டோம், மனிதர்களுக்கு இருப்பதை போல சூனியனுக்குள்ளும் தற்பெருமை ( நீல நகரத்தை அவனுடைய கிரகத்தோடு ஒப்பிட்டு பெருமை கொள்கிறான் ) கொள்ளும் மனோபாவம் இருக்கிறது, பல இடங்களில் சூனியனிடம் மனித உணர்வுகள் மேலோங்க ஏதோ காரணம் இருக்கும் என நினைக்கிறேன். நீல நகர கட்டட அமைப்புகள் மட்டும் வித்தியாசமாக இல்லை, அதில் வாழும்...
கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 5)
ஒரு கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அனால் நம் கோவிந்தசாமிக்கும், சாகரிகாவுக்கும் இடையில் அடிப்படை புரிதல் கூட இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. கோவிந்தசாமியின் முந்திய தலைமுறைகளின் வாழ்வை நகைச்சுவை கலந்த நடையில் வாசித்தது வெகு சுவாரசியமாய் இருந்தது. அடிப்படை புரிதல் இல்லாத இருவர் பிரிவது இயல்பு தான், மேலும் சொல்ல போனால் அது தான் இருவருக்குமே நல்லது. இது தெரியாத நம் கோவிந்த்...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 9)
‘பாரா’ என்று அழைக்கப்படும் நபர் யார்? இதில் எப்படி நுழைந்தார். எதற்காக நுழைந்தார்? என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் சூனியன் அதெல்லாம் உனக்கெதுக்கு? கதையைப் படி என்றதும் ஒன்பதாவது அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். மண்வாசனை வீசுவது போல் அரசியல் வாசனை இந்த அத்தியாயம் முழுவதும் தெறிக்கிறது. அரசியலைப் பற்றியும் அதனோடு தொடர்புடையவர்களையும் சொல்லிச் சென்றுள்ளார். சமூகம் பெண்ணுக்குச் சில...
கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 10)
ஒருவன் தான் சைக்கோ என்று கூறப்படுவதைக் கூட ஏற்றுக் கொள்கிறான். ஆனால், சங்கி என்று அழைக்கப்படுவதை அவ்வளவு வேகமாய் மறுக்கிறான். சங்கி என்பதை வசைச்சொல்லாக பயன்படுத்தாதே என்று கூறியவனே தன்னை இப்போது சங்கி என்றவுடன் மறுக்கிறான் என்றால் அறிவுத் தெளிவு பெற்று விட்டானோ? ஆனாலும் செம தில்லான ஆளுயா நீரு. நான் முதல்ல பிரம்மன், சிவன், விந்து அது இதுனு புராண ஆபாசத்தையெல்லாம் தொடர்புபடுத்தி சொல்ற அந்த ஊர் எதுவா...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 8)
உணர்ச்சிவசப்படுபவர்கள் உணரவும் மாட்டார்கள். உணர்த்தவும் மாட்டார்கள். இந்தக் கோவிந்தசாமியும் இவ்வாறுதான். குரங்கு கிளைகளை இறுகப் பற்றி விளையாடியும் தாவியும் கொண்டிருப்பதுபோல, அவளை மனத்தளவிலும் புத்தியிலும் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறான் கோவிந்தசாமி. ஒருவரைப் பிறர் எளிதாக மாற்ற இயலாது. ‘தான் மாற வேண்டும்’ என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே மாறுவர். கோவிந்தசாமி அவளைத் தான் விரும்பம் அரசியல் இயக்கத்தின்...
கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 7)
சாகரிகா கோவிந்தசாமியின் மீது அன்பில்லாதவள். உண்மை அன்பை உணரத் தெரியாதவள். கணவன் மீது வெறுப்பை மட்டுமே செலுத்தியவள். முற்போக்குச் சிந்தனையுடையவள் என்று நாம் எண்ணிய வேளையில் இல்லை, அவன் மீது அன்பு செலுத்தினாள் என்பதை இந்த அத்தியாயத்தின் வழி அறிய முடிகிறது. அவளுக்கு அவனது தெளிவான சிந்தனையற்ற கொள்கையின் மீதும் தன்னை உணரத் தெரியாத உணர்வின் மீதும் வெறுப்புக்கொண்டு, தனக்கு ஏற்ற துணை அவன் அல்லன் என்று...
கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 8)
கடற்கரையில் நடக்கும் மாநாட்டு விவரணக்குறிப்புகள் மிகச் சிறப்பு. வழக்கமாகவே உலகம்முழுக்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மாநாடுகள் இவ்வாறுதான் நடைபெறுகின்றன. இந்த அத்யாயத்தில் ‘தேசிய நீரோட்டம்’ என்ற சொல் எழுத்தாளரால் மிகப் பெருத்தமாகக் கையாளப்பட்டுள்ளது. தன் முன்னாள் கணவரைப் பற்றி எழுதப்படும் கட்டுரைத்தொடரில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளும் வஞ்சம் நிறைந்தவை. வஞ்சத்திலிருந்தே தன்னுடைய முன்னாள் கணவரின்...