Blog

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 2)

குளிரை வெறுக்கும் வெயிலை ரசிக்கும் வெப்பத்தில் மட்டுமே வாழும் இடத்தைச் சேர்ந்தவனான சூனியனை தண்டனைக்காக சனி கிரகத்துக்கு அழைத்துச் செல்லும் போது அந்த உடலெல்லாம் நகம் கொண்ட அருவருப்பான பிசாசுகளோடு நமது பயணம் தொடர்கிறது. ஒரு 3D திரைப்படம் பார்ப்பதை போல் உணர்வெழுகிறது. பனிக்கத்தி சூனியனின் உடலில் இறங்கும்போது நம் முதுகில் ஓட்டை விழுவது போன்றதொரு பிரமை. “பேசுவதற்கு முன்னால் சிறிது...

கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 1)

முதல் பத்தியைப் படிக்கையில் பழக்கதோசத்தில், தவறுதலாக ஏதேனும் கணித பேரறிஞர்கள் எழுதிய மகா கணித சூத்திர புத்தகத்தை கையில் எடுத்து விட்டோமோவென்று குழம்பிவிட்டேன். சூனியம், பூரணம் என்றெல்லாம் வார்த்தைகள் வரவும். பின் நிறுத்தி ஒவ்வொரு வார்த்தையாய் மீண்டும் இரண்டாம் முறை வாசித்தபின் தான் வார்த்தைகளின் அர்த்தம் விளங்கத் தொடங்கியது. அடுத்தடுத்த பத்திகளில் சூனியன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது நான்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 3)

ஒவ்வொரு அத்தியாயத்திலும் அன்றாட அரசியலின் பிம்பங்களை பார்க்க முடிகிறது. ஒரு இக்கட்டான சூழலில், அதிகார மயக்கத்தில் இருக்கும் நியாயாதிபதிகளிடம் பிரச்சனையை புரிய வைப்பதே கஷ்டமாகி விடுகிறது. நேரம் அதிகமில்லாததால், நம் சூனியனின் தீர்வை அனைவரும் ஆமோதிக்கின்றனர். “யோசனை தூரம்” – இந்த புனைவுச் சொற்கள் என்னை வெகுவாய் கவர்ந்தது. (எப்படியெல்லாம் யோசிக்கிறார்!!) நீ என்ன தவறு செய்தாய் என்று...

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 14)

சூனியர்களுக்கு பெயர் இல்லை என் கையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கதையில் வந்தால் எப்படி நினைவில் வைத்திருப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நல்லவேளை ‘வாசகர்களை குழப்புவதற்காக பாரா செய்த சதி’ அது என்பதை சூனியன் வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. உடலும் மனமும் உணர்வும் இல்லாத சூனியனைக் கூட இந்த நீல நகரம் உணர்ச்ச மயமாக்கி விடுகின்றது என்றால் பூமியில் இருந்து வந்த மனிதர்கள் எம்மாத்திரம்...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 5)

‘ஓடிப் போனவளைத் தேடிப் போகாதே’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. கோவிந்த சாமிக்கு இந்தப் பழமொழி தெரியாது என்று நினைக்கிறேன். சிதறுதேங்காயைப் போல ஒருவருக்குத் தன் வாழ்க்கை சிதறடிக்கப்படும்போது அவன் நினைவுகள் திசைக்கு ஒன்றாகச் சென்று விழுவது இயற்கையே. அவற்றை அவன் பொறுக்கியெடுத்து, தொகுத்துக்கொள்வதற்குள் இன்னும் கொஞ்சம் வாழ்க்கையை இழந்துவிடுவான். கோவிந்த சாமியின் வாழ்க்கையை ஊழ் சிதறுதேங்காயாக்கிவிட்டது...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 4)

கைதி தப்பிப்பது என்பது ஓர் அகவிடுதலைக்கு நிகரானது. அதைச் ‘சூனியன்’ அடைந்துவிட்டான். அவன் அடையும் புதிய இடம் புதிராகவே இருக்கிறது. ஒருவரைப் பற்றி ரகசியமாக அறிய வேண்டுமெனில் அவருடைய நாட்குறிப்பைப் படிக்கலாம்; அவரை மறைமுகமாகப் பின்தொடரலாம்; அவருக்கு நெருக்கமாகவராக நடிக்கலாம். ஆனால், ஒருவரின் மண்டையைத் திறந்து புத்தகத்தைப் படிப்பது போலப் படித்து அறிவது என்பது அற்புதமான கற்பனை. எழுத்தாளர் உயர்திரு. பா...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 3)

எளிய மனிதர்களுக்கும் பேராற்றல் மிக்கவர்களுக்கும் ஒரே மனநிலைதான் இருக்கிறது. ஆனால், அதில் ஒரேயொரு வேறுபாடு உள்ளது. எளியவர்கள் தம்மை யாரும் பொருட்படுத்தவில்லையே என்பதைத் தன் மனத்துக்குக் கூறிக்கொண்டே இருப்பர். பேராற்றல் மிக்கவர்கள் அதனைப் பல வகையில் மக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருப்பர். ‘சூனியன்’ எளியன். ஆனால், அவனுக்குள் ஓர் வலியன் உறைந்திருக்கிறான். அந்த வலியன்தான் இப்படிப் புலம்பித் தவிக்கிறான்...

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 2)

‘அழுதழுது புரண்டாலும் அவள் தான் பிள்ளை பெற வேணும்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. ‘குற்றவாளி’ என உறுதிப்படுத்தப் பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்த குற்றத்துக்கு ஏற்ப தண்டனையை அடைந்தே தீரவேண்டும். குற்றவாளி தன்னளவில் குற்றமற்றவராக இருந்தாலும் நீதியின் கண்களுக்கு அவர் குற்றவாளி எனத் தெரிந்தால், அவர் குற்றவாளிதான். குற்றமற்றவர்களின் குரல் எப்போதும் நீதிமன்றத்துக்கு வெளியேதான் ஒலித்துக் கொண்டிருக்கிறது...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!