Blog

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 1)

வியர்க்கிறதே என்பதற்காக மூளையைத் திறந்துவைக்க முடியுமா? முடியும். யதார்த்த வாழ்விலிருந்து ஓர் அடியாவது மேலெழ விரும்பாத மானுடர் யாரேனும் இருக்கிறார்களா? ‘இந்தச் சலிப்புற்ற உலகியலிருந்து விலகி, சில மணிநேரங்களாவது மகத்தான உலகில் சிறிது நேரம் நடந்து திரும்பலாமே!’ என்று விழையாத மானுட உள்ளத்தைப் பார்க்கவே முடியாது. இரவிலோ பகலிலோ பேருந்தின் நெடும் பயணம் விரக்தியைத் தந்தால் சன்னல்வழியாகத் தெரிவதைப்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 2)

சூனிய உலக அதிகார அரசியலில் சிக்குண்டு, இரண்டு வருடங்களாக நிலக்கடலை ஓட்டினுள் சிறைப்பட்டுக் கிடந்த நம் சூனியனுக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அவனை கொல்வதற்கு, துரோகிகளின் எலும்புகளைக் கொண்டு செய்யப்பட்ட கப்பலில் இரண்டாம் அத்தியாயப் பயணம் தொடங்குகிறது. சட்டென நெப்போலியப் போரில் பிரெஞ்சு சிறைக்கைதிகளை எலும்புகளாலான கப்பலில் கொண்டு சென்ற வரலாறு நினைவுக்கு வந்து சென்றது. எலும்புகளின்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 1)

புனைவுக் கதைகளின் மீது எப்போதுமே எனக்கு ஒரு விவரிக்க முடியாத பிணைப்பு உண்டு. இந்த தொடரில், எழுத்தாளர் அவரின் கற்பனை உலகத்தை நம்மிடம் அழகாக கடத்தி இருக்கிறார். இது தான் கதையின் முதல் வெற்றி. காட்சிகள் கண் முன் விரிந்து படர்ந்து நம்மை உள்ளிழுத்து கொள்கிறது. சூனியனின் மீது ஒரு விதப் பற்று உருவாகி விட்டது. எப்படியும் அவன் தண்டனையில் இருந்து தப்பித்து விட வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்கிறது...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 13)

ஷில்பாவுக்காக காத்திருப்பதா சாகரிகாவைத் தேடிப்போவதா என அவன் குழம்புகையில் நகரவாசி ஒருவன் மூலமாக முகக்கொட்டகை பற்றி அறிகிறான். விதவிதமான முகங்கள் அங்கே கிடைக்கும் அதைவைத்து அவனது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முனைகிறான். அங்கே உள்ள முகங்கள் எல்லாம் அங்கே வாழ்ந்து இறந்துபோன மனிதர்களின் முகமாம். நாம் மாஸ்க் எடுத்து முகத்தில் பொருத்திக் கொள்வது போல நாம் தேர்ந்தெடுக்கும் முகத்தை நம் தலையில் சுலபமாக...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 12)

தன்னைப் பற்றி இவ்வளவு அபாண்டமாக எழுதும் அளவுக்கு தான் செய்த தவறு குறித்து சாகரிகாவிடம் கேட்க விரும்புவதால் தன்னை அவளிடம் அழைத்துச் செல்ல முடியுமா? சூனியனிடம் பறி கொடுத்திருந்த தன் நிழலை மீட்டுத் தர முடியுமா? என்ற இரு கோரிக்கைகளை கோவிந்தசாமி சாகரிகாவின் தோழி ஷில்பாவிடம் வைக்கிறான். அவளோ, ”இரண்டில் ஒன்று” என்கிறாள். கோவிந்தசாமியோ ”இரண்டுமே” என்கிறான்! கடைசியில் ஷில்பாவே ஜெயிக்கிறாள். சாகரிகாவை...

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 13)

கண்ணெதிரே தெரிகின்ற அனைத்து அசாத்தியங்களையும் மீறி அதீத தன்னம்பிக்கையுடன் தன் மனைவியை சமாதானப்படுத்த கோவிந்தசாமி எடுக்கின்ற பிரயத்தனங்களை வாசித்தால் எரிச்சல் தான் வருகிறது. எதற்கு இத்தனை பரிதவிப்பு? சில மனிதர்களின் அசட்டுப் பிடிவாதங்களை நீல நகரத்தின் சுதந்திரம் கூட மாற்ற முடியாது போலும். ( சரி, இருக்கட்டும். கதை நகர வேண்டுமே?). ஆனால் அவனுக்கு முகக்கொட்டகையில் கிடைக்கின்ற தெரிவுகள் பூமியில்...

கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 12)

சூனியன் கோவிந்தசாமியின் நிழலை கொண்டே இயங்குகிறான். நிழலுக்கு குடியுரிமையும் பெற்று விட்டான். கோவிந்தசாமியோ தன் நிழலிழந்து ஷில்பா எனும் சாகரிகாவின் வழக்குறைஞரிடம் தன் தரப்பை கூறுகிறான். இதனிடையே நீண்ட நேரமாகியும் சூனியன் திரும்பாதது அவனது ஐயத்துக்கு இடமளிக்கிறது. இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் சூனியன் கோவிந்தசாமியின் நிழலோடு சென்று சாகரிகாவை சந்தித்து திரும்புவேனென்றவன் அவனது அனுமதியில்லாமல்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 12)

ஒரு பக்கம் கோவிந்தசாமியின் நிழல் அந்த நகரத்தின் குடியுரிமையை சூனியனின் மூலமாக பெற்று சாகரிகாவின் பொய்களுக்கு பதிலளிக்க தயாராகிறது. இன்னொரு பக்கம் கோவிந்தசாமி சாகரிகாவின் தோழி மூலமாக நகரத்தின் குடியுரிமையை பெற்று அவன் பக்கத்து நியாயங்களைச் சொல்ல விழைகிறான். சாகரிகாவின் பக்கத்தில் அவளது பதிவுகள் மூலமாக ஒரு ஃப்ளாஷ்பேக்கை நமக்கு சொல்லிக் கொண்டிருந்த சூனியன் அதைத் தொடரப்போகிறான். கதை சொல்லிக்...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!