கோவிந்தசாமி என்னதான் சாகரிகாவை ஆத்மார்த்தமாகக் காதலித்தாலும், சாகரிகாவைப் பொருத்தவரை கோவிந்தசாமி ஒரு மூடன் அவர்களின் காதல் வெறும் குப்பை. இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது- பெண்கள் ஒன்றை வேண்டாமென்று வெறுத்து விட்டார்களென்றால் அவர்களுக்கு அது வேண்டாம். அது ஓர் இரகசியமற்ற நகரம். இரகசியமற்ற மக்கள் வாழுமிடம். அங்கு எவர் வீட்டில் என்ன நடந்தாலும் அதனை வெண்பலகையில் எழுதிவிட வேண்டும். அதை மற்றவர்கள்...
கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 6)
இங்கே நீல நகரத்தின் அமைப்பை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நடுவில் மூன்றே சாலைகளால் இணைக்கப்பட்டுருக்கும் நகரம். அனைத்து வீடுகளும் ஒன்றுபோல் அமைக்கப்பட்டிருந்தன. நிச்சயமாக அது பூமியோ அதன் பகுதியோ இல்லை. ஆனால் சூனிய உலகத்திலோ வீடுகள் வித்தியாசமானது. யாளிகள் டிராகன்கள் எலும்புகளால் சுவரை அலங்கரிக்க வேண்டுமானால் எவ்வளவு பெரிதாக வீட்டைக் கட்ட வேண்டும்.. ஆனால் சிறை மட்டும்...
கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 10)
இந்த அத்தியாயத்தில் பாரா அவர்கள் கடந்தகால அரசியலை தொடர்பு படுத்தி எழுதியுள்ளார். பாரா எந்தளவுக்கு வரலாறும், தத்துவமும் நேர்த்தியாக பேசுகிறாரோ, அதே அளவுக்கு அவருக்கு பகடித்தன்மையும் கைக்கூடிவரும். இந்த அத்தியாயத்திலும் அவர் மேற்கொண்டிருக்கும் சில நையாண்டித்தனம் அலாதியானவை. //என்ன பெரிய உண்மை, என்ன பெரிய யதார்த்தம்! உண்மைகளுக்கு நிறம் இருப்பதில்லை. ருசி இருப்பதில்லை. உண்மையுடன் கூடிய ஒரு வாழ்வில்...
கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 8)
தலைப்பைப் படித்தவுடன் இதில் ஏதோ விஷமத்தனம் இருக்கிறது என்பது பிடிபட, படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. தனது நிழலைப்பிரிந்த கோவிந்தசாமி உணவைத் தேடி அலையும் பொழுது ,நீல நகரத்தின் மொழி புரியாமல், தனக்கு அந்நியமான நீல நகரத்தில் இந்தியை தேசிய மொழியாக்கிட முடியவில்லையே எனத் தவிக்கும் இடத்தில் .. அவன் முட்டாள் மட்டுமல்ல விவகாரமானவனும் கூட என்பது தெளிவாகிறது. இதுவரை புரியாமல் இருந்த பல விஷயங்கள் இந்த...
கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 7)
நீல நகரில் சூனியனும், கோவிந்தசாமியின் நிழலும் முற்றிலும் நீல நகர வாசி யாக மாறியிருந்த சாகரிகாவை கண்டதும் வியக்கின்றனர் . சாகரிகாவின் உருவத்தில் ஏற்பட்டிருந்த மாற்றம் குறித்தும், தனக்கு அவள் மேல் இருக்கும் காதல் குறித்தும் அவளிடத்தில் புலம்பும் கோவிந்தசாமியின் நிழல் சாகரிகாவின் உருவத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறது. சாகரிகா சற்றும் அலட்டிக்கொள்ளாமல் தனக்கு அவன் மேல்...
கபடவேடதாரி – சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 10)
அதிசயம் தான். ஆனால் சொல்லாமலிருக்க இயலவில்லை. உண்மையாகவே கோவிந்தசாமியின் நிழல், அவனை விட புத்திசாலித்தனமாகவும் கொஞ்சம் தன்மானம் உள்ளதாகவும் இருக்கிறது. இல்லையேல் சாகரிகா கோவிந்தசாமியுடன் வாழமாட்டாள் என்பதையும் இனி அவளை அம்பலப்படுத்துவதே சிறப்பு என்பதையும் உணர்ந்திருக்குமா?! ஆனால் சூனியன் சில Protocol வைத்திருக்கிறானே. நிழலின் நிஜத்தை உணர மீண்டும் அவன் கபாலத்தை மீண்டும் ஊடுருவ வேண்டும்...
கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 10)
Fake ID, கபட வேடதாரி இரண்டுக்கும் இடையில் இந்த நாவலுக்கு வேறு ஒரு பெயர் வைக்க எண்ணி நண்பர்களுடன் கலந்தாலோசித்ததைப்பற்றி பாரா முன்பொரு முறை எழுதி இருந்தார். என்னால் அப்போது இரண்டு பெயர்களை அனுமானிக்க முடிந்த போதிலும் அவற்றுள் ஒன்றை உறுதிப்படுத்த முடியவில்லை. ஒன்பது அத்தியாயங்கள் வாசிக்கும் வரை சூனியன் தான் கபட வேடதாரி ஆக இருக்குமோ என்றும் அவருக்கும் நான் யோசித்து வைத்திருந்தவருக்கும் எந்தத்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 10)
முதல் அத்தியாயம் தொடங்கும்போதே சூனியனின் ஃப்ளாஷ்பேக்கை தெரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டுவிட்டது. அதை பத்தாவது அத்தியாயத்தில்தான் சொல்லவேண்டும் என முடிவுசெய்து வைத்திருந்தார் போலிருக்கிறது. சூனியனுக்கு ஒரு டாஸ்க். அந்த டாஸ்க் கடவுள் மற்றும் மனித குலத்துக்கு எதிரானது. நமக்கு மிகவும் தெரிந்த ஒரு இடத்தில் அந்த டாஸ்க் முடிக்கப்பட திட்டமிடப்படுகிறது. அந்த டாஸ்க்கைப் பற்றி அவன் சொல்லச் சொல்ல அதைப்...