Blog

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 7)

நெற்றியில் குறியோடு நீலநகரவாசியாகவே மாறிவிட்ட சாகரிகாவைப் பார்த்து கோவிந்தசாமியின் நிழல் பதறுகிறது. சாகரிகாவோ அதை பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை. அவளிடம் தன் காதலை நினைவூட்டி கோவிந்தசாமியின் நிழல் கெஞ்சி கூத்தாடுகிறது. ”இதென்ன கோலம். வா. நம் உலகுக்குச் செல்லலாம்” என மன்றாடுகிறது. எதுவும் அவளிடம் எடுபடவில்லை. ”நான் புறப்படும் போது அதை ஒரு பாலிதீன் கவரில் கட்டி குப்பைக் கூடையில் போட்டு...

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 6)

எதார்த்தக் களத்தில் இருந்து மீண்டும் ஒரு வினோத உலகத்துக்கு கதை செல்கின்றது. நீல நகரத்துக்கும் சூனிய கிரகத்துக்கும் தான் எவ்வளவு வசீகரமான வேறுபாடுகள். நீல நகரம் என்பதை அறிந்து அல்லது புரிந்து கொண்டது ஒரு Spoiler என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு புதிர் விளையாட்டின் முடிச்சுகளைப் போல ஒவ்வொரு அத்தியாயமும் படிப்படியாக அதை நோக்கி வாசகனை அழைத்துச் செல்வது அத்தனை சுவாரசியமாக இருக்கிறது. மனிதர்களைப்...

கபடவேடதாரி – ஷாலினி கணேசன் மதிப்புரை (அத்தியாயம் 3)

பெரும்பாலும் வாய்ப்பை நோக்கியே நாம் நகர்ந்து கொண்டிருப்போம் அல்லது வெறுமனே அத்தக்க சமயத்துக்காக காத்திருப்போம். ஆனால் சிலரே வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வார்கள். அப்பிடிதான் இக்கதையில் அந்த சூனியனும் தனக்காக வாய்ப்பை தானே ஏற்படுத்தி கொள்கிறான். அவன் நல்லவனா கெட்டவனா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த மனோதிடம் எனக்கு பிடித்திருந்தது. இறக்கும் தருவாயிலும் தைரியமாக பதில் சொல்லும் அந்த தோரணை...

ஒரு வீடு ஒரு மனிதன் சில உயிர்கள்

நான் குடியிருக்கும் வளாகத்தில் வசிக்கும் புறாக்களைக் குறித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன். இங்கே வசிக்கும் மனிதர்களைவிட இவை எனக்கு மிகவும் பரிச்சயமானவை. எந்தளவுக்கு என்றால், அவை தரையில் நிற்கும்போது அருகே சென்றால்கூடப் பறந்து செல்லாத அளவுக்கு. எப்படி என்னைப் போன்ற ஒரு நல்லவனை அவை பார்த்திருக்க முடியாதோ, அதே போலத்தான் அவற்றை என் அளவுக்கு இன்னொருவர் கவனித்திருக்க முடியாது என்பதும். புறாக்களுக்கு ஒரு...

கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 5)

தான் ஒரு மூடன் என்பதை உணர்ந்திருந்த கோவிந்தசாமியின் மண்டை ஓட்டிற்குள் இறங்கிய சூனியனுக்கு உயிர்பிழைத்த மகிழ்ச்சி. கருத்தளவில் சிறிதும் பொருந்தாத கோவிந்தசாமி- சாகரிகா திருமணம் 17 நாட்களில் கேள்விக்குறியாகிறது.நவநாகரீகயுவதியான, ஒழுக்க நெறிகள் அற்ற சாகரிகாவை திருப்திப்படுத்த கோவிந்தசாமி பல வழிகளில் முயலுகிறான். கருணையில் பிறந்த காதல் காணாமல் போக, சாகரிகாவால் சொல்லப்படும் சங்கி எனப்படும் சொல்...

தேறாதிருக்கச் செய்தல்

சொன்னால் விரோதம். ஆயினும் சொல்லும் பாரம்பரியம் உள்ளபடியால் சொல்லிவிடுகிறேன். எத்தனைப் பேர் வாயில் விழுந்து புரளப் போகிறேனோ. இந்த கொரோனாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். எவ்வளவு தடை உத்தரவு வேண்டுமானாலும் போடுங்கள். ஆனால் தேர்வுகளை ரத்து செய்வது, தள்ளிப் போடுவது, பார்த்து எழுதலாம் என்று அறிவிப்பது – இதெல்லாம் மாணவர்களின் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைப்பது தவிர வேறல்ல. டிஜிட்டல்...

300 சொற்கள்

சில காலமாக ஒரு செயல்திட்டம் போல வைத்துக்கொண்டு தினமும் இரண்டு கதைகளாவது எழுதுகிறேன். எவ்வளவு வேலை இருந்தாலும் சரி. என்ன பிரச்னை இருந்தாலும் சரி. எதை நிறுத்தினாலும் இதை நிறுத்துவதில்லை. முதலில் இப்படிக் கட்டாயமாக எழுத வேண்டும் என்ற விதி சிறிது கஷ்டமாக இருந்தது. விரைவில் அது ஒரு மனப் பழக்கமாகி, எழுதாவிட்டால் Uneasy ஆகிவிடுகிறேன். இன்னொன்று, இது யாருக்காகவும், எந்தப் பத்திரிகைக்காகவும் எழுதவில்லை...

கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 4)

முதல் மூன்று அத்தியாயங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது இந்த அத்தியாயம். மாயாஜால உலகில் இருந்து யதார்த்த உலகிற்கு நம்மை அழைத்து வருகிறார் ஆசிரியர். மரண தண்டணையில் இருந்து தப்பித்த சூனியன் நீல நகரத்தில் சுய சிந்தனையற்ற மற்றும் சுயபச்சாதாபம் மிகுந்த மனிதனான கோவிந்தசாமியின் மண்டை ஓட்டிற்குள் நுழைகிறான். கோவிந்தசாமியின் இளமைப் பருவம் அத்தனை சுவாரஸ்யமானதாக இல்லை. கோவிந்தசாமி தன் ஏழாவது வயதில்...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!