Blog

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 6)

திரைப்படங்களில் அடுத்து வரப்போகும் காட்சிகளுக்குக் கூடுதல் பலம் சேர்ப்பதற்காக பருந்துப் பார்வையில் அவ்விடத்தை, மக்களைக் காட்டுவது வழக்கம். அப்படியாக நீலநகரம், அந்நகரவாசிகள் பற்றிய முன்னோட்டமே “இடப்பெயர்ச்சி”! கோவிந்தசாமியின் நிழலோடு சூனியன் நகருக்குள் நுழைகிறான். சுங்கச்சாவடி, காவலர்கள், கார்கள் என்ற கடந்த அத்தியாய நகர்வுகளை வைத்து நாம் நீலநகரம் பற்றிய முன்முடிபு ஏதும் வைத்திருந்தால் அதை தூக்கி...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 6)

கடந்த அத்தியாயத்தின் இறுதியில் அந்த நீலநகரத்தின் உள்ளே நுழைவதற்கான அனுமதி பெற்று உள்ளே வரும் கோவிந்தசாமியுடன் சூனியன் உரையாடுகிறான். ஒவ்வொரு அத்தியாயத்திலும் கோ.சாமி எவ்வளவு முட்டாள் என்பதை ஆசிரியர் மீண்டும் மீண்டும் நிறுவுகிறார். இந்தச் சூனியனோ லேசுபட்டவன் அல்ல. என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை. சூன்யன் உதவியுடன் தன் நிழலாக அந்த நகரத்தை சுற்றி வரும் கோ.சாமி அங்கு ஒரு மாய எதார்த்த உலகை காண்கிறான்...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 5)

கோவிந்தசாமியை ஏன் தனக்கு பிடித்திருந்தது என்பதற்கு சூனியன் சொன்ன காரணம் எனக்கு பிடித்திருந்தது. அவன் ஒரு மூடன் என்றாலும் அதை அறியாதவன் இல்லை. அவன் அதை அறிந்திருக்கிறான். ஆனால் அதை அவனால் விடமுடியவில்லை. வேறு ஏதாவது சொல்லி அவனைத் திட்டியருந்தால் கூட அவன் அதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டான். அவனை சங்கி என்று அவள் திட்டியதை அவனால் ஏற்க முடியவில்லை. ஏனென்றால் அவனுக்கு அதில் பெருமையில்லை. இதை...

கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 3)

வாய்ப்பு கிடைக்குமென காத்திருக்காமல் தனக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், கிடைத்த வாய்ப்புகளை விடாமல் பயன்படுத்திக் கொள்பவர்களே புத்திசாலிகள். இங்கு புத்திசாலியான சூனியன் கிடைத்த வாய்ப்பை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, மரணதண்டனையிலிருந்து தப்பிக்க நினைக்கிறான். நியாயாதிபதிகளை வாக்கு சாதுரியத்தால், தன் கருத்துக்கு இணங்க வைத்து, பூகம்பச்சங்கை தன்னோடு இணைத்துக் கட்டச்செய்து, மிதக்கும் நீல நகரத்தை தாக்கி...

அடுத்தவர் சொல்

தனது முதல் சிறுகதையை எழுதி, ஒரு போட்டிக்கு அனுப்பிப் பரிசு பெற்ற ஒரு சகோதரி சில நாள்களுக்கு முன்னர் சந்திக்க வந்திருந்தார். திட்டங்களிலோ, மொழியிலோ, வெளிப்பாட்டிலோ அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஓரளவு வாசிப்பு இருந்தது. தொடர்ந்து படித்துக்கொண்டும் இருந்தார். இருப்பினும் எழுதுவதில் சிறு தயக்கம் இருப்பதாகச் சொன்னார். படித்துவிட்டு யார் என்ன சொல்வார்களோ என்கிற அச்சம் இருந்தது புரிந்தது...

கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 2)

சூனியர்களின் உலகில், கடவுளின் படைப்பில் எஞ்சி நிற்கும் எலும்புகள் மதிப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. திருமணம், மரணம் என எல்லா முக்கியமான நிகழ்வுகளுக்கும் புகழ்பெற்றவர்களின் எலும்புகளால் மரியாதை செய்யப்படுகிறது. இங்கு துரோகியென முத்திரை குத்தப்பட்ட சூனியன், தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு துரோகிகளின் எலும்புகளாலான கப்பலில் அழைத்துச் செல்லப்படுவதை தனக்கான அவமரியாதையாக கருதுகிறான். தன் மீது...

கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 5)

கோவிந்தசாமி ஏன் நீல நிற நகருக்கு வந்தான்? அவன் தலைக்குள் இறங்கிய சூனியன் அவன் மூலம் தன் உலகத்தை எப்படி ஆட்டுவிக்கப் போகிறான்? என்ற இரு கேள்விகள் கடந்த நான்கு அத்தியாயங்களையும் வாசித்த பின் தொக்கி நின்றது. முதல் கேள்விக்கான விடையாக “கோவிந்தசாமியின் வம்ச சரித்திரம்” விரிகிறது. தான் விரும்பிய படி தன் காதல் மனைவி இல்லை என்ற போதும் அதற்காக அவள் மீது கோபம் கொள்ளாத மூடனாக கோவிந்தசாமி இருக்கிறான்...

கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 5)

“சாமி” யை தன் பெயரிலிருந்து கூட விலக்க மனம் வராத கோவிந்தசாமி “சங்கி”என்ற வார்த்தையை ஏசும் வார்த்தையாக ஏற்க மறுத்தது வியப்பேதும் இல்லை. லஷ்மணசாமியில் ஆரம்பித்த சாமி கோவிந்தசாமியுடன் முடிந்து விடுமா? மூடன் என்றாலும் ஏன் சாகரிகா காதலித்து மணம் புரிந்தான்? பரிதாப உணர்வில் வந்த காதலா? எதுவாகிலும் சாகரிகாவை விட கோவிந்தசாமியின் காதல் மேலோங்கி இருக்கிறது. தன் கோபத்தை கூட...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!