சூனியக்காரன், தனது மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக நாடு கடத்தப்படுகிறான். அவன் பயணிக்கும் அந்த கப்பலானது எலும்புக்கூடுகளால் செய்யப்பட்டது. அந்த நிலையிலும் சூனியக்காரன் மார்தட்டி சொல்கிறான் உயிர் மரித்து போனால் எஞ்சுவது எலும்பு மட்டுமே ஆனால் அதுகூட எங்களுக்கு இல்லையென்பதால் நாங்கள் கடவுளையே மிஞ்சிவிட்டோம் என்கிற கர்வத்துடன் அந்த மிதக்கும் கப்பலில் பயணிக்கிறான். ஆனால் அவன் எந்த தருணத்திலும் தப்பிக்க...
கபடவேடதாரி – கவிதா. கே மதிப்புரை (அத்தியாயம் 3)
சென்ற அத்தியாயத்தில் நாயகனைக் காப்பாற்றவே அவனை மரண தண்டனைக்கு அழைத்துச் செல்லும் கப்பலைத் தகர்க்கும் வண்ணம் எங்கிருந்தோ கிளம்பியது ஒரு நீல நகரம். தோராயமாக அது பூமியைச் சேர்ந்ததாக இருக்கலாம். பூமியிலிருந்து பெயர்ந்த நகரம் தட்ப வெப்பம், கதிர்வீச்சு, ஈர்ப்புவிசை, வளிமண்டலம் அனைத்தையும் தாண்டி விண்வெளியில் எங்ஙனம் பிரவேசிக்க இயலும்? அதிலிருக்கும் மனிதர்களின் உடல் வெடித்துசிதறாமல் எப்படி இருக்க...
கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 3)
சாகசமின்றி தப்பித்தல் இயலாது. தப்பிக்கும் முயற்சியில் உயிர் பிரிதலும் ஒரு வித தப்பித்தலே. ஆயுதம் தந்த வலியும் வார்த்தை தந்த வேதனையும் , அவமானம் தந்த ஆக்ரோஷமும் பெற்ற சூனியன் தப்பிக்க தன்னையே ஆயுதமாக்கிக்கொள்வது வேறுவழியற்ற வாய்ப்பு. பிசாசுகடைத்த பூகம்பச்சங்கு தாங்கி, நீலநகரத்தின் மீது மோத ஒப்புக்கொள்வது தப்ப வாய்ப்புள்ள ஒரே முயற்சி. சுயநலமென்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, சூனியர்களுக்கும்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 3)
அவன் தப்பிக்கவேண்டும் என முடிவெடுத்து விட்டான். அதைச் செயல்படுத்தியே தீருவது என்னும் தீவிரம் அவனை அங்கு நடக்கும் சூழல்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் தூண்டுகிறது. அவன் காய்களை நகர்த்துகிறான். தன்னம்பிக்கை மிகுந்தவன் அவன். அவன் நல்லவனா கெட்டவனா என்பது இரண்டாம் பட்சம். அந்த அபார தன்னம்பிக்கைதான் அவனை அந்த ஆபத்திலிருந்து காக்கப் போகிறது. அவன் என்ன அவ்வளவு நல்லவனா என்னும் கேள்விக்கும் அவன் என்ன...
கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 2)
மனிதன் செயல்களை செய்யவே படைக்கப்பட்டிருப்பவன். அவனளவில் அவன் செயல்கள் சரியானதே என நினைத்திருப்பவன். அவன் செயல்களால் சிலசமயம் யாராகிலும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். ஆனால் மனிதமனம் தன் செய்கையால் தான் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என ஏற்க மறுக்கும். மனிதனுக்கே இப்படி எனில் பாதிப்பை தருவதையே கடமையாக கொண்ட சூனியனின் செயலில் குற்றம் கூறினால்,..? சூனியனின் உள்ளக்கொதிப்பை விளக்கும் ஆசிரியர்...
கபடவேடதாரி – எஸ். சீனிவாச ராகவன் மதிப்புரை (அத்தியாயம் 1)
கபடவேடதாரி எனும் தலைப்பை அறிவிக்கையில் Mr.சம்பத், நான் அவனில்லை போல் ஏமாற்றுக்காரனின் கதையாயிருக்கும் என நினைத்தேன். ஏமாந்து போனேன். சூனியனிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அதுவே ஒரு வித்தியாசமெனில், சூனியனுக்கு விசாரணை, தண்டனை என நினைத்தற்கரிய கோணத்தில் கதை ஆரம்பத்திலேயே வேகமெடுக்கிறது. ஆங்கில திரைப்படங்களில், கதைகளில் Parallel universe என்ற concept சுவாரசியமாக இருக்கும். அது போன்ற புது உலகை நம்...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 2)
தப்பிப்பதற்கான முதல்படி தப்பிக்கவேண்டும் என்ற எண்ணம்தான். அந்த எண்ணம் அவனுக்கு கடந்த அத்தியாயத்திலேயே உதித்துவிட்டது. இப்போது அவன் எப்படி தப்பிக்கப் போகிறான்? அவன் கிடக்கட்டும். வாழ்வின் எத்தனையோ சூழல்களில் இருந்து நாம் தப்பிக்க நினைத்திருப்போம். நாம் ஏன் ஒரு சூழலில் இருந்து தப்பிக்க நினைக்கிறோம்? அந்த சூழல் நமக்கு உவப்பில்லாதபோது. அப்படித்தானே? அப்படி நாம் தப்பிக்க நினைத்த அந்த உவப்பில்லாத சூழலை...
கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 1)
முதல் அத்தியாயத்தில் என்னைப்படிக்கத் தூண்டாத எந்தவொரு நாவலையும் நான் முழுவதுமாய் படித்ததில்லை, அது யார் எழுதிய நாவலாக இருந்தாலும், யார் பரிந்துரைத்தாலும் சரி. அப்படி நான் படிக்காமல் சேகரித்து வைத்திருக்கும் எத்தனையோ புத்தகங்கள் அதற்கு ஆதாரமாய் இன்னும் இருக்கின்றன. கபடவேடதாரியின் முதல் அத்தியாயம் எனக்கு சொன்ன சேதி என்னவெனில் இது என்னால் முழுமையாகப் படிக்கப்படப்போகிற நாவலாய் இருக்கப்போகிறது என்பதே...