ஒரு ஊரில் அப்துல் கலாம் என்றொரு பின்னாள் விஞ்ஞானி படித்துக்கொண்டிருந்தார். அந்த ஊரில் ஒரு மலை இருந்தது. அது பச்சை மலை எனப்பட்டது. பச்சை மலையின் உச்சியில் இரவு நேரத்தில் தோன்றும் நிலாவைக் காட்டி, “ஒரு நாள் அங்கே நாம் குடி போக முடியும்” என்று அப்துல் கலாம் சொன்னார். அதெப்படி அவ்வளவு உயரம் போக முடியும் என்று ஊர் மக்கள் சந்தேகப்பட்டுக் கேட்டனர். அதற்கு அப்துல் கலாம், “ முடியும், உச்சத்தைக் கனவில்...
ஸ்பேர் பார்ட் (கதை)
வாழ்க்கை மிகவும் போரடித்தது. வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று எண்ணி, தற்கொலை செய்துகொண்டான். உடலில் இருந்து கிளம்பிய கணத்தில் சிறிது வலித்தது. விடுபட்டவுடன் எல்லாம் சரியாகிவிட்டது. இப்போது அவனால் நடப்பதுடன்கூட மிதக்கவும் முடிந்தது. முகம், கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல், அவை இல்லாததைக் குறித்து எண்ணிப் பார்க்க மட்டும் முடிவது வினோதமாக இருந்தது. முன்பெல்லாம் ஆறு மாதங்கள் புதரைப் போல முடி...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 20
பெரியதொரு மழையைப் போல எனக்கு மகிழ்ச்சி தருவது வேறில்லை. ஆனால் பெரிய மழையை மொத்தமாக இதுவரை ஏழெட்டு முறைதான் பார்த்திருப்பேன். கிராமங்களில் இருந்து முதல் முறை வருபவர்களுக்கு நகரம் எந்தளவு பிரமிப்பையும் பரவசத்தையும் தருமோ, அதைப் போலத்தான் மழை எனக்கு. புயல் மையம் கொண்டிருப்பதாகச் செய்தியில் சொல்லிவிட்டாலே மனத்துக்குள் மேகம் திரளத் தொடங்கிவிடும். அனைத்தையும் மறந்தவிட்டு மழையைக் குறித்து யோசிக்க...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 19
முப்பது வருடங்களுக்கு முன்னர் பத்திரிகைப் பணியில் இருந்தபோது இரவில் சென்னை என்றொரு பத்தித் தொடருக்கு யோசனை வந்தது. (பிறகு இது பல பத்திரிகைகளில் பலநூறு விதமாக வெளிவந்து மக்களுக்கு அலுத்தே விட்டது.) சுமார் மூன்று மாத இடைவெளியில் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளை இரவு நேரங்களில் திருஞானம் என்ற புகைப்படக்காரருடன் திரும்பத் திரும்பச் சுற்றி வந்தேன். இரவுப் பொழுதுகளில் குற்றங்கள் அதிகம் நடைபெறும்;...
வாழும் கலை (சிறுகதை)
எப்படியும் வேலை போய்விடும் என்று எதிர்பார்த்தான். கொத்தாக இருபது இருபத்தைந்து பேரைத் தூக்கப் போகிறார்கள் என்று தகவல் பரவ ஆரம்பித்திருந்தது. நிர்வாகம் கூப்பிட்டுச் சொல்வதற்கு முன்னால் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. இன்னோர் இடத்துக்குப் போய் உட்காராமல் இருக்கப் போவதில்லை. ஆனாலும் இடைப்பட்ட நாள்கள் சிறிது சிரமமாகத்தான் இருக்கும். கையிருப்பு அதிகமில்லை. செலவே செய்ய முடியாது...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 18
மேற்கு மாம்பலத்தைக் குறித்து இன்னும் சிறிது சொல்லலாம். நினைவு தெரிந்த நாளாக இந்தப் பகுதியை ‘முதியவர்களின் பேட்டை’யாகத்தான் மனத்துக்குள் உருவகம் செய்து வைத்திருக்கிறேன். அது ஏன் அப்படித் தோன்றுகிறது என்று எனக்குப் புரிந்ததில்லை. மாம்பலத்தின் எந்த வீதிக்குள் நுழைந்தாலும் எதிர்ப்படுபவர்கள் குறைந்தது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருப்பார்கள். கடைகளில், கிளினிக்குகளில், கோயில்களில்...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 17
மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆரிய கௌடா சாலையைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அங்குள்ள அயோத்தியா மண்டபம் மிகவும் புகழ்பெற்ற இடம். ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். பிராந்தியத்துக்கு யாராவது சைவப் பெரியவர்கள், மகான்கள், துறவிகள் வருகை தந்தால் கண்டிப்பாக அயோத்தியா மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி இல்லாமல் இராது. அப்படி யாரும் வராத நாள்களில் சொற்பொழிவுகள், பாட்டுக் கச்சேரி, பஜனை என்று ஏதாவது ஒன்று எப்போதும்...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 16
நுங்கம்பாக்கம் அபெக்ஸ் ப்ளாசாவின் தரையடித் தளத்தில் இருந்த லேண்ட் மார்க் புத்தக அங்காடி ஒருநாள் இழுத்து மூடப்படும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. இருந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்த எவ்வளவோ நிறுவனங்கள் உலகெங்கும் உண்டு. ஒவ்வொரு தனி மனிதனும் தனது பிரத்தியேகமான மகிழ்ச்சிக்கென்று சிலவற்றைப் போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பதும் எதிர்பாராத நேரத்தில் அது கைவிட்டுப் போவதும் இயல்பானவைதாம். ஆனால்...