Tagஉணவு

கிறுக்குப் பயல்

எப்படி முயற்சி செய்தாலும் சில கிறுக்குத்தனங்களை என்னால் விட முடிவதேயில்லை. எழுத்தாளர்கள் கொஞ்சம் முன்னப்பின்னதான் இருப்பார்கள் என்று முத்திரை குத்திவிட முடியாது. மிகவும் நேர்த்தியாக வாழும் பல எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். என்னுடைய கிறுக்குத்தனங்களுக்கான பழியை மரபணுவின் மீது போட்டுவிடலாமா என்றால் அதுவும் முடிவதில்லை. வம்சத்தில் என்னைத் தவிர பிறர் சரியாகத்தான் இருக்கிறார்கள். நான் மட்டும்தான்...

புளியோதரை செய்வது எப்படி?

புளியோதரை உருவாக்கம் என்பது புளிக் காய்ச்சல் என்னும் கலைப் பணியில் தொடங்குகிறது. இந்தப் புளிக் காய்ச்சல் என்பது சாராயக் காய்ச்சல் போன்றே வளமான கலை மனத்தையும் கடும் பணி நேர்த்தியையும் ஒருங்கே கோருவது.

ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 28

சென்னை போன்ற பெரிய நகரங்களில் விலைவாசி உயர்வை உணவகங்களைக் கொண்டு கண்டறிய இயலாது. விலைவாசி அவ்வளவாக உயராத காலங்களிலும் சிறிய அளவிலாவது விலை வித்தியாசங்களைக் காட்டிக்கொண்டே இருப்பார்கள். எனவே விலைவாசி உயர்வின்போது உணவுப் பொருள்களின் விலையேற்றம் அவ்வளவாக அதிர்ச்சி தராது என்பது இதன் பின்னணியில் உள்ள உளவியல். காய்கறிகளின் விலை – குறிப்பாக வெங்காய விலை உயரும்போது நாளிதழ்களில் அது செய்தியாக வரும்...

இந்த வருடம் என்ன செய்தேன்?

* மிகக் குறைவான திரைப்படங்களையே பார்த்திருக்கிறேன். மனத்தில் நிற்பது சுப்ரமணியபுரம் மட்டும். தமிழல்லாத வகையில் Gloomy Sunday. * கிழக்கு சேர்த்து, படித்தது மொத்தம் 149 புத்தகங்கள். குறிப்பிடத் தோன்றுபவை: ஆன்மிகத்தில் பொருந்தாத ஒரு மறைஞானியின் சுயசரிதம் (கண்ணதாசன் பதிப்பகம்), பிரம்ம சூத்திரம் (விளக்கம்: அ. சுகவனேச்வரன்), சுதந்தர வேட்கை (அடேல் பாலசிங்கம்), ஜாமிஉத் திர்மிதி, அங்கே இப்ப என்ன நேரம் (அ...

ஒரு வேதாளம் சாத்துக்குடி மரம் ஏறுகிறது

சரியாக ஒரு மண்டல காலம். என்னுடைய டயட் பயிற்சிகளை நிறுத்திவைத்திருந்தேன். தொண்ணூறிலிருந்து எழுபத்திமூன்று கிலோவுக்கு வந்து சேர்ந்ததைக் கொண்டாடலாம் என்று தேவதையோ சாத்தானோ காதோரம் வந்து சொன்னது. அது நடந்தது ஜூன் 13. சில உண்மைக் காரணங்களும் உண்டு. முதலாவது, சோர்வு. இந்தப் பக்கங்களில் முன்னரே எழுதியிருக்கிறேன். டயட் இருப்பது என்பது ஒரு வேலை. பிற வேலைகள் மிகும்போது இந்த வேலை அடிபடும். அலுவலகப் பணிகள்...

பல்லே பல்லே…

நாகராஜன் ருசித்துப் பார்த்து, அறிமுகப்படுத்திவைக்க, நேற்று செனடாஃப் சாலையில் உள்ள தாபா எக்ஸ்பிரஸில் மதிய உணவுக்காகச் சென்றேன். சந்தேகமில்லாமல் அடிமையாக்குகிறது. இன்றைக்கு மதியம் மீண்டும். பல வருடங்களுக்கு முன்னர், திரைப்பட விழாக்களுக்காகப் புது தில்லி செல்லும்போது சாலையோரத் தள்ளுவண்டி தாபாக்களில் சாப்பிட்டிருக்கிறேன். ஆகிருதியான சர்தார்ஜிக்கள் ஒரு வேள்வி போல ரொட்டிகளைச் சுட்டுப் போட்டுக்கொண்டே...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds