கிழக்கிலிருந்து விலகிய பிறகு நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று கேட்டு அநேகமாக தினசரி இரண்டு மின்னஞ்சல்களாவது வருகின்றன. இணையத்தில் ஏன் முன்போல் எழுதுவதில்லை என்று விசாரித்தும்.
இது பதிலளிக்கும் நேரம்.
ஓர் அறிவிப்பு
சில தவிர்க்க முடியாத காரணங்களால் / வேலைகளால் இணையத்திலிருந்து சில தினங்கள் விடுமுறை எடுத்துக்கொள்கிறேன். இந்தத் தளம், ட்விட்டர், ஃபேஸ்புக் என நான் இயங்கும் அல்லது என் இருப்பைச் சொல்லும் இடங்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். அதிகபட்சம் ஒரு மண்டல காலம். குறைந்தபட்சம் இருபது நாள்கள்.
பிறகு சந்திப்போம்.
பாரா-ட்டு
ஆண்டுதோறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில், சிறந்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாராட்டி விருதளித்து கௌரவிப்பது வழக்கம். இந்த ஆண்டு அந்தச் சிறப்பை எனக்கு அளித்திருக்கிறார்கள். ஜூலை 8, 2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு கண்காட்சி வளாகத்தில் உள்ள லிக்னைட் ஹாலில் இந்தப் பாராட்டு விழா நடைபெறவிருக்கிறது. [ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.]...
சில சொகுசு ஏற்பாடுகள்
வாசகர்களின் வசதி அல்லது இம்சைக்காக இந்தத் தளத்தில் சில புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீங்களே சற்று அப்படி இப்படிக் கண்ணை நகர்த்தினால் தென்பட்டுவிடும் என்றாலும் எடுத்துச் சொல்லவேண்டியது என் கடமை.
ஓர் [அபாய] அறிவிப்பு
நாட்டில் இன்னும் கதை படிக்கிற நல்லவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. தமிழ் சமூகம் தனது வாசிப்பு விருப்பத்தைக் கதையல்லாத எழுத்துப் பக்கம் திருப்பிக்கொண்டு பல காலமாகிவிட்டது என்பது என் கருத்து. இதைப் பலமுறை இந்தப் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கிறேன். புனைவு என்பது இப்போது பெரிய மற்றும் சிறிய திரைகளில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிற...
மொட்டை மாடியில் ஞாநி
மார்ச் 31ம் தேதி – வியாழக்கிழமை அன்று மாலை 6.30க்கு மணி கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் ஞாநி பேசுகிறார். இன்றைய கூட்டணி நிலவரமும் அரசியல் நிலவரமும் தேர்தலைப் புறக்கணிப்பது சரியா? ஓ போடுவது எப்படி? வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அங்கிருந்தே வாக்களிக்க முடியுமா? தேர்தலில் மீடியாவின் இன்றைய பங்கு என்ன? மேலும் பல விஷயங்கள் குறித்து ஞாநி உரையாடுகிறார். பின்னர் அவருடன்...
கிழக்கு பதிப்பகத்தில் வேலை காலி
எங்கள் அலுவலகத்தில் கீழ்க்கண்ட இரண்டு பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கிறோம். 1. ஷோரூம் ஒருங்கிணைப்பாளர் (Showroom coordinator) வேலை: தமிழகம் முழுவதிலும் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் நேரடி விற்பனை மையங்கள், ஃபிரான்ச்சைஸி கடைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தல்; புதிய நேரடி மையங்களை நிறுவுதல். தகுதி: எதோ ஒரு பட்டப்படிப்பு. தமிழ் நன்றாகப் படிக்கவும் தமிழில் சரளமாக...
இந்த வருடம் என்ன செய்தேன்?
பல வருடங்களாக எழுதிக்கொண்டிருந்த காஷ்மீர், அயோத்தி தொடர்பான அலகாபாத் உயர்ந்தீமன்றத் தீர்ப்புக்குப் பிறகு எழுதிய ஆர்.எஸ்.எஸ் – இரு நூல்களும் வருகிற ஜனவரி மாதம் வெளியாகின்றன. இந்த இரு புத்தகங்களைப் பற்றியுமே தனித்தனிக் குறிப்புகள் எழுத நினைத்திருந்தேன். நேரமின்மையால் தள்ளிப் போகிறது. விரைவில் எழுதிவிடப் பார்க்கிறேன். இது, நூல்கள் வெளிவருவதை உறுதி செய்யும் அறிவிப்பு மட்டுமே. இவை தவிர, நான்...