Categoryபொலிக! பொலிக!

துறையும் மொழியும்

அன்புள்ள பாரா, டாலர் தேசம், மாயவலை, ஆயில் ரேகை போன்ற புத்தகங்கள் வழியேதான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். இதைப் போன்ற கனமான விஷயங்களைத் தமிழில் எளிமையாக எழுதவும் ஒரு ஆள் இருக்கிறாரே என்று உங்களுடைய ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் வியந்து போயிருக்கிறேன். அன்சைஸ் படித்தபோது, இந்த மனிதர் இப்படியும் சிரிக்க சிரிக்க எழுதுகிறாரே என்று வியப்படைந்தேன். டாலர் தேசத்திலேயே உங்கள் நக்கல் பரிச்சயம்...

தூவிய விதைகள் – அரவிந்தன் நீலகண்டன்

ஸ்ரீ ராமானுஜர், பாரதத்தின் ஆன்மிக – பண்பாட்டு நிலப் பரப்பில் ஒரு மாபெரும் சிகரம். அதன் முடியை நம் போன்ற எளியோரால் எண்ணியும் பார்க்க முடியாது. அப்படி எண்ணிப் பார்க்கும்தோறும் அது மாபெரும் வியப்பையும் அவர் அடிதொழும் பக்தி உணர்வையும் மட்டுமே உருவாக்கும். அவர் நம் தட்சிண பாரதத்தைச் சார்ந்தவர். அதுவும் தமிழ் மண்ணைச் சார்ந்தவர் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப் பெரிய பாக்கியம். ஆனால்...

பொலிக பொலிக முன்பதிவு – ஹரன் பிரசன்னா

பா.ராகவன் தினமலரில் தொடராக எழுதி பரவலான கவனிப்பைப் பெற்ற பொலிக பொலிக தொடர் தற்போது நூலாக வெளிவருகிறது. தினமும் பாரா எழுத எழுத அச்சுக்குச் செல்லும் முன்பே படித்த வெகு சிலருள் நானும் ஒருவன். இதை எழுதும் நாள்களில் பாரா ஒருவித மோன நிலையில் இருந்தார் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். சில நாள்களில் தொடர்ச்சியாக பத்து அத்தியாயங்கள் எழுதுவார். சில நாள் ஒன்றும் ஓடாது. திடீரென்று பித்துப் பிடித்தது...

மிஞ்சும் சொற்கள்

பொலிக பொலிக என்பது நம்மாழ்வாரின் மந்திரச் சொல். கி.பி. 1017ல் பிறக்கப் போகிற ராமானுஜருக்குக் கலி யுகம் தொடங்கியபோதே கட்டியம் கூறியவர் அவர். ராமானுஜர் பிறந்து ஆயிரம் ஆண்டுகள் இன்று நிறைவடைகின்றன. இன்றும் பொலிந்துகொண்டிருக்கிறது அந்த ஞானப்பெருஞ்சுடர். கடந்த நூற்றியெட்டு தினங்களாக இந்தத் தொடரின்மூலம் ராமானுஜரின் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்களைக் கொண்டு அவரை நெருங்கிப் புரிந்துகொள்ள ஒரு சிறு...

பொலிக! பொலிக! 108

எல்லாம் சரியாக உள்ளதாகவே பட்டது. சீடர்கள் அனைவரும் வந்து சேர்ந்துவிட்டிருந்தார்கள். அரங்க நகர்வாசிகள் அத்தனை பேரும் சேரன் மடத்தின் வெளியே குவிந்திருந்தார்கள். யாரும் விரும்பாத ஒரு சம்பவம் நடந்துவிடத்தான் போகிறதென்ற, அறிந்த துயரத்தின் சுவடுகள் அவர்கள் முகமெங்கும் நிறைந்திருந்தன. ‘சுவாமி, நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி உயிருடன் இருப்போம்? இருத்தல் என்பதே சுமையாகிவிடாதா?’ கண்ணீரோடு கேட்ட சீடர்களைக்...

பொலிக! பொலிக! 107

சமுத்திரத்தின் அடியாழத்தில் இருந்து எழுந்து மேலேறி வந்து உதித்த ஒரு பெரும் வெண்சங்கமேபோல் வீற்றிருந்தார் ராமானுஜர். முதுமையின் தளர்ச்சி மீறிய மினுமினுப்பொன்று எப்போதும் அவரிடம் உண்டு. கொஞ்சம் ஆஜானுபாகுவான தோற்றம்தான். அமர்ந்திருக்கும்போதும் நிற்பது போலத்தான் இருக்கும். சலிப்பின்றிச் சொற்பொழிவாற்றிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று கண்மூடி கணப் பொழுது எதிலோ லயித்து நின்றுவிடுகிற வழக்கம் உண்டு...

அடுத்தது…

எங்கள் தொலைக்காட்சி உலகில் ஒரு வழக்கமுண்டு. மதியம் சாப்பாடு ஆனதும் புரொடக்‌ஷன் ஆள் ஒருவர் சாப்பிட்ட அனைவருக்கும் ஒரு துண்டு கடலை பர்பி கொடுத்துக்கொண்டே போவார். இது அனைத்து யூனிட்டுகளிலும் நடக்கும். சினிமா உலகிலும் இவ்வழக்கம் இருக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் கண்டதில்லை. உண்ட வாய்க்கு வெற்றிலை பாக்குக்கு பதில் வேர்க்கடலை பர்பி. அந்த இனிப்பு வாயெங்கும் பரவி, அடித்தொண்டையை நனைத்து உள்ளே...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!