தமிழர்களால் மிக அதிகம் தூற்றப்பட்ட ஓர் உணவு உண்டென்றால் அது உப்புமாவாகத்தான் இருக்க முடியும். எனக்கு உப்புமா பிடிக்கும் என்று சொல்கிற பிரகஸ்பதிகள் ஒப்பீட்டளவில் வெகு சொற்பமே. உப்புமா மீதான இந்த துவேஷம் நமக்கு எப்படி உண்டானது என்று யோசித்துப் பார்த்தால் கிடைக்கும் பதில்களில் ஒரே ஒரு காரணம்தான் நியாயமானதாக இருக்கும். அது, உப்புமாவை வெகு சீக்கிரம் சமைத்துவிட முடியும் என்பதுதான்! உடனே கிடைத்துவிடும்...
ருசியியல் – 07
எனது ஸ்தூல சரீரத்தின் சுற்றளவைச் சற்றுக் குறைக்கலாம் என்று முடிவு செய்து அரிசிசார் உணவினங்களில் இருந்து கொழுப்புசார் ருசியினத்துக்கு மாறியதைச் சொன்னேன் அல்லவா? அப்போது எனக்கு அறிமுகமாகி நண்பரானவர், சவடன் பாலசுந்தரன். எனக்கு நிகரான கனபாடிகளாக இருந்தவர். நடந்து செல்கிற சமூகத்தின் ஊடாக உருண்டு செல்கிற உத்தமோத்தமர் குலம். ஏதோ ஒரு கட்டத்தில் விழித்தெழுந்து, கொழுப்பெடுத்தால் கொடியிடை அடையலாம் என்பதைத்...
ருசியியல் – 06
இன்றைக்குச் சற்றேறக்குறைய இருபது இருபத்தியிரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஒருமுறை உத்தியோக நிமித்தம் கௌஹாத்திக்குப் போகவேண்டியிருந்தது. அது ஒரு பொதுத்தேர்தல் சமயம். பத்திரிகையாள லட்சணத்துடன் நாலைந்து வடக்கத்தி மாகாணங்களில் சுற்றிவிட்டு, அப்படியே மேற்கு வங்கம் போய், அங்கிருந்து கௌஹாத்தி. நமக்கு வேலையெல்லாம் பிரமாதமில்லை. எங்கு போனாலும் போஜனம்தான் பிராணாவஸ்தை உண்டாக்கும். யோசித்துப் பார்த்தால்...
ருசியியல் – 05
காலப் பெருவெளியில் கணக்கற்ற ரக சாத்தியங்களை உள்ளடக்கிய சமையற்கலையில் எனக்கு முத்தான மூன்று பணிகள் மட்டும் செவ்வனே செய்ய வரும். அவையாவன: வெந்நீர் வைத்தல். பால் காய்ச்சுதல். மோர் தயாரித்தல். கொஞ்சம் மெனக்கெட்டு அரிசி களைந்து குக்கரில் வைத்துவிட முடியும் என்றே தோன்றுகிறது. ஆனால் ஒரு தம்ளர் அரிசிக்கு மூன்று தம்ளர் தண்ணீரா, இரண்டரைதானா என்பது குழப்பும். உதிர்சாத வகையறாக்களுக்கென்றால் தண்ணீரைச் சற்றுக்...
ருசியியல் – 04
எனக்கு தேக திடகாத்திரம் காட்டுவதில் இஷ்டம் கிடையாது. ஓடுவது, பஸ்கி எடுப்பது, கனம் தூக்குவது, ஜிம்முக்குச் சென்று ஜம்மென்று ஆவதெல்லாம் சொகுசு சௌகரியங்களுக்கு ஹானியுண்டாக்கும். அவை எப்பவுமே நமக்கு ஆகாத காரியம். உட்கார்ந்த இடத்தில் உலகத்தை ஜெயிக்க என்னென்ன பிரயத்தனங்கள் உண்டோ அதைச் செய்து பார்ப்பதில் ஆட்சேபணை இல்லை. எனது அதிகபட்ச ஆரோக்கியம் சார்ந்த எதிர்பார்ப்பு என்னவென்றால், குனிந்தால் நிமிர்ந்தால்...
ருசியியல் – 03
மதராசப்பட்டணத்தில் புயல் மழைப் புரட்சியெல்லாம் நடக்கும் என்று யாரும் சொப்பனத்தில்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத கடந்த ஜூன் மாதத்திலேயே ஒரு பெரும் புரட்சி இப்புண்ணிய க்ஷேத்திரத்தில் நிகழ்ந்தது. அது புயல் புரட்சியல்ல. எடைப் புரட்சி. அதுவும் ஒரு நபர் புரட்சி. புரட்சியாளர் வேறு யார்? எனது பிராண சிநேகிதன் பாராகவன்தான். அன்றைக்கு அவனுக்கு காஷ்மீரி புலாவ் மசக்கை. ஒரு தமிழ்ப் புலவனை காஷ்மீரப்...
ருசியியல் – 02
சென்ற வாரக் கந்தாயத்திலே குறிப்பிட்ட விரோதிக்ருது வருஷத்து ஜனனதாரி பாராகவன், எனக்கு ரொம்ப நெருக்கமான சினேகிதன். எவ்வளவு நெருக்கம் என்று கேட்பீர்களானால், வங்கியில் பணமெடுக்கப் போகிறவர் நிற்கிற வரிசை நெருக்கத்தைக் காட்டிலும் பெரிய நெருக்கடி நெருக்கம். நடை உடை பாவனையில் ஆரம்பித்து, எடை இடை சோதனை வரைக்கும் என்னை அப்படியே காப்பியடிப்பது அவன் வழக்கம். ரொம்ப முக்கியம், அவனும் ஒரு சிறந்த சாப்பாட்டு ராமன்...
ருசியியல் – 01
இருபதாம் நூற்றாண்டின் விரோதிக்ருது வருஷத்தில் நான் பிறந்தபோது ‘ஆநிரைகளும் தாவரங்களும் உன்னைப் பசியாதிருக்கச் செய்யக்கடவன’ என்று எம்பெருமான் என் காதில் மட்டும் விழும்படியாக ஹெட்ஃபோனுக்குள் சொன்னான். அன்றுமுதல் இன்றுவரை நான் மற்றொன்றினைப் பாராதவன். பாரத தேசத்தில் தாவர உணவாளிகளின் சதவீதம் முப்பதுக்கும் குறைவு. அதுவும் இந்த ஒரு கழுதை ஆயுட்கால வருஷங்களில் மேலும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துவிட்டதைப்...
ருசியியல்
தமிழ் ஹிந்து நாளிதழில் நாளை முதல் (03/12/16) ஒரு பத்தி தொடங்குகிறேன். ருசியியல் என்ற தலைப்பில். சமையலின் ருசியும் வாழ்வின் ருசியும் வேறுவேறல்ல என்பது என் தீர்மானம். அந்தந்த தினத்தின் மனநிலையே அன்றன்றைய சமையலின் ருசியைத் தீர்மானிக்கிறது என்பதைப் பன்னெடுங்காலமாக கவனித்து வந்திருக்கிறேன். வாழ்வையும் உணவையும் மனமார நேசிப்பவன் நான். தவிரவும் உண்ணும் விஷயத்தில் ஒரு முழு வட்டம் சுற்றி மீண்ட அனுபவம்...
நட!
நடப்பது என்பது எனக்கு என்றுமே நடக்கிற காரியமாக இருந்ததில்லை. அடிப்படையில் நான் ஒரு ப்யூரிஃபைட் சோம்பேறி. சைக்கிள் இருந்த காலத்தில் சைக்கிள், டூ வீலர் காலத்தில் டூ வீலர், கார்காலத்தில் கார். அது கந்தஹாருக்குப் போவதானாலும் சரி; கருவேப்பிலை வாங்கப் போவதானாலும் சரி. இந்த ‘போவது’ என்பதே எப்போதாவது நடப்பதுதான். பெரும்பாலும் இருந்த இடத்தில் எனக்குத் தேவையானதை வரவழைத்துக்கொள்வதற்கு...
கலோரிக் கங்கணம்
முன்னொரு காலத்தில் எடைக்குறைப்பில் ஒரு தீவிரவாத வேகத்துடன் ஈடுபட்டிருந்தேன். ஒரு வருட இடைவெளியில் பதினாறோ பதினேழோ கிலோக்களை இழக்கவும் செய்தேன். அது குறித்து அப்போது நிறைய எழுதியும் உள்ளேன். அதன்பின் அந்த ஆர்வம் வற்றிவிட்டது. ஏனெனில் எடைக் குறைப்பு முயற்சிகளும் உணவுக் கட்டுப்பாடும் தனியொரு அலுவலாக எனக்கு இருந்தன. கணிசமான நேரம், அதைவிட அதிக கவனத்தைக் கோரின. என் வாழ்க்கை முறை அதற்கு இடம் தரவில்லை...
டால்ஃபின் பாரா
வெற்றிகரமாக இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து நீச்சலுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். பழைய வேகம், குத்தாட்டங்கள் இப்போது முடிவதில்லை. ஆனால் குளத்தில் இருக்கும் ஒரு மணி நேரமும் கை கால் தொப்பைக்கு வேலை கொடுக்கிறேன் என்னும் மகிழ்ச்சி உள்ளது. நான் போகும் அதிகாலை ஆறு மணி செட்டில் நிறைய 4-10 வயதுக் குழந்தைகள் வருகிறார்கள். பயிற்சியின் முதல் நாலைந்து தினங்கள் உயிர் பயத்தில் ஆ ஊ என்று அலறியவர்கள் எல்லாம்...
கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு
சாப்பிடுகிற விஷயத்திலும், அதைப் பற்றி எழுதுகிற விஷயத்திலும் எனக்கு எத்தனைக் கொலைவெறி ஆர்வம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும். பத்திரிகைகளில் நான் இதுநாள் வரை எழுதிய அத்தனை தொடர்களிலும் பார்க்க, எனக்கு மிகவும் பிடித்தமானது உணவின் வரலாறுதான். ரசித்து ரசித்துத் தகவல் திரட்டி, ருசித்து ருசித்து எழுதிய தொடர் அது. இன்றும் கடிதம் எழுதும், போன் செய்து பேசும் பெரும்பாலான வாசகர்கள் ‘உ’வைக் குறிப்பிடாமல்...
ரொம்ப முக்கியம்.
[tabs slidertype=”left tabs”] [tabcontainer] [tabtext]அறிமுகம்[/tabtext] [tabtext]அதிகாரம் 1[/tabtext] [tabtext]அதிகாரம் 2[/tabtext] [tabtext]அதிகாரம் 3[/tabtext] [tabtext]அதிகாரம் 4[/tabtext] [/tabcontainer] [tabcontent] [tab]நேற்று ராத்திரி மெக்சிகன் பிஸ்ஸா சாப்பிட்டேன். ரொம்ப ருசியாக இருந்தது. இன்னும் இதற்கு சரியான சைட் டிஷ் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே என் கருத்து. மிளகுத் தூள்...
வெயிலோடு விளையாடு
சென்னையில் வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது. இம்மாதமும் அடுத்த மாதமும் எப்படிப் போகப்போகிறது என்றே தெரியவில்லை. இப்போதே ஆங்காங்கே வெயில் சார்ந்த வியாதிகள் தலையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இம்முறை சென்னைவாசிகள் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். நலம் வெளியீடுகளின் ஆசிரியர் ஆர். பார்த்தசாரதி, தமிழ் பேப்பரில் கத்திரிக் குறிப்புகள் எழுதியிருக்கிறார். இதெல்லாம்...
பிழியப் பிழிய ஒரு சோகக்கதை
முன்பெல்லாம் நான் திருமணங்களுக்குச் சென்றால் அங்கே சாப்பிட மாட்டேன். உறவினர் வீட்டு விசேஷங்களுக்குச் சென்றாலும் உணவு நிச்சயமாக ஹோட்டலில்தான். வீட்டில் இது பற்றிய விமரிசனங்கலும் திட்டுகளும் எப்போதும் இருக்கும். ஆனால் உண்மைக் காரணத்தை நான் ஒருபோதும் சொன்னதில்லை. இப்போது சொல்கிறேன். என்னால் கீழே உட்கார்ந்து சாப்பிட முடியாது. தொப்பை இடிக்கும், மூச்சு வாங்கும். திருமண மண்டபங்களில் டேபிள் சேர் போடத்...
மாமியும் சுண்டலும்
நவராத்திரி. கிடைத்த சான்ஸை விடாதே என்று உள்ளுணர்வு குரல் கொடுக்க, பச்சை கலர் பட்டுப்புடைவை அணிந்த குண்டு மாமி, பக்கத்து வீட்டு கொலு பொம்மைகளுக்கு எதிரே உட்கார்ந்து கர்ண கொடூரமாகப் பாட ஆரம்பிக்கிறார். ஆலாபனை, பல்லவி, அனு பல்லவி, சரணம், சிட்ட ஸ்வரம், கெட்ட ஸ்வரம் எல்லாம் போட்டு, தவறியும் சுதி சேராமல் அவர் பாடிக்கொண்டே போக, ஒரு மரியாதைக்குப் பாடுங்கள் என்று சொல்லிவிட்ட அந்தப் பாவப்பட்ட பக்கத்து...
உ
நண்பா, வணக்கம். காலம் கலிகாலம். நீயும் நானும் சந்திக்கும்போதெல்லாம் உலக அரசியல் பேசி உருப்படாமல் போவதே வழக்கமாக இருந்துவந்திருக்கிறது. இந்த முறை உனக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கிறேன். நாம் அரசியல் பேசப்போவதில்லை. அக்கப்போர்களுக்கு இம்முறை இடமில்லை. யார் யாரைக் கவிழ்த்தார்கள், எங்கே என்ன புரட்சி, ஒசாமா பின்லேடன் கிடைப்பாரா மாட்டாரா, மூன்றாம் உலக யுத்தம் வருமா வராதா, எண்ணெய் விலை இன்னும் ஏறுமா, இந்தப்...
அன்லிமிடெட் அநியாயம்
சாருவின் சாமியார் ராசி மாதிரி எனக்கு ஒரு சாப்பாட்டு ராசி இருக்கிறது போல் உள்ளது. எங்காவது புதிய உணவகங்களைக் கண்டுபிடித்துப் போய் சாப்பிட்டுப் பார்ப்பேன். நன்றாக உள்ளது என்பதற்குமேல் கொஞ்சம் கூடுதல் தரம் தெரியுமானால் நண்பர்களுக்கு சிபாரிசு செய்வேன். ரொம்பக் கவர்ந்துவிட்டால் இங்கே எழுதிவிடுவேன். நான் எழுதியதைப் படித்துவிட்டு நண்பர்கள் இடத்தைத் தேடி எங்கெங்கிருந்தோ வந்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டு...
ஸ்ரீபார்வதி அன்லிமிடெட்
பாரதியாருக்குப் பிடித்த மாதிரி சுற்றிலும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள். எனவே நிழல். கால் வைக்கும் இடமெல்லாம் புல்வெளி. புல்லுக்கு நடுவே பாத்தி கட்டி மூங்கில் கழிகள் நட்டு, கூம்பு வடிவ ஓலைக்கூரை. கொட்டிக்கொண்டு ஓடும் காற்று. நடுவே நீள டேபிள் போட்டு எதிரும் புதிருமாக நாற்காலிகள். இங்கொரு தொட்டில், அங்கொரு வட்டில். ‘சார் வாங்க! உக்காருங்க!’ என்று முகம் மலரக் கூப்பிடுகிறார் பணியாளர்...


